01-11-2006, 08:39 PM
ஜோசப் ஸ்டாலின் ஜோர்ஜியாவில் 1878ம் ஆண்டு பிறந்தார். கார்ள் மார்க்ஸ் மற்றும் லெனினின் சிந்தாந்தங்கள் மீது நம்பிக்கை கொண்ட இவர் சிறுவயது முதல் புரட்சிகளில் பங்குபற்றி பலமுறை சிறையில் அடைக்கப்பட்டு அதில் இருந்து தப்பியும் இருக்கின்றார். லெனின் மறைவை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய் இடத்தை கைப்பற்றி கொண்ட இவர் சோவியத் குடியரசை 1941 இலிருந்து 1953 இல் இறக்கும்வரை அதிகாரம் செய்தார். சோவியத் குடியரசை தொழில்துறை உள்ளிட்ட விடயங்களிலும் முன்னேற்றி ஒரு பலம்மிக்க நாடாக மாற்றிய பெருமை இவரையே சாரும். இவர் ஒரு சர்வாதிகாரி இவருக்கு எதிரான கருத்துக்களை கொண்ட லியான் டிராஸ்கி உள்ளிட்ட பலரை அழித்தார் என்று கூறுவோரும் உண்டு.
களத்தில் கம்யூனிச சிந்தாந்தங்களால் கவரப்பட்ட பலர் இருக்கின்றார்கள் என நினைக்கின்றேன். அவர்கள் இவரையும் இவரது ஆட்சியையும் குறித்த மேலதிக தகவல்களை ஏதும் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
களத்தில் கம்யூனிச சிந்தாந்தங்களால் கவரப்பட்ட பலர் இருக்கின்றார்கள் என நினைக்கின்றேன். அவர்கள் இவரையும் இவரது ஆட்சியையும் குறித்த மேலதிக தகவல்களை ஏதும் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>