Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிந்தனைகள்!
#8
* மகிழ்ச்சியும், உழைப்பும் வாழ்நாளை வளர்ப்பவை. —பிராங்க்ளின்.

* ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தும் மதிப்பு கிடையாது. —பிராங்க்ளின்.

* கோபத்துடன் செயல்படுபவனும், புயலில் கப்பல் விடுபவனும் சரிசமமானவர். —பீச்சர்.

* தகுதியில்லாத புகழ்ச்சி, மறைமுகமான அவதுõறு. —போப்.

* விடாமுயற்சி உடையவன் விரும்பிய அனைத்தையும் பெற்று விடுகிறான். —ரூஸ்வெல்ட்.

* உணர்ச்சி அரியணையில் அமர்ந்திருக்கும் போது, அறிவு வெளியே போய்விடும். —எம்.ஹென்றி.

* தனது குற்றங்களை மறந்து, பிறரின் உள்ளத்தில் உள்ளதை கண்டுபிடிப்பது தவறு. —ரூசோ.

* பிறருக்கு நன்மை செய்பவன், தனக்கும் நன்மை தேடிக் கொள்கிறான். —ஜெனீக்கா.

* காலம், இயற்கை, பொறுமை இவையே சிறந்த மூலிகை மருந்துகள். —ஹென்றி போகன்.

* வீண் சொற்கள் விஷயங்களை பழுதாக்குகின்றன. —ஆண்ட்ரூஸ்.

* நிலத்தை நம்பி வாழலாம்; நிழலை நம்பி வாழக் கூடாது. —யங்.

* எங்கு அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு இருக்கிறது. —காந்திஜி.

* கல்வியின் பரந்த நோக்கம், மக்களை சிந்திக்கத் துõண்டுவதே. —கிரேன்மர்.

* மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம். ஆனால், அங்கேயே நீண்ட நாள் தங்க முடியாது.

—பெர்னாட்ஷா.

* கண்ணீர், துயரத்தின் மவுன பாஷை. —வால்டேர்.

* பாதையை சரியாய் போட்டால், பயணம் சுபமாக இருக்கும். —இங்கர்சால்.

* நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதங்கள் அபாயமான முடிவைக் கொண்டுள்ளன. —ஷேக்ஸ்பியர்.

* உங்கள் உள்ளம் உறுதியாக இருக்கும் வரை, உங்கள் முயற்சி எதிலுமே தோல்வியடைய மாட்டீர்கள்.

—பாஸ்டிசர்.

* இன்றே செயல்பட்டு, இன்றே சேமித்து, இன்றே நல்லது செய்தால் நாளைக்கு நன்றாக ஓய்வு எடுக்கலாம்.
—பிராங்க்ளின்.

* பகை, பொறாமை ஆகியவற்றை வெளியிட்டால் அவை வட்டியும், முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வரும். —விவேகானந்தர்.

நன்றி: தினமலர்
[i][b]
!
Reply


Messages In This Thread
சிந்தனைகள்! - by சாமி - 10-21-2003, 08:56 PM
[No subject] - by Kanakkayanaar - 10-23-2003, 09:15 AM
[No subject] - by kuruvikal - 10-23-2003, 11:11 AM
[No subject] - by சாமி - 10-25-2003, 07:52 PM
[No subject] - by சாமி - 10-29-2003, 08:33 PM
[No subject] - by சாமி - 11-16-2003, 06:07 PM
[No subject] - by சாமி - 11-22-2003, 11:10 PM
[No subject] - by சாமி - 01-02-2004, 01:44 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)