01-10-2006, 01:30 PM
அடடடா மறுபடி தொடங்கியிருக்கா. (இந்தப்பட்டிமன்றம் என்ன ஸ்பீட்ல போகுது என்று தெரியல) சரி இணைய ஊடகத்தால் புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர் சீரழிகிறார்கள் என்ற அணிக்காக கருத்தை வைச்சிருக்கும் அருவியின் விவாதத்தைப்பார்ப்போம்.
தனக்கு முன் வாதாடிச்சென்ற எதிரணி நண்பர் குழப்பவாதியாக மாறிவிட்டார் என்கிறார். தலைப்பைத்தொட்டுச்செல்லவில்லை என்கிறார். இணைய ஊடகத்தின் நன்மைகளை எடுத்துக்கூறிவிட்டுச்சென்றிருக்கிறார். இந்த நன்மைகள் இளையோருக்குப்பொருந்தாதா என்ன..??
சரி அருவியின் அடுத்த கருத்தைப்பார்ப்போம். படங்களில் துணிவிலகாதா என்று எதிர்பார்த்தவர்கள் இன்று துணிவிலகிய நிலையிலேயே இணையத்தில் பார்க்கிறார்கள். யாருக்கும் தெரியாமல் பார்க்கிறார்கள் பயம் இன்றிப்பார்க்கிறார்கள் என்று. அந்த அணியின் கருத்தையே தனக்கு சாதகமாக்கி கருத்துவைத்திருக்கிறார் அருவி.
இணையத்தின் வழி வாழ்க்கைத்துணையை அதுவும் நல்ல வாழ்க்கைத்துணையை தேடமுடியாதா என்ற எதிரணியினரின் கருத்திற்கு பதில் வைக்கையில். இணையத்தில் உலாவுவர்கள் யாராவது இயற்பெயருடன் வருகிறார்களா அப்படி என்று கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
ஏன் பெயரையா காதலிக்கப்போகிறார்கள்?? எங்கே மற்ற அணியினர் கருத்தென்ன காத்திருந்து தான் பார்ப்போமே..?? பெற்றோர்கள் பேசி.. நேரில்க்கண்டு காதலித்துச்செய்கின்ற திருமணங்களே முறிந்து போய் இருக்கின்றன இணையத்தில் ஒருவரது எழுத்தைக்கொண்டு காதலித்தால் என்ன நிலையில் நிற்கும் அப்படி என்கிறார்..?? எங்கே எதிரணியினர் என்ன கருத்தை வைக்கிறார்கள் பார்ப்போம்.
தொடரும் இதே கருத்தில் இணையக்காதலால் ஏமாந்து தனது பொருளைப்பறிகுடுத்த ஒருவர்பற்றிய செய்தியை மறந்துவிட்டீர்களா அப்படி என்று கேள்வியும் எழுப்பியிருக்கிறார். மறந்திட்டீர்களா.? ஒரு இளைஞன் ஏமாற்றப்பட்டிருக்கான்? இது சீரழிவில்லையா அப்படி என்று கேக்கிறார் அருவி.
அன்னம் பாலை மட்டும் பிரித்துக்குடித்ததனால் தான் நள தமயந்திக்கு தூது சென்ற அன்னம் ஒருசில (அழிந்து போய்விட்டது)மிருகக்காட்சிச்சாலையில் பார்க்கும் உயிரினம் ஆகிவிட்டது. நமது இளையோரையும் அப்படி ஆக்கிவிடாதீர்கள் என்கிறார். பாலைமட்டும் பிரித்துக்குடித்த அன்னத்திற்கே இந்தக்கதியென்றால். நன்மைகள் சீரழிவுகள் இரண்டிற்குள்ளும் வாழும் இளையோர் நிலை எப்படி என்கிறாரா..??
நல்லவைகள் அனேகமாக பணம் செலுத்திப்பெறவேண்டியுள்ளது. சீரழிவுகளை இலவசமாகவே இணையத்தில் பெற்றுக்கொள்ள முடியும் அப்படி என்கிறார் அருவி. எங்கே எதிரணியினர் என்ன சொல்கிறீர்கள்.
இணையமானது நம் இளையோருக்கு பாடங்கள் பாடல்களை மட்டும் அல்ல மென்பொருட்களையும் திருடக்கற்றுக்கொள்கிறது இந்தத்திருட்டுத்தான் நாளை கடனட்டை வங்கிப்பணம் திருடல்கள் போன்றவற்றிற்கு வழிவகுக்கும் என்று தனது ஆதங்கத்தைத்தெரிவித்திருக்கிறார். (யாரும் முயன்றிடாதீங்க பிறகு கம்பி தான்) மென்பொருட்களை வாங்கிறதுக்கெண்டே தனியா உளைக்கவேணும். :wink:
இணையமானது தகவல் பரிமாற்றம் மற்றும் செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறது என்பதை மறுக்கவில்லை ஏற்றுக்கொள்ளும் அவர் இணையத்தில் தரப்படும் இந்தச்செய்திகள் எத்தனைவீதம் உண்மையானவை என்று கேள்வியை எழுப்பிவிட்டுச்செல்கிறார். இன்னொரு உதாரணத்தையும் காட்டுகிறார் இலங்கை அரசின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோக பூர்வ இணையத்தினை மற்றவர்கள் கையாண்டு ஒரு மண்டை ஓட்டுப்படத்தை பிரசுரிதததாக பத்திரிகைகளில் வந்தது என்று குறிப்பிடுகிறார். ஒரு அரச இணையத்திற்கே இந்த நிலை என்றால்..?? தனிநபர் இணையங்கள் நிலை எப்படியிருக்கும்..?? இதற்கு என்ன சொல்கிறார்கள் எதிரணியினர். பார்ப்போமே.??
பட்டிமன்றம் தொடர்வோமோ என்ற தலைப்பில் நடந்த உரையாடலில் வைக்கப்பட்ட கருத்து ஒன்றைச்சுட்டிக்காட்டி அதை தனக்கு சாதகமாக்கி கருத்துவைக்கிறார்.
<b>
இலக்கண விதி மீறி அவை தமிழில் உருவாக்கப்படுகின்றன. இதில் முன்னிலை வகிப்பது ஒவ்வொருவரும் தனித்தனியே ஆரம்பிக்கும் வலைப்பதிவுகள். அவற்றில் எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி யாரும் தம்விருப்பப்படி தமது கருத்துக்களை எண்ணங்களை விட்டுச்செல்ல முடிகிறது. அப்படியான ஒரு பக்கத்திற்குச் செல்லும் இளைஞன், ஏற்கனவே வேறு ஒரு நாட்ட மொழியுடன் தமிழின் பரீச்சயத்தை இழந்து நிற்கும் ஒருவனிற்கு, தமிழ் மீது ஒரு குழப்பத்தை உண்டுபண்ணி அவனது மொழியாற்றலையும் அல்லவா இவ்விணையம் சீரழிக்கிறது. </b>
இணைய ஊடகத்தால் தமிழிற்கு ஏற்பட்ட சீரழிவுகளை எதிரணி வாயிலாக எடுத்து வந்திருக்கிறார். இதை இல்லை என்று வாதிடுவார்களா பொறுத்திருந்து பார்ப்போம்
<b>ஒரு பொது தமிழ் எழுத்துருவைக் கண்டு பிடித்து ஒரே எழுத்துருவைக் கொண்டு இணையப்பக்கங்களை அமைக்கும் நிலைக்கு இன்னும் இளையோர் முன்வரவில்லையே. </b>
இன்னொரு முக்கியவிடையம் இது. தமிழிற்கு என்று ஒரு பொதுவான எழுத்துருவை அனைவரும் ஒற்றுமையாக எப்பதான் பயன்படுத்துவார்களோ தெரியாது. யுனிக்கோட்டில் மாற்றப்பட்ட தளங்களைத்தவிர மற்றத் தளங்களைப்பார்வையிட வேண்டும் என்றால் கண்டிப்பாக அவர்கள் பாவிக்கும் ஏழுத்துருவை தரவிறக்கி வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் எங்கள் கணணியின் வேகம் தான் குறைவடையும் என்கிறார்கள்.
பல கருத்துக்களை வெட்டி புதிதாக தனது கருத்துக்களையும் வைத்து. எதிரணியின் கருத்தையே திசைதிருப்பி தனது கருத்திற்கு வலுச்சேத்து அற்புதமான விவாதத்தை வைத்துச்சென்றிருக்கிறார் அருவி அருவியைத்தொடர்ந்து இணைய ஊடகத்தால் புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர் நன்மை அடைகிறார்கள் என்ற தலைப்பில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>