01-05-2006, 08:03 PM
<b>சின்னக்குட்டி
எந்த ஒரு நாடும் தன் நலத்தை முதலில் முன்னிலைப் படுத்தியே அடுத்தவர்கள் நலத்தில் அக்கறை காட்டும். அது இந்தியாவிற்கு மட்டும் விதிவிலக்கல்ல. நாம் கூட எமது நலம் சார்ந்தே பல விடயங்களில் அக்கறை காட்டுகின்றோம். அது போல அருகில் உள்ள எந்தவொரு நாட்டுடனும் நட்புறவோடு இருக்கவே எந்த நாடும் விரும்பும். இந்தியாவும் இலங்கையைப் பொறுத்தவரை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக்கவும் முடியாது. அதுபோல் அதனைத் தட்டிக் கழித்துவிடவும் முடியாது. இலங்கை இந்தியாவிடம் உதவி கேட்டு அது செய்யா விடின் இலங்கை இன்னொரு நாட்டிடம் உதவி கேட்பது தவிர்க்க முடியாததே. அதனால் மூன்றாவதாக ஒரு நாடு இலங்கைக்கு உதவி வழங்க வந்து அந்நாடு இந்தியாவிற்கும் வேண்டப்படாத ஒரு நாடாக இருந்தால் அது இந்தியாவிற்கு பாதிப்பாகவே அமையும். அதனால் முடிந்தவரை இந்தியா இலங்கையுடன் ஒரு சுமூகமான ஒரு உறவையே பேண விரும்பும். அதனாலேயே சில அமைப்புத் திட்டங்களை அறிவிக்கின்றது. அதுபோலவே இலங்கையில் அமைதியும் சமாதானமும் ஏற்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்தி வருகின்றது. நீங்கள் சொல்வது போல் இந்திய அரசியலும் அரசியல்வாதிகளும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களில்லையென்றால் நாமும் அதற்கு உட்பட்டவர்கள் தான். தவறுகளை சுட்டிக் காட்டி அதற்குரிய விளக்கங்களை சினேகிதமாக பெற முயற்ச்சிக்கலாம். ஆனால் சில ஊகங்களின் அடிப்படையில் வரும் செய்திகளை வைத்து விதண்டாவாதமாக விமர்சனமாக்கினோம் என்றால் அது வீண் பகைமையையும் பிரைச்சினைகளையுமே வளர்க்க உதவும். எந்த விடயங்களையும் நாம் சிலகணம் அடுத்தவரின் நிலையிலிருந்து சிந்தித்துப் பார்ப்போமாயின் பல விடயங்களை நாம் இலகுவாகப் புரிந்து கொள்ள உதவும்.</b>