01-07-2006, 05:03 PM
இணைய ஊடகத்தால் புலம் பெயர்வாழ் தமிழ் இளையோர் நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக
தனது விவாதத்தை ஆளமாக வைத்துச்சென்றிருக்கிறார் அஜீவன் அவர்கள்.
அவரது கருத்தில் இருந்து.
<b>எந்த ஒரு முயற்சியை ஆரம்பித்தாலும்,
அதை குறை சொல்வதற்கு யாரேனும் இருந்தே தீர்வார்கள் என்பது எழுதப்படாத விதி! தற்காக முயற்சி செய்யாமல்
இருப்பதும், அதை தவிர்ப்பதும் சரிதானா என்று கேட்டால்.. சரியல்ல என்றே சொல்லத்தோன்றும்... </b>
என்று கூறிகிறார் அஜீவன். எந்த ஒருவிடயத்திலும் உள்ள நிறைகளை எந்த அளவிற்கு நாங்கள் ஏற்கிறோமோ
அதே அளவிற்கு அதில் உள்ள குறைகளைப்பற்றியும் நாங்கள் சிந்திக்கதவறின் அந்த முயற்சியில் உள்ள மறைமுகமான அல்லது நேரடியான பாதகங்களை நாங்களே எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத்தள்ளப்படுவோம். நிறைகளை ஏற்கத்தயாராக இருக்கும் முயற்சியாளன் கண்டிப்பாக குறைகளையும் ஏற்கத்தயாராக இருக்கவேண்டும் இல்லையே அவனால்
வெற்றிபெறமுடிமா..?? குறைகள் சொல்கிறார்கள் என்பதற்காக முயற்சியைக்கைவிடமுடியுமா..?? எதிர்நீச்சல் போட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்படவேண்டின் அவற்றைச்செய்து வெற்றி அடைவது ஒரு முயற்சியாளனது கடமை நொந்து கொண்டு ஒதுங்கிக்கொள்வது தனது முயற்சியில் அந்த முயற்சியாளனிற்கு இருக்கின்ற நம்பிக்கையின்மையையே காட்டும்.
<b>வாழும் காலத்தில் யாரையும் தூக்கிவைத்து கொண்டாடுவதில்லை.. அல்லது குறைந்த பட்சம் சரியான
மதிப்பு கூட தருவதில்லை உலகம்.</b>
உண்மை வாழும் போது மிகவும் தூற்றப்பட்ட கலைஞர்கள் நம் தமிழ் வரலாற்றில் இருக்கிறன்றார்கள். ஆனால் தூற்றுகிறார்கள் என்று அவர்கள் துவண்டுபோனார்களா..?? பாரதியார் எத்தனை எதிர்ப்புகளிற்கு மத்தியில் எத்தனை போராட்டங்கிற்குள்ளும் தனது படைப்புக்களை வழங்கிவிட்டுச்சென்றிருக்கிறார். சிறந்த கலைஞன் தன்னை பிறர் தூக்கிவைத்துக்கொண்டாடவேண்டும் என்று எதிர்பார்ப்பானா..??
தனது கருத்திறக்கு வலுவூட்டும் விதமாக ஒரு சிறிய கதையையும் கூறிச்செல்கிறார். இன்னும் கொஞ்சம் துணிவிலகாதா என்று பார்த்துக்கொண்டிருந்த
அந்த நபர் போன்றவர்களுக்கு இன்றைய சினிமாக்களில் பலகாட்சிகள் இருக்கின்றன இனிமேல் அப்படி கஸ்டப்படத்தேவையில்லையோ..?? :wink:
நல்லவற்றை நுகரத்தெரியாத எதிரணியினர் மூக்குடைபட்டு வந்து தமது அவலங்களை கொட்டுகிறார்கள் என்று கூறும் அஜீவன் அவர்கள் இப்படியான அனுபவங்கள் தமது அணியினருக்கு இல்லை என்று கூறுகிறார். இதற்கு என்ன கருத்துச்சொல்லப்போகிறார்கள் எதிரணியினர் பொறுத்துப்பார்ப்போம். இந்த கூற்று வெறுமனவே இந்தப்பட்டி மன்றத்திற்காக மட்டும் அன்றி நியமாகவே அது தான் நிலை என்றால் பாராட்டப்படவேண்டிய விடையம். :wink:
மேலும் அவரது கருத்துக்களைப்பார்க்கையில் இணையத்தின் நன்மைகள் பலவற்றை சிறப்பாக வைத்துச்சென்றிருக்கிறார். (இவை அனைத்தும் நமது புலம்பெயர்வாழ் இளையோருக்கு நன்மை தருகிறதா பொறுத்திருந்து பார்ப்போம். ) அரச நிர்வாகத்தில் இருந்து பொழுதுபோக்கு வரை மட்டுமன்றி அனைத்துத்துறைகளையும் இணையம் ஆக்கிரமித்துள்ளது என்ற கருத்தை முன்வைத்தார் அஜீவன் அவர்கள். இணையமானது கல்வி அபிவிருத்தியிலும் முக்கியமாக திகழ்கிறது என்கிறார். இது மறுக்க முடியாத உண்மை இதை இல்லை ஏன்று எதிரணியினரால் கூறமுடியமா..??
அண்மையில் நடந்த ஒரு சம்பவம் நினைவில் வருகிறது. எங்கள் கல்லூரியில் கல்விகற்கும் சகமாணவிக்கு ஒரு கடிதம் பெறவேண்டிய அவசர அவசிய தேவை வந்தது. அவர் உரிய இடத்திற்கு சென்று கேட்டபோது. எங்கள் சிஸ்டம் சட்டவுன் ஆகிவிட்டது வழமைக்குத்திரும்ப இன்னும் 2 நாட்கள் எடுக்கும் என்று கூறினார்கள். முற்றுமுழுதாக இணையத்தை தங்கியிருக்கும் போது இப்படியான சில பிரச்சனைகளையும் எதிர்நோக்கவேண்டி வரலாம். இவற்றைதவிர்க்கும் நடவடிக்கைகளை செய்து வைத்திருந்தால் அவற்றையும் வெற்றிபெறலாம்.
உலகஅரசியல் நிர்வாகம் என்று இணையம் புகுந்து விளையாடும் பல துறைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறார் அஜீவன் அவர்கள். இவற்றை இல்லை என்று கூறமுடியுமா எதிரணியினரால்?
மரணப்படுக்கையில் இருந்த தமிழ் இணையம் வழி பிராணவாயுவைப்பெற்று நோயாளியின் நிலையில் பிழைத்துள்ளது என்று ஒரு கருத்தை வைத்துள்ளார் அஜீவன். நோயாளியாச்சோ பிழைத்துள்ளதோ.. சில நோய்களை பெற்றுக்கொண்டிருக்கின்றது என்பது தான் உண்மை தமிங்கிலம் தங்கிலீஸ் என்று பற்பல வடிவங்களில் இணையங்களில் தமிழ் கையாளப்படுகின்றது. இது தமிழில் மட்டும் அல்ல ஆங்கிலத்திலும் உண்டு. குறிப்பாக எழுத்துவடிவில் சொற்கள் சுருக்கப்பட்டு புதிய முறையே உருவாகி வருகின்றது. இது எந்த அளவில் ஒருமொழிக்கு நன்மை தருகிறது என்பது கேள்விக்குறியே..??
இணையத்தின் நன்மையால் உருவாகியிருக்கின்ற யாகூ குழுக்கள் மற்றும் அதிகரித்துவருகின்ற வலைப்புதிவுகள் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். தமிழில் உள்ள இலக்கியங்கள் மின்னூல் வடிவில் இணையத்தில் கிடைக்கின்றன தமிழ்ப்பண்பாடு தொடர்பான ஒளி ஒலிக்காட்சிகள் இணையத்தில் இருக்கின்றன என்கிறார் அஜீவன். தமிழ் ஆராய்ச்சித்திட்டங்கள் பல இணையத்தின் ஊடாக உருப்பெற்று தங்கள் சேவையை ஆற்றிக்கொண்டிருக்கின்றன என்றும் கல்வி தொடர்பாக இணையம் வழங்கும் நன்மைகளை கூறிவிட்டிருக்கிறார். இளையோர்கள் அதிகமாக மாணவர்களாய் இருப்பார்கள் அவர்களிற்கு இது நன்மையில்லையா என்ன..?? புலத்தில் வாழ்பவர்கள் இலக்கியம் படிக்க புத்தகம் இல்லையே என்ற வருத்தத்தில் இருக்காது. மின்நூல் வாயிலாக கற்றுக்கொள்ள முடியும். அப்படி என்றார்கள் எங்கே எதிரணியினர் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.
யாழ்நூலக எரிப்பைப்பற்றி நினைவுகூரும் அஜீவன் அவர்கள். இணையவசதியிருந்திருந்தால் அந்த அரியபொக்கிசங்கள் மண்ணாகியிருக்கமாட்டாது பாதுகாக்கப்பட்டிருக்கும் என்கிறார்.
பத்திரிக்கைளிடம் இருக்கின்ற ஒரு சிறுமையைச்சுட்டிக்காட்டியிருக்கிறார். புகழ் பெற்றவர்கள் எழுதுபவையை மட்டும் எடுத்து பிரசுரிப்பார்கள் புதியவர்கள் புதிதாக ஆரம்பிப்பவர்களது ஆக்கங்களைக்கண்டு கொள்வதில்லை. ஆனால் இணையத்தில் அப்படி இல்லை எல்லாருடைய ஆக்கங்களும் வெளியிடப்படுகிறது. தாங்களாகவே வெளியிடமுடியும் என்கிறார். இது எழுத்துத்துறையில் இளையோருக்குக்கிடைத்த வரப்பிரசாதம் இல்லையா??. எதிரணியினர் என்ன கூறுகிறீர்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
இணையத்தினால் கிடைக்கும் இன்னொரு நன்மையை சுட்டிக்காட்டுகிறார் நாங்கள் பிறநாட்டில் இருந்து கொண்டும் எங்கள் கணணியில் உள்ளவற்றை பார்வையிடலாம் கணணியை இயக்கமுடியும் என்கிறார் இது நன்மையில்லையா.??
<b>இணையத்தை விட சக்தி வாய்ந்த இன்னொரு தொழில்நுட்பம் வரும்வரையில்.
இணைய ஊடகம் உலகத்தை ஆளும் எனக் கூறி </b>
கடைசியாக தனது கருத்தில் மேற்கண்டவாறு உறுதிபடக்கூறிச்செல்கிறார். எங்கே உலகத்தை ஆளும் இணைய ஊடகத்தால் புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர்கள் சீரழிகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>