01-05-2004, 12:01 AM
<b>இந்திய கடற் பாதுகாப்பு வலயத்தில் சிறிலங்கா</b>
டி. சிவராம் (தராக்கி)
உபகண்டத்தை புவியியல் hPதியாக இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று இந்தியப் பெருநிலப்பரப்பு. மற்றது இந்தியக் குடாநாடு (Pநniளெரடயச ஐனெயை) போன கிழமை நேபாளம், புூட்டான், சீக்கிம், காஷ்மீர் ஆகியவை தொடர்பாக இந்தியா கொண்டிருந்த, கொண்டுள்ள பாதுகாப்புக் கரிசனைகள் பற்றியும் அவற்றையொட்டி அது செய்து கொண்ட உடன்படிக்கைகள், நடவடிக்கைகள் என்பன பற்றியும் பார்த்தோம்.
பங்களாதேஷ் உட்பட மேற்படி நாடுகள் அனைத்தும் இந்திய பெருநிலப்பரப்பின் பாதுகாப்பு வலயமென டெல்லியின் கேந்திரத் திட்டமிடலாளர் கொள்வதின் அங்கங்களாகும். இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்து வடபாலுள்ள பெருநிலப்பரப்பின் எல்லைகளையே டெல்லி ஆட்சியாளர் தமது நாட்டின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதபடி வலுப்படுத்திட வேண்டிய பிராந்தியமாகக் கருதிவந்தனர். பெருநிலப்பரப்பின் மேற்கிலும் கிழக்கிலும் பாகிஸ்தான் (இன்றைய பங்களாதேஷ் அன்றைய கிழக்குப் பாகிஸ்தான்) வடக்கிலும் கிழக்கிலும் சீனா என இந்தியாவுடன் கடுமையாக முரண்பட்ட இருநாடுகள் அமைந்திருந்தன. பிரித்தானியர் தன்னாட்சி கொடுத்துச்சென்ற கையோடு காஷ்மீரை கைப்பற்றுவதற்காக இந்தியாவும் பாகிஸ்தானும் போரிட்டன. பின்னர் எல்லைச்சிக்கல் காரணமாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் போர்மூண்டது. இதில் இந்தியப் படைகளை சீன இராணுவம் தோற்கடித்தது.
இந்தியப் பெருநிலப்பரப்பில் இங்ஙனமாக போர்களும், உரசல்களும், கடும் முரண்பாடுகளும் நீண்டகாலமாகத் தொடர்ந்தன.
இதனால் தவிர்க்க முடியாதபடி இந்தியாவின் பாதுகாப்பு பற்றிய கவனம் பெருமளவு தனது பெருநிலப்பரப்பின் வடக்கு, மேற்கு, கிழக்கு எல்லைகளிலேயே குவிந்திருந்தது. பெருநிலப்பரப்பிற்கிருந்த நேரடி அச்சுறுத்தல்கள் காரணமாக தனது தரைப்படைகள், வான்படை என்பவற்றின் வளர்ச்சியிலேயே இந்தியா ஆரம்பத்தில் அதிக நாட்டம் செலுத்திற்று.
ஆனால் இந்தியாவின் பெருநிலப்பரப்புப் போலன்றி அதன் குடாநாடு எதுவித நேரடி அச்சுறுத்தலையும் கொண்டிருக்கவில்லை. அதன் கிழக்குப்புறம் வங்காள விரிகுடா, மேற்காக அரபிக் கடல், தென்புறம் பாக்குநீரிணை, இலங்கை, மாலைதீவு என்பன அமைந்துள்ளன. இதில் வங்காள விரிகுடாவில் தோன்றக் கூடிய எந்த அச்சுறுத்தலையும் கண்காணிக்கவும் அதனூடாகச் செல்லும் கடற்பாதைகளைக் கண்காணிக்கவும் மிக ஏதுவான அந்தமான் நீக்கோபார் தீவுகள் இந்தியாவின் கையில் உள்ளன.
மேற்குப்புறமாக அரபிக்கடலில் உள்ள இலட்சத் தீவுகளும் இந்தியாவின் கையிலேயே உள்ளன. இவ்விரு இடங்களையும் போரியல் நோக்கில் அது பேணிவந்துள்ளது. இந்த இரு இயற்கையான பாதுகாப்பு அரண்களும் இந்தியக் குடாநாட்டின் பாதுகாப்பிற்குப்போதுமென்ற கருத்தே ஆரம்பத்திலிருந்து டெல்லி ஆட்சியாளர் மற்றும் கேந்திரத் திட்டமிடலாளர் ஆகியோரின் எண்ணமாக நிலவிற்று. இதற்கு மாறாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு பரந்துபட்ட இந்து சமுத்திரப் பிராந்தியம் அனைத்திலும் அது ஆதிக்கம் செலுத்திடக்கூடிய முறையில் வளர்ச்சியடைவது இன்றியமையாததாகும் என கே.எம். பணிக்கர் என்ற தென்னிந்திய அறிஞர் வலியுறுத்தினார்.
1945 இல் சுதந்திர இந்தியாவின் கடற்பலம் எங்ஙனம் அமைய வேண்டும் என அவர் எழுதிய நூலில் மொறிசியஸ் தீவு, சிங்கப்பூர் செங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஏடன் (யுனநn) (துறைமுக நகரம், மற்றும் சொக்கோட்ராதீவு (ளுழஉழவசய) என்பன இந்தியாவின் பிடிக்குள் இருப்பதும், பர்மா (தற்போதைய மியன்மார்) இலங்கை என்பவற்றை இந்தியாவின் அரசியற் செல்வாக்கிற்குட்பட்ட நாடுகளாக்குவதும் அதன் வருங்காலப் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் அவசியம் என வாதிட்டார். 16 ஆம் நூற்றாண்டில் கடல் மீது தன் ஆதிக்கத்தை இந்தியா இழக்கும் வரை அது தன் சுதந்திரத்தை இழக்கவில்லை எனப் பணிக்கர் எழுதினார்.
16 ஆம் நூற்றாண்டில் இந்தியக் கடலின் அதிபதிகளாக இருந்தவர்கள் சாமூதிரிகள் என்ற கேரளக் கரையோரத்தை ஆண்ட சேர மன்னர் வழிவந்த அரசர்கள் என்பதும், வட இந்திய உயர்சாதிகளிடையே கப்பலேறுவது, கடல் கடப்பது என்பன செய்யப்படத்தகாத பாவமாகக் கருதப்பட்டன என்பதும் பணிக்கர் தனது இந்தியத் தேசிய விடுதலை உணர்வு காரணமாக கூறாது விட்ட விடயங்களாகும்.
(புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூல் ஏடுகளைத் தேடிப் பதிப்பிக்க முற்பட்ட வேளையில் பண்டைய சேர மன்னர் சிலர் கடலோட்டிய, கடல் பிறக்கோட்டிய என்ற பட்டங்களுடன் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் சாமூதிரி மன்னர்கள் பற்றி தனது கேரள நண்பர் ஒருவரூடாகத் தெரிய வந்தபோது இது என்ன என்பது பற்றித் தனக்குத் தெளிவேற்பட்டதாகவும் உ. வே. சாமிநாதய்யர் அவருடைய வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடுகிறார்)
இனி விட்ட இடத்திற்கு வருவோம். மேற்படி இந்தியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் இந்து சமுத்திரப் பிராந்தியம் எங்கும் அதன் கடலாதிக்கம் நிலை நிறுத்தப்பட வேண்டும் என கே.எம். பணிக்கர் கூறிய கருத்து பெருநிலப்பரப்பு மையப்பட்ட வட இந்திய கேந்திரத்திட்ட மிடலாளரிடம் நீண்டகாலம் பெரிதாக எடுபடாமலேயே போயிற்று.
இந்தியா தனது கடல் எல்லைகளை வரையறுப்பதற்கும் அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதற்குமான தேவை முதன் முதலில் 1965 இல் ஏற்பட்டது. இவ்வாண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையில் போர் மூண்டபோது இந்தோனேசிய அரசு பாகிஸ்தானுக்கு ஆதரவாக தனது கடற்படையை அனுப்ப முனைந்ததோடு மட்டுமல்லாமல் இந்தியப் படைத்தலைமையை திசை திருப்பிடும் நோக்கில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மீது படையெடுக்கப் போவதாகவும் சைகை காட்டிற்று. அத்துடன் பாகிஸ்தானுக்கு சில சண்டை வானு}ர்திகளை அனுப்புவதற்கு ஏதுவாக இலங்கையின் வான்படைத் தளங்களை பயன்படுத்த இந்தோனேசிய அரசு அனுமதி கோரிற்று. இந்து மாகடலின் பெயரை இந்தோனேசிய சமுத்திரம் என மாற்றவேண்டும் என்றும் அது கூறிற்று. இந்தோனேசியாவின் இந்தச் செயலே இந்திய ஆட்சியாளரை முதன் முறையாக வங்கக்கடலில், குறிப்பாகத் தென்கிழக்காசியாவின் நுழைவாயிற் பிராந்தியமான அந்தமான் நிக்கோபார் தீவுகளையும் தனது கிழக்குக் கரையை அண்டிய ஆழ்கடலையும், பலப்படுத்திடக்கூடிய கடற்படை விரிவாக்கத்தைப் பற்றி எண்ண வைத்தது எனலாம். ஆயினும் அதே ஆண்டிலேயே இந்தோனேசியாவில் இராணுவப் புரட்சி மூலம் பதவிக்கு வந்த அரசு இந்திய விரோதப் போக்கை கைவிட்டதால் டெல்லி ஆட்சியாளர் இந்தியப் பெருநிலப்பரப்பின் பாதுகாப்பு சிக்கல்களில் மீண்டு தம் கவனத்தை குவிக்கலாயினர். ஆனால் இப்போக்கு 1971 இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக முற்றாக மாறிற்று. அப்போரில் கிழக்குப் பாகிஸ்தானில் (பங்களாதேஷ்) அந்நாட்டின் படைகளை முறியடிக்க இந்தியாவிற்கு உதவிய முக்கியமான விடயம் அதன் கடற்படைப் பலமே. 'அந்தமான் நிக்கோ பார் தீவுகள் எமது கையில் இருந்தமையாலேயே நாம் கிழக்குப் பாகிஸ்தான் படைகளை தனிமைப் படுத்தி அவற்றின் மூலாதாரமாக இருந்த கடல்வழி வழங்கற் பாதைகளை முற்றாக துண்டிக்கக்கூடியதாயிற்று" என அப்போரில் பங்குபற்றிய இந்திய கடற்படைத் தளபதி கூறுகிறார். இப்போரின் போது வங்காள விரிகுடாவினுள் அமெரிக்கா பாகிஸ்தானுக்குச் சார்பாக தனது விமானந்தாங்கிக் கப்பலொன்றை அச்சுறுத்தலாக அனுப்பிவைத்த சம்பவமும் வங்காள விரிகுடாப் பிராந்தியத்தில் தனது நிலையை போரியல் hPதியாகவும், பொருளாதார hPதியாகவும் வரையறுத்து வலுப்படுத்திட இந்தியாவைத் து}ண்டிற்று.
1971 இந்தியப் பாகிஸ்தான் போரின்போது கிழக்குப் பாகிஸ்தான் மீது இந்திய கடற்படை கடற்தடை (யேஎயட டீடழஉமயனந) போட்டபோது பாகிஸ்தான் வான்படை இங்கு வந்து எரிபொருள் நிரப்பிச்செல்ல சிறிலங்கா அனுமதித்தது. இது டெல்லிக்கு பெரும் கடுப்பை உண்டாக்கிற்று. அதுமட்டுமன்றி பங்களாதேஷ் போருக்குப் பின்னர் இந்தியாவின் படைத்துறை வளர்ச்சி மற்றும் கடலாதிக்கம் என்பவற்றை கண்டு கவனங்கொண்ட சிறிலங்காவின் வெளியுறவுக் கோட்பாட்டாளர் சீனாவுடன் கடற்படைசார் உறவுகளை வளர்த்தெடுக்கத் தலைப்பட்டனர். வங்காள விரிகுடாவில் 1971 இன் பின் இந்தியா எடுக்க முனைந்த கடலாதிக்கப் போக்கினை தனது கடற்பிராந்தியத்தில் ஓரளவாயினும் சமநிலைப்படுத்தும் உள்விருப்பில் சிறிலங்கா சீனாவிடம் கடற்படைக் கலங்களை வாங்கிற்று. இந்தியாவின் கடல் விரிவாக்க நோக்கங்கள் பற்றி சிறிலங்கா ஆட்சியாளர் கொண்டிருந்த சஞ்சலங்களை சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தவறவில்லை.
1971 பங்களாதேஷ் போரின்போது பாகிஸ்தான் வான் படைக்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டு களமுனை செல்ல சிறிலங்கா அனுமதித்தமை டெல்லிக்கு எரிச்சலு}ட்டியபோதும் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசு அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புக் கோட்பாட்டைக் கடைப்பிடித்தமையாலும் அவருக்கும் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி, உயர் டெல்லி அதிகாரிகள் ஆகியோருக்குமிடையில் நெருங்கிய உறவு இருந்தமையாலும் இந்து சமுத்திரப் பிராந்தியம் சம்பந்தப்பட்ட பொதுவிடயங்களில் இரு நாடுகளுக்குமிடையில் உடன்பாடு நிலவியது.
இக்காலகட்டத்தில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் கடலாதிக்க வளர்ச்சி பற்றியே இந்தியாவும் அதன் நேச நாடான சோவியத் யுூனியனும் பெரும் அக்கறை கொண்டிருந்தன. அமெரிக்கா டியுகோ கார்சியா தீவில் அணு ஆயுதங்களையும் அணுவாயுதக் கப்பல்களையும் நிறுத்தி வைப்பதற்கான தளத்தை நிறுவியது. இது இந்தியாவிற்குப் பெரும் அச்சுறுத்தலை அக்கால கட்டத்தில் ஏற்படுத்திற்று. இதனாலேயே சிறிலங்காவை அமெரிக்க எதிர்ப்பணியில் தன்னோடு அணைத்துச் செல்வதிலும் சிற்சில விட்டுக்கொடுப்புகள் மூலம் அதற்குத் தன்பால் சில கடப்பாடுகளை ஏற்படுத்துவதிலும் அப்போது இந்தியா கவனமாக இருந்தது.
இதுவரை காலமும் தனது பெருநிலப்பரப்பின் பாதுகாப்பு வலயத்திலேயே குறியாக இருந்த இந்தியாவின் பார்வை இக்காலப்பகுதியில்தான் தனது தெற்குக் கடலெல்லைப் பக்கம் திரும்பிற்று.
இதன் விளைவாகவே இந்து சமுத்திரச் சமாதானப் பிராந்தியம் என்ற கோட்பாட்டை ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தீர்மானமாக நிறைவேற்றிட இந்தியாவும் சோவியத் யுூனியனும் முனைந்தன. இந்தத் திட்டத்தினுள் அவை சிறிலங்காவை வெற்றிகரமாக உள்வாங்கின.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்கக் கடலாதிக்கத்திற்கெதிரான மேற்படி தீர்மானம் சிறிலங்காவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதை மேலும் வலுவுூட்டும் வகையில் 1976 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டின்போது சிறிலங்கா, இந்தியா என்பவற்றின் முயற்சி காரணமாக டியாகோ கார்சியா தீவில் அமெரிக்காவின் படைத்தளம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் இறைமைக்கும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக ஒரு கடுமையான அமெரிக்க எதிர்ப்புக் கண்டனம் நிறைவேற்றப்பட்டது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க அணு ஆயுதத்தளம் அமைக்கப்பட்டமையும் 1971 இந்திய பாகிஸ்தான் (பங்களாதேஷ்) போரும் இந்தியாவிற்கு தன் கடற்பாதுகாப்பு வலயம் பற்றிய பெரும் அக்கறையை உண்டாக்கின என ஏலவே கண்டோம். இந்த அக்கறையின் முக்கிய வெளிப்பாடாக வங்காள விரிகுடாவில், குறிப்பாக இலங்கையைச் சுற்றிய கடற்பிராந்தியத்தில், தனது எல்லைகளை இந்தியா சட்ட hPதியாகவும் பாதுகாப்பு நோக்கிலும் வரையறுத்துக் கொண்டது.
<b>இதன் முதற்படியாக 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி கொழும்பிலும் 28 ஆம் திகதி டெல்லியிலும் இலங்கை - இந்தியக் கடல் எல்லை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதில் கச்சதீவை விட்டுக்கொடுத்ததன் மூலம் இலங்கையைத் தன்பால் நிரந்தர கடமைப்பாடு கொள்ள வைத்தது இந்தியா. அமெரிக்கா, சீனா ஆகியவற்றின் பக்கம் சிறிலங்கா சாய்ந்திடாமல் இருக்க இந்தியா சிங்கள ஆட்சியாளர்களுக்கு வழங்கிய ஒருவகை நிரந்தர கையுூட்டுதான் கச்சதீவு எனலாம்.</b> இதையடுத்து 1976 இல் மன்னார் வளைகுடா வங்காள விரிகுடா, பாக்கு நீரிணை, இராமர் அணை (தீடை) ஆகிய கடற்பகுதிகளில் எல்லைகள் மிக விரிவாக வகுக்கப்பட்டன. (இவ்வொப்பந்தத்தில் இவை பாகைகளில் வரையறுக்கப்படுகின்றன) 1976 நவம்பர் மாதம் மன்னார் வளைகுடாவில் இந்தியா, இலங்கை, மாலைதீவு ஆகிய மூன்றுக்குமான ஒரு முச்சந்திப் பொது எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தமும் கைச்சாத்தாகிற்று. (வுசi - தரnஉவழைn யபசநநஅநவெ) 1976 இந்திய - இலங்கை கடல் எல்லை ஒப்பந்தத்தைச் சட்டமாக்கும் வகையில் சிறிலங்கா அரசு கடற் பிராந்தியச் சட்டம் இல. 22 என்பதை ஏற்படுத்தியது. இதில் வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் இலங்கையின் முன் அனுமதியின்றி அதன் கடல் எல்லைக்குள் பயணிக்கமுடியாது எனக் கூறப்பட்டது.
இவ்வாறாக இலங்கையை தனது தென் கடல் மற்றும் வங்காள விரிகுடா சார்ந்த பாதுகாப்பு வலயத்தினுள் கொண்டுவந்து அமெரிக்காவின் இந்து சமுத்திர மேலாதிக்கத்தை மட்டுப்படுத்திடலாம் என்ற இந்தியாவின் எண்ணத்தில் மண் விழ நீண்டகாலம் எடுக்கவில்லை.
நன்றி: வீரகேசரி 04.01.04 & தமிழ்நாதம்