Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நெடுமாறன் ஜாமீனில் விடுதலை
#1
ஜனவரி 06, 2003

நெடுமாறன் ஜாமீனில் விடுதலை: சிறையில் இருந்து வெளியே வருகிறார்

சென்னை:

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனையடுத்து அவர் சிறையில் இருந்து வெளியாகிறார்.


முதலில் பொடா வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்தது.

ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன் காவியத் தலைவன் கிட்டு என்ற புலிகள் ஆதரவு புத்தகத்தை வெளியிட்டதற்காகப் போடப்பட்ட வழக்கு சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதில் ஜாமீன் கிடைக்காததால் நெடுமாறன் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை.

இந்த வழக்கை விசாரித்த ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதியை தமிழக அரசு திடீரென மாற்றியது. இதையடுத்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் நெடுமாறன் மனு தாக்கல் செய்தார். அங்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

இதையடுத்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு செய்தார். அங்கும் நேற்று ஜாமீன் மறுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் நெடுமாறன் மனு தாக்கல் செய்தார். இதை இன்று விசாரித்த நீதிபதி ராஜன், நெடுமாறனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

நெடுமாறனை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க முயன்ற தமிழக அரசின் கடும் முயற்சிகளையும் மீறி அவர் ஜாமீன் பெற்றுள்ளார்.

அவர் மீதுள்ள அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்து விட்டதால் இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் நெடுமாறன் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 17 மாத சிறை வாசத்திற்குப் பின் கடலூர் சிறையிலிருந்து நெடுமாறன் வெளியே வருகிறார்.
thatstamil.com
Reply


Messages In This Thread
நெடுமாறன் ஜாமீனில் வி - by yarl - 01-06-2004, 11:06 AM
[No subject] - by சாமி - 01-06-2004, 09:53 PM
[No subject] - by Aalavanthan - 04-05-2004, 09:28 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)