01-11-2006, 11:23 AM
<b>விடுதலைப்புலிகளுடன் போரிட இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிப்போம்
அமெரிக்கா அறிவிப்பு </b>
கொழும்பு, ஜன.11-
"விடுதலைப்புலிகளுடன் போரிட இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிப்போம்'' என்று அமெரிக்கா அறிவித்து இருக்கிறது.
அமெரிக்க தூதர்
இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று நடந்த தொழில் அதிபர்கள் கூட்டத்தில், அமெரிக்க துÖதர் ஜெப்ரி லுன்ஸ்டெட் பேசியதாவது:-
கடந்த 2002-ம் ஆண்டு முதல் நார்வே நாட்டு துÖதுக்குழுவினர் எடுத்த அமைதி நடவடிக்கையால் இலங்கையில் தற்போது அமைதி நிலவுகிறது.
ஆனால் கடந்த சில மாதங்களாக விடுதலைப்புலிகளின் செயல்களால், அமைதி கேள்விக்குறி ஆகி வருகிறது. கடந்த மாதம் மட்டும் 115 பேர் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
1997 ம் ஆண்டு, விடுதலைப்புலி இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்தது. அப்போது முதல், ஆயுதத்தை கைவிட்டு, பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது.
பயிற்சி அளிப்போம்
விடுதலைப்புலிகளுடன் போர் புரிய இலங்கை ராணுவத்துக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்கும். தவறான வழிகளில் பணம் பட்டுவாடாஆவதை தடுப்போம். இலங்கை அரசின்பலத்தை அதிகப்படுத்துவோம். இலங்கை அரசு, தனது மக்களை பாதுகாத்துக்கொள்ளும் அளவில் அதை
பலப்படுத்துவோம்.விடுதலைப்புலிகள் போரை விரும்புகிறார்களா? அல்லது அமைதியை விரும்புகிறார்களா? என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும். போரை விடுதலைப்புலிகள் தொடங்கினால் பயங்கர விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.
அமைதி இருந்தால்தான்
தொழில் அதிபர்கள் கூட்டத்தில் இதுபோன்ற பேச்சு தேவைதானா? என்று நீங்கள் கேட்க கூடும். நாட்டில் அமைதி இருந்தால்தான், தொழில் வளரும் என்பதை அனைவரும் உணரவேண்டும்.
இவ்வாறு அமெரிக்க துÖதர் பேசினார்.
http://www.dailythanthi.com/article.asp?Ne...sdate=1/11/2006

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>