01-10-2006, 11:42 AM
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய நடுவர் அவர்களிற்கும், இளையோரை நல்வழிப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்திற்காக அவர்கள் தவறாகப் போய்க்கொண்டிருப்பதை சுட்டிக்காட்ட சோழியன் அண்ணாவின் தலமையில் இங்கு இருக்கும் என்அணி சக நண்பர்களிற்கும், கெட்டுப்போகிறார்கள் என்று தெரிந்தும் சும்மா ஒப்புக்காக வாதாட வந்திருக்கும் எதிரணி நண்பர்களிற்கும் முதலில் வணக்கங்களைக் கூறிக்கொண்டு நேரடியாக விவாதக்களத்தில் இறங்குகின்றேன்.
எனக்கு முன் வந்து வாதாடிச்சென்ற எதிரணி நண்பரின் வாதத்திறனை பார்த்து வியந்து போய்விட்டேன். இணையம் அவரை எப்படிக் குழப்பவாதியாக மாற்றிவிட்டது பார்த்தீர்களா, இங்கு விவாதத்தின் தலைப்பு இணைய ஊடகத்தால் இளையோர் நன்மை அடைகிறார்களா அல்லது தீமையடைகிறார்களா என்று இருக்க அவர் அதனைத் தொட்டுச் சென்றதாகத் தெரியவில்லை. காரணம் அதனால் சீரழிந்த இளையோரே அதிகம் உள்ளதாலாகும்.<b> நடுவர் அவர்களே பாருங்கள் அவர்களிற்கே தங்கள் மேல் சந்தேகம் வந்துவிட்டது. அதனால் தான் தலைப்பை மறந்து ஏதேதோ எல்லாம் கூறுகிறார்கள்.</b>
அவர் நல்லதொரு கதையையும் சொல்லிச் சென்றார்; அதில் நண்பன் துணி இன்னும் விலகாதா என்று பார்த்துக் கொண்டிருந்தானாம். அதைத்தானே நாங்களும் சொல்கிறோம். இளையோர் மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாதவர்கள், அவர்களிற்கு இணையம் என்ற பெயரில் ஒரு கட்டில்லா சுதந்திரத்தை வழங்கி அவர்களைக் கெட்டுக் குட்டிச் சுவராக்கிறது என்று. <b>படத்தில துணி விலகாதா என்று என்று பாத்துக்கொண்டிருந்தவர்கள் இன்று துணிவிலகிய நிலையில் இணையத்தில் பாக்கிறார்கள். அதுவும் யாருக்கும் தெரியாமல்</b>, படம் பாக்க போவதென்றால் யாராவது பார்த்து விடுவார்கள் என்ற பயம் இருக்கும். ஆனால் இங்கு அது ஒன்றும் இல்லையே.கணினியை இயக்கி அதிலிருந்து மிகவும் இலகுவாக ஒருவரினதும் பயமின்றி செல்லவேண்டிய இடமெல்லாம் சென்றுவிட்டு வந்துவிடுகிறார்கள்.
இணையத்தில் நல்ல வாழ்க்கைத்துணையைச் சந்திக்க முடியாதா என்று எதிரணியினர் கேள்வி கேட்கின்றனர். எப்படிச் சந்தித்து நல்லவர்கள் என்று அறிந்து கொள்வீர்கள். யாராவது இணையத்தில் தமது இயற்பெயர்களுடன் வருகிறார்களா. அம்மா அப்பா பார்த்து பேசி செய்து வைக்கும் திருமணங்களும் நேரில் கண்டு காதலித்து செய்து கொள்ளும் திருமணங்களுமே முறிந்து போய்நிற்கும் இன்றைய சூழலில், இணையத்தின் மூலம் துணையைத் தேடலாம் என்று சொல்கிறீர்கள், அதைக் கேட்க சிரிக்காமல் இருக்க முடியவில்லை. <b>இதே யாழ்களத்தில் இணையக் காதலால் தன்னை ஏமாந்து தன் பொருளைப் பறிகொடுத்த ஒருவரைப்பற்றிய செய்தி வந்ததே மறந்து விட்டீர்களா நண்பர்களே</b>. இணையத்தில்பல நல்ல விடயங்களைத் தேடிப் பெற்றுக்கொள்ளலாம் அன்னம் போல பாலை மட்டும் குடிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்கள் அன்பான எதிரணியினர். பாலை மட்டும் பிரித்து பிரித்து குடித்ததால் தான் தமயந்திக்கும் நளனிற்கும் தூது போன அன்னம் இன்று மிருகக்காட்சிச்சாலைகளில் பார்க்கும் ஒரு உயிரினம் ஆகிவிட்டது. அதுவும் எல்லா இடத்திலும் இல்லை. அதனால் தான் சொல்கிறோம் <b>அன்னம் அழிந்ததுபோல் இளையோரையும் அழியவிடாதீர்கள் </b>. எதிரணியினரிடம் ஒரு கேள்வி, இணையத்தில் நீங்கள் நல்லவை என்று கருதுபவைகளை இலவசமாகப் பெறமுடியுமா. அநேகமானவை பணம்செலுத்திப் பெறவேண்டியவைகளாக இருக்கின்றன. ஆனால் இளையோரைக் கவரும் விதத்தில் எவ்வாறு சீரழிக்கும் இணையத்தளங்கள் இயங்குகின்றன என்பது உங்களிற்குத் தெரியும். அவற்றிற்கு பணம் கூட செலுத்தத்தேவையில்லை.
எதிரணிச் சிப்பாய்களுள் ஒருவர் கூறிச்சென்றார் பாடல்களை படங்களைச் செலவின்றி பெற்றுக்கொள்ளலாம் என்று, இதைத்தானே இணையம் இன்றைய இளையோரிற்கு சொல்லிக் கொடுக்கிறது. எப்படித் திருடலாம் என்று. பாடல்கள் படங்களில் கைவைப்பவர்கள்தானே அடுத்து கடனட்டை வங்கிப்பணம் திருடல்களில் இறங்குகிறார்கள். இதைத்தான் அடுத்தநாள் வேலை என்று கூறுகிறீர்களா? ஒருவர் தன் முழு உழைப்பையும் சிந்தி ஒரு படைப்பினை வெளியே கொண்டுவர அதனைத்திருடி நீங்கள் உற்சாகமடைவதுமட்டுமல்ல அடுத்தவனது வியாபார உரிமையையும் அல்லவா நீங்கள் திருடுகிறீர்கள். கனடாவிலே பல்கலைக்கழகத்திலே எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் கிட்டத்தட்ட <b>80வீதமானவர்கள் கணினி மென்பொருட்களை பணம்கொடுத்து வாங்குவதில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அதிலும் கணினித் துறையைச் சேர்ந்தவர்களும் கணிசமானவர்கள் இதனைத் தாம் செய்வதாகச் சொல்கிறார். </b>என்று அவ்வாய்வு சொல்கிறது. இப்படித்தான் இன்றை புலம்பெயர்ந்து வாழும் இளையோரும் இருக்கிறார்கள்.
நடுவர் அவர்களே எமது எதிரணி நண்பர்களிற்கு தலைப்பை ஞாபகப்படுத்துவதே எம் வேலையாய் போச்சு பாருங்க. இதுதான் இணையம் அவர்களிற்கு கொடுத்த நன்மைபோல் உள்ளது, தலைப்பை விடுத்து மற்றைய விடயங்களில் திசை திருப்புவது. இதை எதுக்கு இப்ப சொல்கிறேன் என்றால் இப்பட்டிமன்றத்தில் அலை என்றெல்லாம் சொல்லி எம்மைப் பயப்படுத்தப் பார்க்கிறார்கள். அவர்கள் கூறிய அலைக்கும் இப்பட்டிமன்றத் தலைப்பிற்கும் என்ன தொடர்பு என்பது அவர்களிற்குத்தான் வெளிச்சம்.
அடுத்து இணையத்தின் மூலம் தகவல் பரிமாற்றம் பற்றிப் பேசினார்கள். உண்மைதான் நீங்கள் கூறுவது போல் செய்திகளை உடனுக்குடன் அறியவும், கூட்டங்களை வைக்கவும் பயன்படுத்துகிறார்கள் என்பதை மறுக்கவில்லை. ஆனால் <b>இணையத்தில் தரப்படும் செய்திகளில் எத்தனை வீதமானவை உண்மையானவை; உறுதிப்படுத்தப்பட்டவை.</b> இஸ்லாமியத் தீவிரவாதிகள் தம்மிடையேயான தகவல் பரிமாற்றத்திற்கு இணையத்தினைப் பயன்படுத்துகிறார்கள் என்று உளவு அமைப்புக்கள் கூறுகின்றன. அவற்றினைக் கண்காணிப்பதற்காகவே பல நூற்றுக்கணக்கான பணத்தினைக் கொட்டுகிறார்கள். இதுதான் நன்மையா.இவ்வாறான தளங்கள் யாரை மையப்படுத்தி செய்யப்படுகின்றன. இதன் மூலம் அழிவது யார்? ஒரு தடவை இலங்கை அரசாங்கத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இரத்தம் சிந்தும் மண்டையோட்டின் படம் பெரிதாக வந்திருந்ததாகப் பத்திரிகைகளில் செய்திபோட்டார்கள். இப்படி ஒரு அரசாங்க இணையத்தளமே மற்றவர்களால் கையகப்படுத்தப்பட்டு அந்நாட்டின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டு சர்வதேச அளவில் இதற்கு ஒரு அபகீர்த்தியை ஏற்படுத்தும் இவ்விணையத்தினால் இளையோர் நன்மையடைகிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியலயே! சந்தேகம் தான் இணையப்பக்கங்களிலும் இணையத்தில் இணைபவர்களிலும் ஏற்படுமே தவிர அவை ஒருபோதும் இளையோர் நன்மையடையப் போவதில்லை.
"பட்டிமன்றம் தொடர்வோமா" என்னும் தலைப்பின் கீழ் தொடரும் கருத்தாடலில் எமது எதிரணி விவாதி குருவிகள் அவர்கள் ஒரு விடயத்தினை சுட்டிக்காட்டினார். பாவம் அவர் அறிந்து செய்தாரோ அறியாமல் செய்தாரோ தெரியவில்லை. அது என்னவெனில் தமிழில் தோன்றும் புதுப்புதுச் சொற்கள். <b>இலக்கண விதி மீறி அவை தமிழில் உருவாக்கப்படுகின்றன. இதில் முன்னிலை வகிப்பது ஒவ்வொருவரும் தனித்தனியே ஆரம்பிக்கும் வலைப்பதிவுகள். அவற்றில் எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி யாரும் தம்விருப்பப்படி தமது கருத்துக்களை எண்ணங்களை விட்டுச்செல்ல முடிகிறது. அப்படியான ஒரு பக்கத்திற்குச் செல்லும் இளைஞன், ஏற்கனவே வேறு ஒரு நாட்ட மொழியுடன் தமிழின் பரீச்சயத்தை இழந்து நிற்கும் ஒருவனிற்கு, தமிழ் மீது ஒரு குழப்பத்தை உண்டுபண்ணி அவனது மொழியாற்றலையும் அல்லவா இவ்விணையம் சீரழிக்கிறது</b>. இதுதான் இளையோர் பெறும் நன்மையா அல்லது தமிழ் பெறும் நன்மையா. தமிழ் இன்று இணையத்தில் இரண்டாம் மொழியாக இருந்தால் கூட <b>ஒரு பொது தமிழ் எழுத்துருவைக் கண்டு பிடித்து ஒரே எழுத்துருவைக் கொண்டு இணையப்பக்கங்களை அமைக்கும் நிலைக்கு இன்னும் இளையோர் முன்வரவில்லையே</b>. இதிலிருந்து தெரியவில்லையா தாமும் அழிந்து பிறரையும் அழிக்கத்தான் இளையோரிற்கு இணையம் பயன்படுகின்றது என்று.
ஆக புலம்பெயர்ந்த இளையோர் இணையத்தால் சீரழிந்து போகிறார்கள் என்று முடிவாகக் கூறி எனக்கு அடுத்து வந்து விவாதிக்க இருக்கும் என் அணிச் சகோதரர்கள் சீரான விளக்கங்களை உங்களிற்கு அளிப்பார்கள் எனக்கூறிக்கொண்டு இவ்வாய்பை அளித்த இரசிகைக்கும், தளத்திலே இடம் தந்து உதவிய மோகன் அண்ணாவிற்கும் நன்றியைக் கூறி நடுவர் அவர்கள் நல்ல ஒரு தீர்ப்பைத் தருவார் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.
நன்றி,
வணக்கம்.
(நேரம் ஒத்துழைக்க மறுத்ததனால் ஏற்பட்ட தாமதத்திற்கு மனம்வருந்துகிறேன். நன்றி.)

[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.