01-06-2004, 09:51 PM
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? தரையிறங்கிய ஸ்பிhpட் 3 டி கலர் படங்களை அனுப்பியது
பாசடேனா, ஜன. 7- செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்பது குறித்து அங்கு தரையிறங்கிய ஸ்பிhpட் 3 டி கலர் படங்களை அனுப்பியது.
அமொpக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ஸ்பிhpட், சூப்பர் சானிட்டி ஆகிய 2 ரோபோ விண்கலங்களை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.
இதில் ஸ்பிhpட் விண்கலம் கடந்த 3-ந்தேதி செவ்வாய் கிரகத்தில் இறங்கியது. முதலில் செவ்வாய் கிரகம் பற்றிய கறுப்பு- வெள்ளை புகைபடங்களை பூமிக்கு அனுப்பியது. இப்போது 3 டி கலர் படங்களை பூமிக்கு அனுப்ப தொடங்கி உள்ளது.
மற்றெhரு விண்கலமான சூப்பர்சானிட்டி செவ்வாய் கிரகத்தின் மறுபக்கத்தில் வருகிற 25-ந்தேதி தரையிறங்க இருக்கிறது. இந்த 2 ரோபா விண் கலங்களும் தொடர்ந்து 3 மாதம் செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி நடத்த உள்ளன.
செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா?. அங்கு தண்ணீர் ஆதாரம் இருக்கிறதா என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட இருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் ராட்சத ஆறுகள் ஓடியிருக்க கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அப்படிப்பட்ட ஒரு ஆற்றுப்படுகை பள்ளத்தில் தான் ஸ்பிhpட் விண்கலம் தற் போது தரையிறங்கி உள்ளது.
இதற்கு முன்னர் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட 3 விண்கலங்கள் நடத்திய ஆராய்ச்சியில் அந்த கிரகத்தில் தண்ணீர் உருவாக தேவையான ஹெமிடைட் என்ற தனிமம் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
ஸ்பிhpட் ரோபா முதல் 3 வாரங்களுக்கு ஹெமிடைட் தனிமம் குறித்து ஆராய்ச்சி நடத்துகிறது. தொடர்ந்து அந்த கிரகத்தின் பூகோள அமைப்பு குறித்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. செவ்வாய் மலைகளை குடைந்து ஆராய்ச்சி நடத்தவும் ஸ்பிhpட் ரோபாவில் எந்திரங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இது குறித்து நேற்று நிருபர்களிடம் பேசிய நாசா விஞ்ஞானிகள், இந்த நாள் மிகவும் மகிழ்ச்சிகரமான நாள். செவ்வாயில் தரையிறங்கி உள்ள ஸ்பிhpட் ரோபா நல்ல நிலையில் இயங்குகிறது. எங்கள் பார்வையில், மனிதன் உயிர் வாழ தேவையான அனைத்து அம்சங்களும் செவ்வாய் கிர கத்தில் இருப்பதாகவே தோன்றுகிறது என்று கூறினர்.
விஞ்ஞானிகளின் கூற்று உண்மையாகுமா? என்பது ஸ்பிhpட், சூப்பர்சானிட்டி விண்கலங்களின் ஆராய்ச்சி முடிவில் தொpய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளுக்கு நாள் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் முன் னேற்றம் நிகழ்ந்து வருவது மனிதகுலத்தை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
நன்றி- http://www.dinakaran.com/

[i][b]
!
!