01-14-2006, 02:19 AM
ஐயிரண்டு திங்களா அங்கம்எலாம் நொந்துபெற்றுப்
பையல்என்ற போதே பரிந்துதெடுத்துச் - செய்யஇரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்து..
இப்படித்தான் எமது வாழ்க்கை ஆரம்பிக்கின்றது என்று பட்டினத்தடிகள் பாடினார். எங்கெங்கோ பிறந்து, எங்கெங்கோ அலைந்து, தமக்கென ஒரு வாழ்வை அமைத்து, புலத்திலே குழந்தைகளைப் பெற்று வளர்க்கும்போது எத்தனையோ சிரமங்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது என்பது யாவரும் அறிந்த உண்மை. அதிவேகமாக வளர்ந்துவரும் இந்தக் கணினி உலகிலே எம்மிளைஞர்கள் இந்த இணைய ஊடகத்தினால் நன்மையடைகின்றார்களா? அல்லது சீரழிந்துபோகின்றார்களா? என்ற இந்த பட்டிமன்றத்திலே இதுவரை பத்துப்பேர் தமது கருத்துக்களை வைத்துள்ளனர். தமிழினியும் தனது கருத்துக்களை அவ்வப்போது அழகாக வைத்துள்ளார். கணினியோடு அமர நேரமின்மையால் அவற்றைப் பிரதி பண்ணியபோது அவை சுமார் 58 பக்கங்களை எட்டின. அவற்றிலிருந்து சிறிதளவாக என் கருத்தக்களைக் கூறுகின்றேன்.
சினிமாப்படங்ளையும், பாடல்களையும் சி.டி யில் அடிப்பதையும், சினிமா நடிக நடிகைகளின் நெளிகோல படங்களை பக்கம்பக்கமாக அலசுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் திரும்பத்திரும்ப வைக்கப்பட்டன. இளைஞர்களுக்கு இணையம் கல்விகற்க வாய்ப்பளிக்கின்றது என்ற வாதமும் வைக்கப்பட்டது.
எம்மை தங்கத்தாமரையில் ஏற்றிவைத்து தான் பித்தளைத் தாமரையில் வீற்றிருந்து தனது கருத்துக்களை அழகாக மொழிந்தார் (சிறுபிள்ளை) அனித்தா. தமிங்கிலத்தில் உரையாடுபவர்கள் புலத்தில் மட்டுமல்ல தமது தாய்நாடுகளான இந்தியா, சிங்கப்புூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் வருகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார். "இணையம் என்பதே உலககைச்சுருக்கி திரையில் விரிப்பது" என்று அழகாகக் கூறினார். யாகூ அரட்டை அறைகளில் நடக்கும் அவது}றுகளையும், அறிவுபுூர்வமான விடயங்களையும் இருபகுதியினரும் சுட்டிக்காட்டினர்.
பின்னர்வந்த பிரியசகி தனக்கே உரித்தான புன்சிரிப்புடன் பெற்றோரைக் குறைசொல்லவேண்டாம் என்றார். வேற்றுமொழித் தனங்களைப் பார்ப்பதன் விளைவுகளையும் சுட்டிக்காட்டினார். தாயகத்திலிருந்து வரும் இளைஞர்கள் நாட்டுப்பற்றுள்ள விடயங்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்றார். இறுதியாக சுனாமியை உதாரணம் காட்டிச்சென்றார்.
அடுத்துவந்த விஷ்ணு மனக்கட்டுப்பாட்டின் மகிமையை வியந்தார்.
எத்தனையோ சாதனைகளைப் படைக்க வழிசமைக்கும் "யத்தையும்" சேர்த்து "கொல்வது" எவ்வகையில் பொருத்தமாகும்? என்று கேட்டார். இங்கே தமிழைக்கொலை செய்ததனால் அவருடைய இந்தக் கருத்தும் கொலைசெய்யப்பட்டுவிட்டன. (தமிழைத் தவறாக எழுதவேண்டாம் என்று பலமுறை கூறியிருந்தேன்) ஆனால் பின்னர் சொல்லிய நல்ல கருத்துக்களால் தமது அணியை வலுப்பெறச்செய்தார்.
முகத்தார் மிக்க மரியாதையாக நீதி தவறாத பாண்டிய மன்னனுக்கு எம்மை ஒப்பிட்டார். உடனேயே நீதி தவறியதால் என்ன நடந்தது நினைவிருக்கும் என்று மிரட்டுவதுபோல்… மிரட்டுவதுபோல் அல்ல உண்மையாகவே மிரட்டினார். அவருக்கு நான் கூறுவது ஒன்றுதான் "பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது." தங்கள் அணியில் அனுபவசாலிகள் இருப்பதாயும், தலையிடி வாராமல் இருக்க உடற்பயிற்சி செய்யும்படியும், பெண்களின் சுதந்திரம் பற்றியும், இந்தியாவின் இணையத்தளம் பற்றியும், நண்பர் வீட்டில் 15 வயதுச்சிறுவனால் தனக்கேற்பட்ட அனுபவத்தையும் உதாரணம் காட்டி தனது அணிக்கு வலுச்சேர்க்கும் கருத்துக்களை ஆணித்தரமாக வைத்தார். ஒரு சந்தேகம், இவரின் வதிவிடமான சுன்னாகச் சந்தை பாலைவன நாட்டிலா இருக்கிறது?
சினேகிதி வந்தார் சுனாமியின் போதும், இனி வருங்காலங்களிலும் இளைஞர்களின் பங்களிப்புக்களையும், இணையத்தால் பெறும் நன்மைகளையும், ஆபாசக்காட்சிகளால் ஏற்படும் அவலங்களையும் விளக்கியதோடு, முன்னர் வந்தவர்களின் கருத்துக்களுக்கும் மற்றவர்களைப்போல் விளக்கமும் தந்தார்.
இவரையடுத்து வியாசன் வந்தார். கைகளில் வயலினைப் பிடித்தபடியே தன் கருத்துக்களையும் முன்வைத்தார். நடுவர்களாகிய எம்மை தன் இதயத்தாமரையில் வைத்திருப்பதாகக் கூறி தன் வறுமை நிலையினை சொல்லாமல் சொன்னார். வியாசன்! இதயம் விலைமதிப்பற்றது அல்லவா? புனைபெயரில் வருபவர்களைப்பற்றிக் குறிப்பிட்டார். "லங்காசிறி" இணையத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தோடு வேறும் பலவற்றையும் உதாரணம் காட்டிச்சென்றார். இறுதியில் தங்கள் கரும்புலிகள் தயார் நிலையில் இருக்கின்றார்கள் என்றும் பின்னால் வரும் பொங்கியெழும் மக்கள் படைக்கு வழிவிடுவதாகக் கூறிச்சென்றார்.
எல்லோருக்கும் கூறுவது ஒன்றே ஒன்றுதான் நடுவர்களாகிய நாங்கள் பகட்டிற்கு மயங்கவோ, பயமுறுத்தல்களுக்குப் பணியவோ மாட்டோம் என்பதுதான்.
பட்டிமன்றத்தை அலங்கரிக்க அடுத்து வந்தார் அஜீவன். கணினிகளைப் பற்றிய விளக்கத்துடன் தெரியாத சில விடயங்களையும் தெரியப்படுத்தினார். பலவற்றையும் பெரிதான எழுத்தில் எழுதியும் தந்தார். இறுதியில் இணையத்தைவிட சக்தி வாய்ந்த இன்னொரு தொழில்நுட்பம் வரும்வரையில் இணைய ஊடகமே உலகத்தை ஆழும். என்று அழகாகக்கூறிச்சென்றார்.
அடுத்து வந்த அருவி அசைந்துகொண்டிருக்கும் சிறுவனின் வாயைப்போல அழகாகத்தன் கருத்துக்களை முன்மொழிந்தார். எதிரணியினர் தலைப்பை மறந்து ஏதேதோ வெல்லாம் கூறுவதாகக்கூறினார். கணினியில் திருட்டு நடப்பதாகக்கூறினார். "பட்டிமன்றம் தொடர்வோமா?" என்ற பக்கத்தினையும் தொட்டுக்காட்டித் தன் கருத்தக்களை முன்வைத்தார்.
அனைவரது கருத்துக்களுக்கும் தமிழினி அழகாகப் பதில் எழுதியிருந்தார். களத்திலே வந்து கருத்துக்களை எழுதமுடியாமல் ஆனபோதிலும் எல்லாவற்றையும் இயலுமானவரை படித்தேன். "தமிழினி மகக் கஸ்டமான பணியை தனியே வெற்றிகரமாகச் செய்துள்ளார். செல்வமுத்து வந்துட்டார் இனி இன்னும் கலகலக்கும் இந்த பட்டி….மன்றம் அப்படித்தானே?" என்று அஜீவன் குறிப்பிட்டிருந்தார். கலகலக்குமோ என்னவோ ஆனால் நிச்சயம் கவலைகளை மறக்கவைக்கும் என்ற நம்பிக்கையோடுதான் இவற்றை எழுதினேன்.
இன்னமும் 17 பேர் தமது கருத்துக்களை முன்வைக்க இருப்பதனால் அடுத்து வருபவர்கள் சகோதரி இரசிகை முன்பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் ஒழுங்கில் வந்து தமது அணிக்கு உரம்சேர்க்கும் கருத்துக்களை காலம் தாழ்த்தாது முன்மொழியுமாறு தயவாக கேட்டுக்கொள்கிறேன்.
மதன், அடுத்த உங்கள் வரவைத்தான் அனைவரும் எதிர்பார்த்துககொண்டு இருக்கிறார்கள். வாருங்கள், வந்து உங்கள் அணிக்கு பலம் கூட்டுங்கள்.