01-06-2006, 10:51 PM
சிறிது இடைவெளியின் பின்னர் விவாதம் மீண்டும் தொடர்கிறது. (எல்லாரும் தூங்கீட்டினம் போல பக்கத்தை இருக்கிறவை தட்டிஎழுப்புங்கோ)
சரி வியாசன் அவர்கள் இணைய ஊடகத்தால் புலம் பெயர்வாழ் தமிழ் இளையோர் சீரழிகிறார்கள் என்ற தனது அணிக்காக என்ன சொல்லிச்செல்கிறார் என்று பார்ப்போம்.
என்ன இருக்கைக்கா பஞ்சம் ஏதோ ஓரு ஆசனத்தில உக்காத்தாச்சு அது தான் வேணும் இது தான் வேணும் என்று சண்டை போடல. எல்லாத்தாமரையும் அவரவர்க்களிடத்தையே இருக்கட்டும். (இந்தத்தாமரை விசயம் வம்பாய்ப்போச்சு)
கருத்துக்கு வருவோம் இணைய ஊடகத்தால் புலம்பெயர்வாழ் இளையோர் நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக கருத்தை வைத்த அந்த அணித்தலைவரின் கருத்தைக்குறிப்பிட்டு
<b>உலக மொழிகளில் இணையப்பக்கங்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில்
இருப்பது தமிழ் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. புதிய புதிய இணையத்தளங்களின்
தோற்றங்களும், அவற்றின் பயன்பாடுகளும் எத்தகையன என்பது எதிரணியினர் அறியாததா? </b>
அந்த இணையங்கள் எத்தனையோ தோன்றி மறைந்துவிட்டன என்கிறார் அவை குறிக்கோளின்றி பொழுதுபோக்கை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டவை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
இணையப்பக்கங்களிள் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் தமிழ் இருக்கின்றது என்பதால் தமிழ் இளையோர்கள் அவை யாவற்றாலும் நன்மை அடைகிறார்கள் என்று அறுதியிட்டுக்கூறமுடியாது அத்தோடு அவை யாவும் நன்மை பயக்கும் இணையங்கள் தான் என்றும் கூறிவிடமுடியாது. இணையப்பக்கங்களை உருவாக்குவதற்காக இலவச வசதிகளை பற்பல இணையங்கள் உருவாக்கிக்கொடுத்திருக்கின்றன. ஒருநாளைக்கு ஒரு பக்கத்திற்கு மேலாக தயாரித்துக்கொண்டு போகலாம்.
புலத்துத்தமிழ் இளையோர் இணையத்தை சரியாக பயன்படுத்தவில்லை என்று கூறும் வியாசன் அவர்கள். அப்படிப்பயன்படுத்தியிருந்தால் களத்தில் புனைபெயர்களில் உறுப்பினர்கள் உலாவத்தேவையில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். (குறிப்பாக தமிழினி பற்றிக்கூறியதால் தமிழினி என்ற பெயரில் எனக்கு அத்தனை பிரியம் அதனால் தான் தமிழினி என்ற பெயரை வைச்சிருக்கிறன். இந்தத்தமிழினியைக்குறிப்பிட்டிருந்தா இதைத்தான் சொல்லமுடியும்)
புனை பெயர்களில் வருவதற்குக்காரணம் பெரும்பாலும் உறுப்பினர்கள் தங்களை அடையாளப்படுத்த விரும்பாமையாக இருக்கலாம். அது இந்த நச்சரிப்புக்களை தவிர்க்கவே என்பது எவ்வளவு பொருந்தும் என்று கூறமுடியாது. மேலே கருத்தை வைத்துச்சென்ற ஒருவர் குறிப்பிட்டிருந்தார் தான் எழுதுவது பெற்றாருக்குத்தெரியாது என்று. அப்படியான காரணங்களிற்காகவும் இருக்கலாம். அதிகமாக ஆண் பெண் என்ற பேதம் இன்றி அனைவரும் புனைபெயரில் தானே வருகிறோம் ஒவ்வொருவரும் அதற்குரிய காரணத்தை சிந்தித்தால் தெரியும். :wink:
அடுத்ததாக ஒரு இணையத்தில் அரட்டை அடிக்கச்சென்ற போது தனக்குக்கிடைத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.
மகனது பெயரின் முன்பகுதியை பயன்படுத்திச்சென்ற வியாசன் அவர்களிடம் கணவன் பற்றி விசாரித்திருக்கிறார் அரட்டையில் அடுத்தமுனையில் இருந்தவர் (உங்கட மகன் பெயரின் முன்பகுதி பெண்ணின் பெயரா இல்லை அந்த ஆசாமிக்கு ஏதாவது பிரச்சனையோ) எதுவானாலும்.
இந்த இணைய அரட்டையின் சீரழிவுகள் பற்றி முன்னால் வந்த இதே அணியினரும் சுட்டிக்காட்டியிருந்தார்கள் இதில் என்ன நன்மையிருக்கிறது என்பதை எதிரணியினர் தான் சொல்லவேண்டும். நட்புத்தேடுகிறோம் என்ற பதில் வைக்கப்பட்டிருந்தது இப்படியான நட்பைத்தேடுவது ஒரு சீரழிவில்லையா அப்படி என்று கேக்கிறார்கள். எங்கே பதில் எப்படி வருகிறது என்று பார்ப்போம்.
இப்படி கசப்பான அனுபவத்தை பெற்ற பெற்றோர் பிள்ளைகளை இணையத்தில் உலாவ அனுமதிப்பார்களா என்று கேட்டிருக்கிறார் வியாசன். இணையத்தில் இந்த அரட்டை தவிர்ந்த இன்னும் எத்தனையோ விசயம் இருக்கிறது. அரட்டை அறைக்குள் மட்டும் ஏன் செல்கிறீர்கள் என்று கூறுவார்களா எதிரணியினர் பார்ப்போமே..??
இந்தப்பட்டி மன்றத்தில் தனிப்பட்ட அதுவும் பட்டிமன்றத்தில் இல்லாதவர்களைப்பற்றிய கருத்தாடல்களைத்தவிர்த்துக்கொள்வது நல்லது என்று நினைக்கிறேன். இதனால் வேறு பிரச்சனைகள் மனஸ்தாபங்கள் வரக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு. தயவு செய்து இப்படியான கருத்துக்களை தவிர்ப்பது நல்லது.
ஆபாசப்படங்களை பேரூந்துகள் மற்றும் சுவர்களில் இணையத்திற்கு முதலே ஒட்டினார்கள் என்ற கருத்திற்கு பதில் வைக்கையில் அப்படி ஒட்டும் போது மாட்டினால் தர்ம அடிகிடைக்கும் ஆனால் இணையத்தில் அப்படி இல்லை என்கிறார் வியாசம்.
பேரூந்துகள் மற்றும் சுவர்களில் ஒட்டப்படும் ஆபாசப்படங்களை பார்க்கும் பெரியவர்கள் பெற்றோர்கள் (பிறர் நலனின் அக்கறை உள்ளவர்கள்) அவற்றை அகற்றிவிடுவார்கள். இணையத்தில் உள்ள படங்களை யாரும் அகற்றமுடியாது. யாழ் போன்ற கருத்துக்களங்களில் நிர்வாகிகள் அகற்றமுடியும். ஏனையவற்றில் தொடமுடியுமா..??
தொப்பிளில் பம்பரம் விட்டது தொடர்பான கருத்து வந்தது. தொப்பிளில் பம்பரம் விட்டது இளையோரா..?? கொஞ்சம் மேக்கப் பண்ணி இளைமையாய் நடிச்சா இளைஞன் என்று ஆகிவிடுமா என்ன..?? :wink: சினிமாவை சினிமாவாய் ஆபாசம் இன்றி எடுக்கும் ஒருசில இளைஞர்களும் இருக்கிறார்கள். அதே நேரம் ஆபாசத்தை படமாக்கி சினிமாவை சீரழிக்கும் பெரியவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் இல்லை என்கிறீர்களா..??
தனது கருத்தில் அடுத்ததாக விஞ்ஞான தொழில்நுட்பத்தை இளைஞர்கள் எப்போதும் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சுமத்தும் வியாசன் அவர்கள் ஒரு உதாரணமாக ஒரு மாணவன் அனுப்பிய கைத்தொலைபேசியில் எடுக்கப்பட்ட படம் பற்றிசொல்லியிருக்கிறார். இப்படி அருமையான தொழில் நுட்ப வளர்ச்சியை சீரழிவிற்கு பயன்படுத்துகின்ற இளையோரிற்காக வருத்தப்படத்தான் முடியும்.
கைத்தொலைபேசி தொலைத்தொடர்பிற்குப்பயன்படுத்தபடின் அதில் வீடியோ தொழில்நுட்பம் எதற்கு?? என்ற கேள்வியை எழுப்பாமல் பிள்ளைக்கு அதனை வாரிவழங்கிய பெற்றோர்களின் நல்ல மனசைப்பாராட்டவே வேணும். ( ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்ளும் மாணவன் என்றால் அவர் சிறியவரும் அல்ல எல்லாம் பிஞ்சில பழுத்ததால் வந்த வினையோ என்னவோ)
இந்த விஞ்ஞான தொழில் நுட்பத்தையும் வீடியோ தொலைபேசியையும் வைத்துக்கொண்டு இன்னும் பல இளைஞர்கள் உலகம் எங்கிலும் இருக்கின்ற செய்திகளை நமக்கு உடனுக்குடன் வழங்குகிறார்களே அதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேக்கிறார்களா எதிரணியினர் பார்ப்போமே.??
சாதாரண இணையத்திற்குகூட நின்மதியாக செல்லமுடியாத படி ஆபாசப்படங்களை போடுவதும் தங்கள் கணணியை தொல்லைப்படுத்துவதுமாய் இளையோர்கள் பலவற்றைச்செய்கிறார்கள் என்று நொந்தவண்ணம் கூறிச்செல்கிறார்.
இந்த தொல்லைகளைத்தவிர்க்கத்தானே பல நிறுவனங்கள் ஆன்ரி வைரஸ்களை உற்பத்தி செய்து விட்டிருக்கின்றன இவற்றை நினைத்து நித்திரையைத்தொலைக்காமல் வாங்கிப்பாவித்து பயனடையுங்கள் என்று கூறிக்கொண்டு அடுத்த அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>