01-13-2006, 08:14 AM
Quote:இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டியில் நீங்கள் இலங்கையை தான் ஆதரிப்பேன் என்று கூறினீர்களே... அதற்கு இந்த களத்தில் விளக்கம் கொடுங்கள் பார்க்கலாம்.....
[size=14]நிச்சயமாக, இந்தியாவுக்கும், இலங்கைக்குமிடையில் கிரிக்கெட் போட்டி நடந்தால் நான் இலங்க்கைக்குத் தான் ஆதரவளிப்பேன், இந்தியாவுக்கல்ல. இலங்கை தான் என்னுடைய நாடு, தமிழீழம் என்னுடைய தாயகம், ஆனால் <b>இலங்கையும் இன்னொரு நாடுமென்று போட்டி வரும் போது நான் 100% இலங்கையன்</b>.
எங்களுடைய முன்னோர்கள் தங்களை இலங்கையர் என்று தான் கருதினார்களே தவிர இந்தியரென்றல்ல. அவர்கள் "மாவலி சூழ் இலங்கை நாடெங்கள் நாடு" என்று பாடினார்களே தவிர, ஹிந்தி பொங்கும் இந்தியா எங்கள் நாடென்று அவர்கள் பாடவில்லை.
எங்களுக்கிடையில் ஆயிரம் சண்டைகளிருந்தாலும், இலங்கைத் தீவின் வளமும், காலநிலையும் எங்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் சில பொதுவான கலாச்சாரப் பழக்க வழக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.அதை நாம் மறக்க முடியாது. இந்தியாவின் மேல் எனக்குள்ள அன்பு வேங்கடமலையின் அடிவாரத்தில் மறைந்து விடும், அதற்கு அப்பாலுள்ள இந்தியாவில் எனக்கு எந்தவிதப் பற்றும் கிடையாது

