01-13-2006, 07:15 AM
Quote: <b>அதுபோல் என்னைக் குறிவைத்தே நீர் இப்பக்கத்தை ஆரம்பித்தீர் என்பது சில களநண்பர்கள் மூலம் நான் ஏற்கனவே அறிந்து விட்டேன்</b>.
[size=14]உங்களுடைய அந்தக் களநண்பர்கள் பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டி விடுவது போல்,ஈழத்தமிழர்களைப் பிரித்து அவர்கள் தங்களுக்கிடையில் சண்டை போடுவதை ரசிக்கும் ஓநாய்களாகக் கூட இருக்கலாம், ஏனென்றால் தற்ஸ்தமிழ்க் களத்தில் LUCKYLOOK உங்களின் பெயரைக் குறிப்பிட்டு நீங்கள் தான் அவர் என்றும், நீங்கள் இந்தியாவுக்குச் சார்பானவர் என்றும், TRICHY007 என்றவர் நீங்கள் இந்தியாவில் படித்திருக்க வேண்டும் அதனால் ஈழத்தை விட இந்தியாவில் பற்று அதிகம் இருக்கலாம் என்று சொல்லும் வரை உங்களின் பெயரைக் கூட நான் கேள்விப்பட்டதில்லை.
அதை விட அவர்கள் ஈழத்தமிழர்களைப் பற்றிச் சொல்வது எதையும் நான் நம்புவதுமில்லை. ஏனென்றால் அந்த தளத்திலுள்ளவர்களைப் பற்றி உங்களை விட எனக்கு நன்றாகத் தெரியும். அவர்களின் ஒவ்வொரு அசைவையும் என்னால் கணக்குப் போட முடியும், அவர்கள் சொல்வதெல்லாவற்றையும் நம்புமளவிற்கு நான் ஒன்றும் இளிச்சவாயனல்ல நான் ஒரு ஈழத்தமிழன்

