12-29-2003, 06:06 AM
மகேஸ்வர ஜாலம்!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெறும் சர்வதேச மகாபாரத மாநாட்டில் பங்குபற்றுவதற்காக சென்றிருந்த இலங்கை இந்துசமய கலாசார அமைச்சர் தி.மகேஸ்வரன் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த சமயம் இரண்டு விடயங்களைத் தெரிவித்திருக்கின்றார். ஒன்று - தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது போன்ற மதமாற்றத் தடுப்புச் சட்டம் அடுத்த வருட முற்பகுதியில் இலங்கையிலும் கொண்டுவரப்படும். மற்றது - இலங்கை, இந்திய இந்துசமய நட்புறவுக் கழகம் அநேகமாக அடுத்த பெப்ரவரியில் அங்குரார்ப் பணம் செய்துவைக்கப்படும். - இவையே அவர் வெளியிட்ட தகவல்கள்.
இந்த இரண்டு நடவடிக்கைகளையும் தாமே தமது அமைச்சின் ஊடாக நேரடி யாகவே செய்யப் போகின்றார் என்பதை சென்னையில் அவர் திட்டவட்டமாக தெரி விக்காவிட்டாலும் இந்த அறிவிப்பு, அவர் அடுத்த ஆண்டி லும் தொடர்ந்து தமது அமைச்சர் பதவியைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பதில் உறுதியாக இருக்கின்றார் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இதே அமைச்சர் ஐந்து வாரங்களுக்கு முன் நாடாளு மன்றத்தில் ஏற்படுத்திய பரபரப்பையும், விடுத்த அறிவிப் பையும் மக்கள் விரைந்து மறந்துவிடுவர் என அவர் எதிர்பார்க்கின்றார் போலும்! எனவே, அதை நினைவூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது.
தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள - இன்னும் தீர்க்கப் படாத - பாதிப்புகளுக்கு உடனடியாக அரசு பரிகாரம் காணவேண்டும் என்று தெரிவித்து அதற்கு டிசெம்பர் 30ஆம் திகதிவரை காலக்கெடு விதித்திருந்தார் அமைச் சர் மகேஸ்வரன்.
அத்திகதிக்குப் பின்னர் ஐ.தே.மு. அரசுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவதா, இல்லையா என்பதைத் தாம் தீர்மானிப்பார் என்றும் - தேவையேற்படின் எம்.பி. பதவியைக் கூட இராஜினா மாச் செய்யுவும் தாம் தயார் என்றும் - அவர் சூளுரைத் திருந்தார். அதுவும் வெளியில் சாதாரண கூட்டம் ஒன்றிலோ, நிகழ்வு ஒன்றிலோ அவர் இதைக் கூறவில்லை. நாடாளு மன்றத்தில் - அதுவும் வரவு - செலவுத் திட்டம் மீதான முக்கிய உரை ஒன்றிலேயே - இவ்வாறு அவர் முழங் கினார். அவர் கொடுத்த காலக்கெடு நாளையுடன் முடிவடை கின்றது. ஆனால், நாடாளுமன்றத்தில் பெரும் களேபரம் ஏற்படுத்தும் விடயத்தை - காலக்கெடு விதித்துத் தாம் முழங்கியதை - அவர் மறந்துவிட்டார்போல் படுகின்றது. இது விடயத்தில் அவரது மௌனத்தை அப்படித்தான் கருதவேண்டியுள்ளது. வரவு - செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமயம் திடீர்ப் பொதுத் தேர்தல் நடக்கலாம் என்ற சூழ்நிலை. தேர்தல் கருமேகங்கள் கருக்கட்டி வந்த நிலைமை. எனவே, தேர்தல் வந்தால் யாழ். மக்களுக்கு எப்படி முகங்கொடுப்பது, அடுத்த தேர்த லில் போட்டியிடுவதற்கான இணக்க நிலையை எப்படி ஏற்படுத்துவது என்ற கணக்குகளை மனதில் போட்டுப் பார்த்துக் கொண்டுதான் அதற்கேற்ப அவர், உடைத்த சோடாப் புட்டி போல அப்போது அப்படி சீறினார் என்று பலரும் கருதினர். அவர்கள் எதிர்பார்த்தது போல திடீர்ப் பொதுத் தேர்தல் உடனடியாக நடக்கும் வாய்ப்பு இல்லை. அது தள்ளிப் போகும் என்ற சூழ்நிலை மாற்றம் ஏற்பட்டதும் உடைத்த சோடாப் புட்டி சீறி அடங்குவது போல அடங்கி, இப்போது ஷகாஸ் இழந்த சோடா|வாக அடங்கிப்போய் நிற்கின்றார். நாடாளுமன்றில் அதிர் வேட்டுக்களை முழங்குவதும், அரச நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அதிரடிப் பாய்ச் சல்களை நடத்துவதும், திடீரெனப் போய் எதிர்த்தரப் பில் உள்ள ஜனாதிபதியைச் சந்தித்து, அவருடன் புகைப் படத்துக்குப் ஷபோஸ்| கொடுத்து, பின்னர் ஊடகங்களில் அவரை வானளாவப் புகழ்ந்து தனது கட்சியின் தலை மைக்கு வயிற்றில் புளியைக் கரைப்பதும் - இவ்வளவும் செய்து, ஆட்சி - அரசு - தலைமையைக் குழப்பத்தில் ஆழ்த்திய பின்னர் அங்கிருந்து சுண்டி எறியப்படும் சலுகைகளை சுவீகரித்ததும் அடங்கிப் போவதும் - வழமையான ஷமகேஸ்வர மகிமைதான்!|
கடைசியாக இவ்வருடம் அவரது அமைச்சுக்குப் பிரதமர் ஒதுக்கிய மேலதிக பத்துக் கோடி ரூபாவோடு அடங்கிப்போனவர் மீண்டும் நவம்பரில் குதித்து காலக் கெடு விதித்தார். இப்போது மீண்டும் காலக்கெடு விதித்ததையே மறந்து - அமைதிகாத்து - தாம் பிடித்துவைத்திருக்கும் ஷஅரை அமைச்சுப் பதவியை| கெட்டியாகப் பற்றிக்கொண்டு - மௌனம் பேணுகின்றார். காலக்கெடுவை மறந்து மௌனம் பேணுவதற்கு இப்போது அரசுத் தரப்பு தமக்குச் சுண்டி எறிந்த சலுகை எது, அல்லது எவ்வளவு என்பதை அவர் வெளிப்படுத் துவது நல்லது. இல்லையேல், தமது அறிவிப்பின்படி - தமக்குத் தாமே விதித்த காலக்கெடுவின் பிரகாரம் - அமைச்சுப் பதவி யையும், எம்.பி. பதவியையும் துறப்பதுதான் நியாயம். மேற்படி அறிவிப்பை அவர் நாடாளுமன்றத்தில் விடுத்த சமயம் பேரினவாதம் அவருக்கு எதிராகக் கிளம்பியது. தமிழ் எம்.பிக்கள் ஒன்றுபட்டு அவருக்காகக் குரல் எழுப் பினர். அப்படித் தமக்காகக் குரல் எழுப்பியோரின் போக்கை நியாயப்படுத்தும் விதத்திலாவது அமைச்சர் மகேஸ்வரன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
உதயன் ஆசிரியர் தலையங்கம் 29-12-2003

[i][b]
!
!