Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
oh our INDIA ??!!
#13
<b>சமாதான முயற்சிகளுக்கு சிங்கள அரசியல் வர்க்கத்தின் ஆதரவின்மையால் ஏற்படப் போகின்ற விளைவை இந்தியாவும் அமெரிக்காவும் தலையிடாவிட்டால் நீதியான, நேர்மையான சமாதானம் இலங்கையில் மலரும் </b>

சர்வதேச சமூகம் எவ்வாறு எதிர்கொள்ளும்?

இனப்பிரச்சினை விடயமாக இராமநாதன் காலத்திலே ஆரம்பித்து 1956 ஆம் ஆண்டு சிங்களம் மாத்திரம் என்ற சட்டம் வந்த காலத்தில் இனக் கலவரங்களையும், வன்முறைகளையும் தமிழர் எதிர் கொண்டனர். அதன் பின்பு 1958, 1961, 1977, 1981, 1983 முதலிய வருடங்களில் இனக் கலவரங்கள் ஏற்பட்டன.

1983 இல் இனக்கலவரங்கள் நடந்த போது அப்பட்டமான பகிரங்கமான இனப்படுகொலைகள் நடந்தேறின. 4000 க்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்களை பெற்றோல் ஊற்றி எரித்த சம்பவங்கள் நாகரிக உலகில் காணப்படவில்லை. இதை நேரில் கண்ணால் கண்ட இராஜதந்திரிகள் தங்கள் அரசாங்கங்களுக்கு விபரமாக எடுத்துக் கூறிவிட்டார்கள். இதை அறிந்த சர்வதேச சமூகம் அதிர்ச்சி அடைந்ததுடன் இந்தியா உட்பட அநேக நாடுகள் தமிழர்களை அகதிகளாக வரவேற்று உபசரித்தனர். அதேசமயம் சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்தை காட்டு மிராண்டித்தன்மையான நாட்டின் அரசாங்கமெனவர்ணித்தது ஆகவே 1983 இல் தான் தமிழ் பிரச்சினையில் சர்வதேச சமூகம் அக்கறை கொள்ளத்தொடங்கியது.

அயல் நாடாகிய இந்தியா தகுந்த நடவடிக்கை எடுக்குமென்று எண்ணி ஏனைய நாடுகள் நேரடியாகத் தலையீடு செய்யவில்லை. உண்மையில் பொது நல அமைப்பு நாடுகள் இலங்கை அரசாங்கத்தை, இனப்படுகொலை புரிந்ததன் காரணமாகவம், மனித குலத்துக்கெதிரான குற்றம் புரிந்ததன் காரணமாகவும் அந்த அமைப்பிலிருந்து விலக்கியிருக்க வேண்டும். ஏனெனில், சிம்பாப்வே அரசாங்கம் வெள்ளையர்களிடமிருந்த கமத் தொழில் காணிகளை எடுத்ததற்காக அந்த அரசாங்கத்தை பொதுநல அமைப்பு நாடுகளிலிருந்து தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்திருந்தது. அது போல் பாகிஸ்தானில் ஜனநாயகத்தை பறித்ததன் காரணமாக பொதுநல அமைப்பு நாடுகள் தற்காலிகமாக பாகிஸ்தானை இடைநிறுத்திவிட்டது. அப்படியானால் சிங்கள அரசாங்கம் பகிரங்க இனப்படுகொலைகளில் ஈடுபட்டகாரணத்தினால் ஐ.நா.வுடைய விதிக் கோட்பாட்டுக்கமைவாகவும் மனித குலத்துக்கு எதிரான காரணத்தினாலும் ஐயவர்தன அரசாங்கத்தை பொதுநல அமைப்பு நாடுகளிலிருந்து விலக்கியிருந்தால் பக்கச் சார்பு இல்லாத மக்கள் நன்றியுடன் வரவேற்றிருப்பார்கள்.

ஆனால், தற்போது சர்வதேச சமூகம் விட்ட தவறுகளை உணர்ந்து இலங்கையில் இரு இனங்களுக்கிடையே நடக்கும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முன்வந்துள்ளது.

ஜனாதிபதி சந்திரிகா ஆட்சியின் காலத்தில் நோர்வே அரசாங்கம் சமாதானத் தீர்வில் ஈடுபட்டது. ஆனால் கதிர்காமரின் கடும் போக்குத் தன்மையினால் நோர்வேயின் முயற்சிகள் தோல்வியைத் தழுவின. 2000 ஆண்டு இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சி வென்று ஆட்சிக்கு வந்தபின்னர் சர்வதேச சமூகம் எதிர்பாராதவகையில் விடுதலைப்புலிகள் தன்னிச்சையாக யுத்த நிறுத்தத்தை அறிவித்தார்கள். புலிகளின் யுத்த நிறுத்தத்தை, அவர்களை தடைசெய்த நாடுகள் உட்பட அனைத்து நாடுகளும் வரவேற்றன. ஐக்கிய தேசியக் கட்சியும் வரவேற்றதுடன் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் யுத்த நிறுத்தத்துக்கு உடன்பட்டது. இதன் விளைவாக விடுதலைப் புலிகள் அநேக ஆத்திரமூ ட்டும் செயல்களுக்கு மத்தியிலும் யுத்த நிறுத்தத்தை கடைப்பிடித்தார்கள்.

2001 தொடக்கம் 2003 சித்திரை மாதம் வரையில் உலகில் அநேக இடங்களில் நோர்வே நாட்டின் உதவியுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்தேறியுள்ளன. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைகளினால் ஏற்பட்ட உடன்பாடுகளை அரசாங்கம் அமுல்படுத்தாத காரணத்தினால் விடுதலைப் புலிகள் தற்காலிகமாகப் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகி விட்டார்கள்.

சென்ற கார்த்திகை மாதம் 1 ஆம் திகதி இந்த இக்கட்டான சூழ் நிலையிலும், விடுதலைப் புலிகள் தம்மால் தயாரிக்கப்பட்ட, இடைக்கால தன்னாட்சி நிருவாக சபை பற்றிய யோசனைகளை நோர்வே அரசு மூலம் சமர்ப்பித்தார்கள். இந்த யோசனைகளை அறிவித்த 4 ஆம் நாளில் ஜனாதிபதி, பிரதமர் இல்லாத சமயத்தில் மூன்று பிரதான அமைச்சுகளை தன்வசப்படுத்திக் கொண்டார். இதனால் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்துக்கும் சர்வ அதிகாரங்கொண்ட ஜனாதிபதிக்கும் இலங்கை கண்டிராத மிக மோசமான அரசியல் நெருக்கடி ஏற்பட்டுவிட்டது.

சமாதானத்துக்கு மிக அவசியமானது பாதுகாப்புத்துறை அது தன் வசமில்லாது விடில் சமாதான முன்னெடுப்புகளை தனது அரசாங்கம் செய்யமுடியாதெனச் பிரதமர் சொல்லிவிட்டார். ஆனால், தான் சமாதானப் பேச்சுவார்த்தைகளைச் செய்யாவிட்டாலும் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சைப் பொறுப்பேற்றபடியினால் அவரே சமாதானப் பேச்சுவார்த்தைகளை செய்யும்படி கூறிவிட்டார்.

புரிந்துணர்வு ஒப்பந்த காலங்களில் தென்னிலங்கையே பொருளாதாரத்துறையில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இதன் விளைவாக, தென்னிலங்கையில் பொருளாதார வளர்ச்சி 5 1ஃ2 வீதம் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், வடகீழ்த் தமிழ் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி 1ஃ2 வீதம் கூட ஏற்படவில்லை. ஆகவே, தென்னிலங்கையைப் பொறுத்தவரை யுத்தமும், சமாதானமும் இல்லாத பொழுதிலும் 5 1ஃ2 தொடக்கம் 6 1ஃ2 வீதம் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

ஆனால், 20 வருடகால யுத்தத்தை எதிர்கொண்ட தமிழ்த் தாயகம் ஒரு 1ஃ4 வீதம் கூ ட பொருளாதார வளர்ச்சியை எதிர்பாக்க முடியாது. இதன் விளைவாக தமிழ்ப் பிராந்தியத்தில் புனர்நிர்மாணம், புனரமைப்பு புனர்வாழ்வு அபிவிருத்தி எல்லாம் கடுமையாகப் பாதிக்கப்படும். இந்த நிலைமையில், விடுதலைப்புலிகளோ அல்லது தமிழ்ச் சமுதாயமோ பொறுமையுடன் இருக்க முடியாது. ஆகவே, இதற்கு சர்வதேச சமூகம் இந்நிலையை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்தென்ற கேள்வி உதயமாகின்றது. இந்த விடயத்தில் சர்வதேச சமூகம் இரண்டு விதமான சூழ்நிலைகளை எதிர்பார்க்கலாம்.

யுத்தமும், சமாதானமும் இல்லாத சூழ்நிலையில் யுத்த சூழ்நிலை.

உடனடியாக புனர்நிர்மாணம், புனரமைப்பு புனர்வாழ்வு அபிவிருத்தி முதலிய துறைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கனடா, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, அமெரிக்கா முதலிய நாடுகளும், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐ.நா. நிறுவனங்களும் ஒன்றிணைந்து புலிகளின் ஒத்தாசையுடன் அவசர நிதி உதவிகளை உதவ வேண்டும். இந்த நிதி உதவிகளை மனிதாபிமானமென்ற அடிப்படையில் உதவ முன்வரலாம்.

இது சர்வதேச சமூகத்தின் மனிதாபிமான தலையீடு என்றும் கருதலாம்.

இந்தச் சர்வதேச மனிதாபிமான தலையீட்டை இலங்கை அரசாங்கம் எதிர்த்தால் ஐ.நா.வுக்கு முறையீடு செய்ய வேண்டிய கடமையுண்டு. அதற்கு மேலாக, சர்வதேச சமூ கமும், உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கிகளும் இலங்கை அரசுக்கு நிதியுதவி செய்வதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு நிர்ப்பந்தமேற்படும்.

அதேநேரத்தில், ஐரோப்ய ஒன்றியம் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ விடுதலைப்புலிகளின் பொறுமையைச் சோதிக்க வேண்டாமென்று வலியுறுத்துவது கடமை.

யுத்த சூழ்நிலை

சில இராணுவப் பிரிவுகள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுத்தால், அதன் விளைவாக யுத்தம் வெடித்தால், ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஜப்பான் முதலிய நாடுகளுக்கு இலங்கையில் இந்த யுத்தத்தில் வெளிநாட்டுச் சக்திகள் பங்குபற்றலாகாது என்று பகிரங்கமாகச் சொல்ல வேண்டிய கடமையுண்டு. அரசாங்கம் யுத்தம் வெடித்தால் அமெரிக்காவையும், இந்தியாவையும் தங்களுக்கு உதவி செய்யும் படி கேட்கக் கூடும். ஆகவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி, நேர்வே, சுவீடன், டென்மார்க் போன்ற நாடுகள் இந்தியாவையும், அமெரிக்காவையும் இராணுவத் தலையீடு அல்லது இராணுவ உதவி அல்லது கடற்படை முற்றுகை முதலியவைகளை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்று சொல்லுவது அவசியம். இனிமேல் துரதிர்ர்;டமாக யுத்தம் வெடித்தால் அது பயங்கரமாகவே அமையும்.

ஆகவே, யுத்தம் வெடித்தவுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு அறிவித்து ஐ.நா. மூலமாக யுத்த நிறுத்தத்துக்கு ஒழுங்கு செய்வது அவசியம். ஐ.நா. அங்கீகாரத்துடன், இலங்கையில் அமைதி காப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் படைதான் அனுப்ப வேண்டுமென்ற நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் எந்தச் சூழ்நிலையிலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அமெரிக்காவோ, இந்தியாவோ, பிரித்தானியாவோ இராணுவ ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ இலங்கை விடயத்தில் தலையிடாக் கொள்கையை இந்த நாடுகள் கடைப்பிடிக்க வேண்டுமென்று பகிரங்கமாக ஐரோப்பிய ஒன்றியம் உலக சமுதாயத்துக்கு குரல் கொடுக்க வேண்டும்.

ஏனெனில், இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, சிங்களச் சமுதாயத்துக்கு பாரபட்சமாக நடந்து விட்டார்கள். இது சகலருக்கும் தெரிந்த விடயம். விசேடமாக இந்தியாவும், அமெரிக்காவும் தலையிடாவிட்டால் நீதியான, நேர்மையான, சமாதானம் இலங்கையில் மலரும் என்பதே தமிழ் மக்களின் கருத்து.

யாழ். குடாநாட்டில் இன்று ஐந்து இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் யாழ். குடாநாட்டில் ஐம்பதினாயிரத்துக்கு மேற்பட்ட சிங்கள இராணுவத்தினர் இனத்தாலும், மொழியாலும், மதத்தாலும் வேறுபட்ட ஆக்கிரமிப்பு இராணுவமாகவேயுள்ளனர். ஆகவே, பத்து அப்பாவி மக்களைக் கொல்வதற்கு ஒரு இராணுவ வீரர் எந்த அடிப்படையில் நியாயப்படுத்த முடியும். இந்த அநியாயத்தைக் கேட்கவிரும்பாக அமெரிக்காவோ, இந்தியாவோ, பிரித்தானியாவோ இலங்கையில் யுத்தம் ஏற்பட்டால் இராணுவ ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ தலையீடு செய்வதற்கு ஒரு வித உரிமையுமில்லை. நியாயமுமில்லை.

இந்த அடிப்படையில் அமைதிகாக்கும் படையோ? இந்தியப் படைகளோ, அமெரிக்கப் படைகளோ, பிரித்தானியப் படைகளோ சேர்க்கப்படலாகாதென்ற கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சர்வதேச அரங்குகளிலும் ஐ.நா.விலும் குரல் கொடுக்க வேண்டும்.

நன்றி: தில்லைக்கூத்தன் (தினக்குரல்)
Reply


Messages In This Thread
oh our INDIA ??!! - by anpagam - 12-13-2003, 12:27 AM
[No subject] - by anpagam - 12-14-2003, 01:02 PM
[No subject] - by aathipan - 12-20-2003, 04:16 AM
[No subject] - by Kanakkayanaar - 12-20-2003, 09:05 AM
[No subject] - by anpagam - 12-20-2003, 03:40 PM
[No subject] - by anpagam - 12-26-2003, 01:11 PM
[No subject] - by anpagam - 12-26-2003, 01:17 PM
[No subject] - by anpagam - 12-28-2003, 12:24 AM
[No subject] - by anpagam - 12-28-2003, 12:28 AM
[No subject] - by pepsi - 12-28-2003, 01:19 AM
[No subject] - by anpagam - 12-28-2003, 02:08 PM
[No subject] - by aathipan - 12-28-2003, 06:32 PM
[No subject] - by anpagam - 01-02-2004, 02:00 PM
[No subject] - by anpagam - 01-04-2004, 12:58 AM
[No subject] - by aathipan - 01-04-2004, 05:02 PM
[No subject] - by anpagam - 01-05-2004, 12:01 AM
[No subject] - by anpagam - 01-05-2004, 12:34 AM
[No subject] - by anpagam - 01-05-2004, 01:00 AM
[No subject] - by anpagam - 01-06-2004, 11:40 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 12:13 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 12:21 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 01:45 PM
[No subject] - by anpagam - 01-13-2004, 12:40 PM
[No subject] - by anpagam - 01-13-2004, 12:45 PM
[No subject] - by anpagam - 01-19-2004, 02:52 PM
[No subject] - by anpagam - 01-21-2004, 12:16 AM
[No subject] - by anpagam - 01-21-2004, 12:27 AM
[No subject] - by anpagam - 01-25-2004, 01:56 PM
[No subject] - by anpagam - 01-25-2004, 02:03 PM
[No subject] - by anpagam - 01-27-2004, 12:46 PM
[No subject] - by anpagam - 01-27-2004, 12:56 PM
[No subject] - by Mathivathanan - 01-27-2004, 03:23 PM
[No subject] - by anpagam - 01-28-2004, 01:10 AM
[No subject] - by Mathan - 01-29-2004, 12:32 PM
[No subject] - by anpagam - 01-29-2004, 11:57 PM
[No subject] - by Mathivathanan - 01-30-2004, 12:39 AM
[No subject] - by Mathan - 01-30-2004, 01:23 AM
[No subject] - by anpagam - 02-04-2004, 02:47 PM
[No subject] - by anpagam - 02-04-2004, 02:49 PM
[No subject] - by anpagam - 04-27-2004, 11:13 PM
[No subject] - by anpagam - 04-27-2004, 11:27 PM
[No subject] - by Mathan - 04-28-2004, 12:04 AM
[No subject] - by anpagam - 04-28-2004, 12:11 AM
[No subject] - by anpagam - 01-04-2005, 03:15 PM
[No subject] - by anpagam - 01-07-2005, 01:05 AM
[No subject] - by anpagam - 01-15-2005, 03:06 PM
[No subject] - by anpagam - 01-15-2005, 04:58 PM
[No subject] - by anpagam - 01-20-2005, 04:17 PM
[No subject] - by anpagam - 01-21-2005, 03:36 AM
[No subject] - by kavithan - 01-21-2005, 03:58 AM
[No subject] - by anpagam - 01-21-2005, 05:02 PM
[No subject] - by kavithan - 01-21-2005, 11:12 PM
[No subject] - by anpagam - 01-26-2005, 06:27 PM
[No subject] - by shiyam - 01-26-2005, 07:05 PM
[No subject] - by anpagam - 01-28-2005, 04:58 PM
[No subject] - by anpagam - 02-01-2005, 01:38 AM
[No subject] - by paandiyan - 02-01-2005, 12:40 PM
[No subject] - by anpagam - 02-02-2005, 02:26 AM
[No subject] - by paandiyan - 02-02-2005, 04:40 AM
[No subject] - by anpagam - 02-02-2005, 01:50 PM
[No subject] - by anpagam - 02-07-2005, 03:01 PM
[No subject] - by anpagam - 02-07-2005, 11:45 PM
[No subject] - by anpagam - 02-08-2005, 11:57 PM
[No subject] - by anpagam - 02-10-2005, 07:23 PM
[No subject] - by anpagam - 02-16-2005, 01:15 PM
[No subject] - by anpagam - 02-28-2005, 03:28 PM
[No subject] - by anpagam - 03-03-2005, 11:29 PM
[No subject] - by anpagam - 03-12-2005, 02:28 PM
[No subject] - by thivakar - 03-13-2005, 01:06 PM
[No subject] - by anpagam - 03-14-2005, 12:02 PM
[No subject] - by anpagam - 03-15-2005, 02:06 PM
[No subject] - by anpagam - 03-28-2005, 01:51 PM
[No subject] - by shiyam - 03-29-2005, 03:16 AM
[No subject] - by anpagam - 04-01-2005, 12:55 AM
[No subject] - by anpagam - 04-16-2005, 01:20 PM
[No subject] - by anpagam - 04-16-2005, 01:27 PM
[No subject] - by anpagam - 04-22-2005, 11:35 AM
[No subject] - by anpagam - 05-22-2005, 08:19 PM
[No subject] - by Mathan - 05-23-2005, 01:14 AM
[No subject] - by Baarathi - 05-23-2005, 07:32 PM
[No subject] - by Magaathma - 05-23-2005, 07:50 PM
[No subject] - by Baarathi - 05-23-2005, 07:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)