Yarl Forum
மைக்ரோவேவ் சக்கரை பொங்கல - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: மைக்ரோவேவ் சக்கரை பொங்கல (/showthread.php?tid=1394)



மைக்ரோவேவ் சக்கரை பொங்கல - தூயா - 01-14-2006

<b>மைக்ரோவேவ் சக்கரை பொங்கல்

தேவையான பொருட்கள்:

அரிசி 2 கப்
உடைத்த பாதி பயறு 1 கப்
தேங்காய் பால் 1 கப்
சக்கரை - உங்களுக்கு எவளவு வேணுமோ போடலாம்
நீர் - 4 கப்
நெய் - 3 டேபில் கரண்டி (நிறைய போட்ட பொங்கல் "பொங்கலோ பொங்கல்" ஆகிவிட வாய்ப்பு உண்டு)
ஏலக்காய் - 4 (தூளாக்கி போடுங்கோ, இல்லாடி கடிபடும், நல்லா இருக்கது)

1. பயறை சிறிது வறுத்து கொள்ளவும். சாப்பிட்டு பார்த்தால் மொறு மொறுப்பாக இருக்க வேண்டும்.

2. அரிசி,நீர்,பால் இவற்றை கலந்து மைக்கோவேவில் வைத்து மீடியத்தில் 10 நிமிடம் வரை வேக வைக்கவும்.

3. சிறிதளவு நீரில் சக்கரையை நன்றாக கரைக்கவும்.

4. சக்கரையையும் மிகுதி உள்ள பொருட்களையும் ஒன்றாக போட்டு கலக்கி 2 நிமிடத்துக்கு வைக்கவும்.

5. கையை சுடாமல் கவனமாக எடுத்து, பாத்திரத்தில் போடவும். வேறு யாரவது ஒருவருக்கு கொடுத்து நன்றாக இருந்தால் நீங்களும் சாப்பிடவும்.


இது தனியாக ஏதோ காரணத்தால் தங்கி இருந்து படிக்கு/வேலை பார்க்கும் சகோதரங்களுக்காக....

இனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்</b>


- shanmuhi - 01-14-2006

சரியான நேரத்தில்... பொங்கல் செய்முறை பலருக்கு பயன்படும்.
நன்றிகள்...


- மேகநாதன் - 01-14-2006

ஆகா....அசத்திட்டிங்க...

5வது செயன்முறை மிக்க பயனுடையது...

உங்கட நோக்கம் அருமை...


- MUGATHTHAR - 01-14-2006

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
வேறு யாரவது ஒருவருக்கு கொடுத்து நன்றாக இருந்தால் நீங்களும் சாப்பிடவும்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


எல்லாம் சரி பிள்ளை இண்டைக்கொண்டு பாத்து ஒருதரும் வீட்டுப்பக்கம் வாறாங்கள் இல்லை அப்ப மனுசிக்கு குடுத்துப் பாக்கட்டே...பிரச்சனை வராட்டிக்கு பிறகு சந்திக்கிறன்...


- தூயவன் - 01-14-2006

MUGATHTHAR Wrote:
Quote:வேறு யாரவது ஒருவருக்கு கொடுத்து நன்றாக இருந்தால் நீங்களும் சாப்பிடவும்.


எல்லாம் சரி பிள்ளை இண்டைக்கொண்டு பாத்து ஒருதரும் வீட்டுப்பக்கம் வாறாங்கள் இல்லை அப்ப மனுசிக்கு குடுத்துப் பாக்கட்டே...பிரச்சனை வராட்டிக்கு பிறகு சந்திக்கிறன்...

அது தான் எங்கள் கவலையே!! ஆக்கள் வராத நேரத்தில் தான் ஏதும் அடி விழுவது அதிகம் பாருங்கோ!!


- kuruvikal - 01-14-2006

சூரியனுக்கு நன்றி சொல்ல..அவன் கீழ் வானில் கதிர் பரப்பி வருமுன் முற்றத்தில் பொங்கியது ஒரு காலம்.. அப்புறம் வீட்டுக்குள் பொங்கியது ஒரு காலம்.. அப்புறம்.. மைக்குறோவேவில பொங்கிறது இந்தக் காலம்... மொத்தத்தில் பொங்கல் என்பது உண்பதற்கே...வேறெதற்கு..??!

பொங்கல் சமையல் குறிப்பா நாளை கொட்டல்களில் தினமும் சூரியனுக்கு...சா மனிதர்களுக்கு படைக்கப்பட்டாலும் (அதுதான் உண்மையே) ஆச்சரியப்படுவதற்கில்லை..! நன்றி தூயா பாப்ஸ்..உங்கள் சமையல் குறிப்புக்கு.. இது வெறும் சமையல் குறிப்பல்ல..பல விடயங்களை குறிப்பாலும் உணர்த்திச் செல்கிறது..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- eezhanation - 01-14-2006

இதை நேற்றே தந்திருந்தால் நாங்களும் பொங்கல் கொண்டாடி இருந்திருப்போமே...பரவாயில்லை இருக்கவே இருக்கு மாட்டுப்பொங்கல் கொண்டாடிட வேண்டியதுதான்.


- தூயா - 01-15-2006

என்ன சமைச்சு சாப்பிட்டதில ஒருத்தரையும் காணம் போல <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


- RaMa - 01-15-2006

ஆகா தூயா நிஐமாகவே முயற்சி செய்தேன். அரிசை 10 நிமிடங்களுக்கு பதிலாக 15நிமிடங்கள் வரை வைத்தால் தான் அரிசி நன்கு வேகுது தூயா...
நன்றி செய்முறைக்கு