01-07-2006, 11:47 AM
தற்ஸ்தமிழ்.காம் மட்டுறுத்தினர்கள் என்றவொன்றில்லாததால் எதையும் எழுதக் கூடிய பேச்சுச் சுதந்திரம் அங்குண்டு. புதிதாக அதிலும் யாழ். களத்திலிருந்து அங்கு வருபவர்களுக்கு அத்தகைய பேச்சுச் சுதந்திரத்தைச் சீரணிப்பதென்பது மிகவும் கடினமான விடயம் தான். அந்தக் களத்தின் சிறப்பென்னவென்றால் நாங்கள் என்ன தான் அளவுக்கு மீறிய வகையில் ஆளுக்காள் வாக்குவாதப் பட்டாலும் கூட, அங்கு யாரிடமும் யாருக்கும் தனிப்பட்ட காழ்ப்புணர்வு கிடையாது. நாங்கள் எந்த விடயத்தையும் விவாதித்து வெல்லுகிற நோக்கத்தில் தான் ஓவ்வொருவருக்கொருவர் தாக்கிக் கொள்கிறோமே தவிர உண்மையான வெறுப்பு ஒருவரிடமும் கிடையாது. இங்குள்ள போன்றில்லாமல் அங்கு பல்வேறு மாற்றுக் கருத்துள்ளவர்களும் நண்பர்களாகவுள்ளோம்.
உதாரணமாக நான் ஈழவிடுதலையையும் விடுதலைப் புலிகளையும் ஆதரித்துப் பிராமணர்களை எதிர்த்தும் வாதாடுவேன், ஓரு சிலர் ஈழத்தமிழர்களை ஆதரித்தாலும் விடுதலைப் புலிகளை விரும்பாமல் இருப்பார்கள். இவ்வளவு இருதுருவங்களாகக் கருத்துக்கள் கொண்டிருந்தாலும், நான் அந்தத் தளத்தில் வருவதை நிறுத்தப் போகிறேன் என்றதும் என்னைப் போகாமல் தடுக்க செய்திகளையும், தனிப்பட்ட மடல்களையும் அனுப்பியவர்களில் அதிகமானவர்கள் பிராமணர்களும், விடுதலைப் புலிகளை எதிர்த்து என்னுடன் வாதாடிய கபிலவஸ்துவும் தான். நாங்கள் சும்மா மாற்றுக் கருத்துக்களைத் தெரிவிக்கிறோமே தவிர ஒருவரையொருவர் வெறுப்பதில்லை. உதாரணமாக திருச்சி என்ற பிராமணரும் நானும் ஒரு களப்பிரிவில் ஒருவரையொருவர் தாக்கிவிட்டு, அடுத்த களப்பிரிவில் எப்பொழுது நான் இந்தியாவுக்கு வருகிறேன் என்பதைப் பேசிக் கொள்வோம். அங்கு நாங்களும் ஒரு குடும்பம் மாதிரித் தான். ஒரு குடும்பத்தில் எல்லோரும் ஓரே மாதிரியோ அல்லது ஒரே கொள்கையுடையவர்களாகவோ இருப்பதில்லை.
புதிதாக வருபவர்களை சந்தேகக் கண்ணோடு பார்ப்பதும், மாற்றுக் கருத்துக் கூறுபவர்களைக் கூட்டம் சேர்ந்து தாக்குவதும் இங்குள்ள வழக்கம். அப்படியெல்லாம் அங்கில்லை. தற்ஸ்தமிழ்.காமும் அதன் பெரும்பான்மை அங்கத்தவர்களும் பேச்சுச் சுதந்திரத்தை மதிப்பவர்கள். இங்கு கேட்பது போல் எதற்கெடுத்தாலும் அண்ணே அவரை தடை செய்யுங்கோ, இவரைக் கட் பண்ணுங்கோ என்ற குரலையெல்லாம் கேட்க முடியாது. அதனால் தற்ஸ்தமிழ்.காம் இந்தக் களத்தை விடச் சிறந்ததென்று நான் சொல்ல வரவில்லை. வித்தியாசமானது, சுதந்திரமானது.