01-04-2004, 12:58 AM
<b>இலங்கை தமிழர்களுக்கும் புலிகளுக்கும் உதவும் வகையில் இந்திய வெளியுறவுக் கொள்கை மாற்றப்படவேண்டும் இந்தியப் பிரதமருக்கு மகஜர்</b>
ஜ தமிழ்மாறன் ஸ ஜ சனிக்கிழமை, 03 சனவரி 2004, 1:22 ஈழம் ஸ
இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கும் அவர்களின் ஏக பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் உதவும் வகையில் இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்று யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான தமிழ்ப் பேசும் மக்களின் அமையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினு}டாக இந்திய பிரதமர் வாஜ்பாய்க்கு அனுப்பிவைத்துள்ள மகஜரிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி அமையத்தின் இணைப்பாளர் சீ.வி.கே. சிவஞானம் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள அம் மகஜரில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இறுதியானதும் உறுதியானதுமான தீர்வை ஏற்படுத்துவதற்குரிய வகையில் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.
அதேவேளை எக்கட்டத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் எத்தகைய நடவடிக்கையையும் இந்தியா மேற்கொள்ளக்கூடாது.
இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு சமஷ்டி முறையிலான தீர்வை வழங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் அர்த்தமுள்ள வகையில் இந்தியா மேற்கொள்ளவேண்டும்.
இலங்கையில் கடந்த 50 வருடங்களாக இடம்பெற்றுவரும் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு நீதியான நடவடிக்கைகளை இந்தியா வலியுறுத்தவேண்டிய கடப்பாடு உள்ளது என நாம் திடமாக நம்புகின்றோம்.
தமிழ் பேசும் மக்கள் அனுபவித்து வருகின்ற துன்பங்கள், துயரங்களினால் நாம் எமது மனிதத்தை இழந்த நிலையில் உள்ளோம்.
எமக்கான அடிப்படை உரிமைகள் அனைத்துத்துறைகளிலும் மறுக்கப்பட்டு வருவது இன்று வழமையான நடவடிக்கையாகிவிட்டது.
எமது தாயகத்தின் கரையோரப்பகுதிகளை இராணுவத்தினர் முற்றுகையிட்டு அங்கு இருந்து வருவதால் மீன்பிடித்தொழிலை மட்டுமே நம்பியுள்ள 30 சதவீதமான எமது மக்கள் சொல்ல முடியாத பல்வேறு கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டு அரசு எமது தமிழ் மீனவர்கள் விடயத்தில் சரியான நிலைப்பாட்டினை கொண்டிருக்கவேண்டும் என இந்திய அரசாங்கம் உரிய அறிவுறுத்தல்களை வழங்கவேண்டும்.
இலங்கைத் தமிழர்கள் வடக்கு - கிழக்கு மாகாணத்தில் சுயாட்சி பெற்று வாழக்கூடிய வகையில் உரிய ஏற்பாடுகளை காலந்தாழ்த்தாது செய்யவேண்டும்.
இதேவேளை இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தின் முயற்சியுடன் நோர்வேயின் அனுசரணையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தை தடைப்பட்ட நிலையில் அதனை மீளவும் காலதாமதமின்றி ஆரம்பிக்க இந்தியப் பிரதமராகிய நீங்கள் தென்பகுதியில் இருக்கும் அரசியல் சக்திகளுக்கு அழுத்தங்கொடுக்கவேண்டும்.
நன்றி: வீரகேசரி & புதினம்.com