Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நெடுமாறன் ஜாமீனில் விடுதலை
#2
சென்னை, ஜன.7- தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 17 மாதமாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிறையில் உள்ள நெடுமாறனை பொடா வழக்கில் சென்னை ஐகோர்ட்டு ஜhமீனில் விடுதலை செய்து தீர்ப்பு கூறியது.

ஆனால் நெடுமாறன் மீது ஆலந்தூர் கோர்ட்டில் ஒரு வழக்கு இருந்ததால் அவர் விடுதலை ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. காவிய நாயகன் கிட்டு என்ற புத்தகத்தை நெடுமாறன் கடந்த 93-ம் ஆண்டு வெளியிட்டு இருந்தார். இதற் காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜhமீன் கேட்டு நெடுமாறன் ஆலந்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிபதி திடீரென விடுமுறையில் சென்றதால் இந்த வழக்கு செங்கல்பட்டு கோர்ட்டுக்குப் போனது.

ஜhமீன் அப்பீல்

இந்த ஜhமீன் மனுவை செங்கல்பட்டு செசன்சு கோர்ட்டு விசாhpத்து தள்ளு படி செய்தது. இதனால் நெடு மாறன் சார்பாக வக்கீல் என்.சந்திரசேகரன் சென்னை ஐகோர்ட்டில் ஜhமீன் அப்பீல் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஏ.கே.ராஜன் முன் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது நெடுமாறன் சார்பாக மூத்த வக்கீல் சந்துரு ஆஜ ரானார். நெடுமாறன் கடந்த 17 மாதமாக சிறையில் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்த வழக்கில் செங்கல்பட்டு கோர்ட்டில் ஜhமீனில் விட மறுக்கிறhர்கள். இது தவறhனது . ஆகவே இந்த வழக்கில் ஐகோர்ட்டு ஜhமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் வாதிட்டார்.

இதற்கு போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் அபுடுகுமார் எதிர்ப்பு தொpவித்தார். நெடுமாறனை ஜhமீனில் விடுதலை செய்யக் கூடாது அவர் மீதான வழக் கில் விரைவில் விசாரணை முடிய உள்ளது. எனவே ஜhமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

ஜhமீனில் விடுதலை

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜன், நெடுமாறனை நிபந்தனை ஜhமீனில் விடுதலை செய்து தீர்ப்பு கூறினார். நீதிபதி தனது உத்தரவில் கூறி இருப்பதாவது„-

கடந்த 17 மாதமாக நெடுமாறன் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆகவே இந்த வழக்கில் அவரை ஜhமீனில் விடுதலை செய்கிறேன். அவர் சென்னையில் தங்கி இருந்து போலீசார் தாக்கல் செய்த வழக்கு விசாரணையின்போது ஆஜராகி விசாரணைக்கு ஒதுத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

ஐகோர்ட்டு வழங்கிய ஜhமீன் உத்தரவை பெற்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அங்கிருந்து விடுதலை உத்தரவைப் பெற்று கடலு}ர் சிறையில் கொடுக்க வேண்டும். அதன்பிறகு தான் நெடுமாறன் விடுதலை செய்யப்படுவார். எனவே சிறை அதிகாhpகள் இன்று விடுதலை செய்ய மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. எனவே நாளை தான் நெடுமாறன் விடுதலையாக வாய்ப்பு உள்ளது.

நன்றி: தினகரன்்.com
[i][b]
!
Reply


Messages In This Thread
[No subject] - by சாமி - 01-06-2004, 09:53 PM
[No subject] - by Aalavanthan - 04-05-2004, 09:28 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)