Yarl Forum
மகேஸ்வரன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மகேஸ்வரன் (/showthread.php?tid=7966)

Pages: 1 2 3 4


மகேஸ்வரன் - தணிக்கை - 10-20-2003

கல்லுன்டாய் வெளியிலை அமைச்சர் வீடுகட்டி சனத்துக்கு கொடுகிறாராம்.


- yarl - 10-20-2003

நல்ல விடயம்.முடிந்தால் யாழ்ப்பாணத்திற்கு ஒரு நீச்சல் குளமும் கட்டிக்கொடுக்கசொல்லுங்கள்.சுற்றிவர கடலிருந்து என்ன பிரயோசனம்? யாழில் எத்தனை பேர் நீந்துவார்கள்?


அதுசரி அமைச்சர் எப்போது புனர்வாழ்வு அமைச்சர் ஆனார்?

புனர்வாழ்வு அமைச்சர் ஜெயத்திலக என்ன செய்கிறார்?


- Paranee - 10-20-2003

அவர் இப்ப இவற்றை பணியை பார்க்கின்றார். இவர் இப்ப அவற்றை பணியை பார்க்கின்றார்.
எனக்குத்தெரிந்து அந்த வல்லைப்பாலம் இதுவரையும் திருந்தினபாடில்லை


- தணிக்கை - 10-20-2003

அதைவிட பெரிய நகைசுவை காரநகர் பாக்கமுடியாது
அப்படி அபிவிருத்தி தனி புதிய அரச அலுவலக கட்டிடம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு
குழம் எல்லாம் இரனைமடுவுக்கு போட்டமாதிரி கட்டுபோடுபடுகிறது.
பாத்தால் றால் பன்னை வளக்கலாம் போல கிடக்கு


- தணிக்கை - 10-20-2003

சொல்ல மறந்த கதை 24 மனி நேரமும் மின்சாரம். அனைத்து வீடுகளுக்கும் சுற்றுமதில் போடுபடுது.
காரைநகரில் வீட்டுக்கொருவர் அரச உத்தியோகத்தர் நம்புவியளோ?
24 மனி நேர அபிவிருத்தி இலங்கையிலை அங்குதான் நடக்குது.
நான் கண்னால் போய்பார்த்தேன்.
கயுhனா பீச்சுக்கு 24 மனி நேர கறன் கொடுத்திருக்கு.


ஆனால்

காங்கேசன்துறை சீமேந்து ஆலையின் பின் வீதியால் போனன்.
பாக்கமுடியாது சீமேந்து ஆலை ஒரு காட்ச்சிப்பொருள்மாதிரி கிடக்கு.
கீரிமலையிலை இருந்த ஒரு கோவிலை இப்ப ஆமியின் கிறிகெட் மைதானமாம் அப்படி துப்பரவாக்கி விளையாட்டு அரங்காக்கி இருக்கு.

கீரிமைலையிலை ஆண்கள் நீராடும் கேனியிலை சிங்கள பெண்டுகள் நின்டு குளிக்கினம் நிலைமை அப்படி மாற்றம்.

போகும்போது இறானுவ வாகம் ஒன்று பார்த்தன் எங்களை ஊடறுத்து போச்சுது என்ன என்டால் ஒரு குடும்பமே இருக்கு வந்த ஆமி காறனிடம் கேட்டன் அது மாத்தய அதாவது பெரியவரின் குடும்பம் பாடசாலைக்கு படிக்கப்போய்போகுது என்டு சொன்னார்
புரியுதோ அங்கை ஆமியின் குடும்பத்திற்கு வீடு பாடசாலை போக்குவரத்து கடை எல்லாம் போட்டு கொடுத்திருக்கு.
பெரியவர் பலாலியிலை வேலை பென்டாட்டி பிள்ளைகளை பாடசாலைக்கு ஆமி றக்கிலை கூட்டிபோறது நிலமை இப்ப உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கு.
இன்னும் சொல்லப்போனால் சிங்கள பாடசாலை
பல புத்த கோவில்கள் அதாவது எங்கு எங்கு எல்லாம் அரசமரம் கானப்படுதோ அதெல்லாம் பன்சல

சீமேந்து ஆலையிலை சிறு கல்லுப்பட்டால் கொட்டுன்டு விளும்போல கிடக்கு.

நகுலேஸ்வரத்தில புhசை நடக்குது.
ஆனால் 5 மனிக்கு ஜயர் வீட்டை போகவேனும்.


இன்னும் தொடர்ந்துவரும்.


- Paranee - 10-20-2003

இது 5 வருடத்திற்கு முற்பட்ட செய்தியய்யா !
கப்பலிலைபோய் வரும்போதே நான் பாடசாசைகளையும் படிக்கும் சிங்கள மாணவர்களையும் பார்த்திருக்கின்றேன்


- தணிக்கை - 10-20-2003

அது செய்தி இது எனது கண் கன்ட விடயம் அதனாலே இதை இங்கு பகிர்ந்தேன் இன்னும் தருகிறேன்.


- தணிக்கை - 10-20-2003

அந்த அந்தியேட்டி செய்கிற கோவில் மண்டபத்தின் உச்சி மடியில் அதாவது மண்டப முடியிலைதான் ஆமியின் ஓ பி என சொல்லப்படும் காவலரன் இருக்கு ஆண்டவா என்டு தலையை உயத்த ஆமிக்காறன் துவக்கோட நின்டு சிரிக்கிறான்.

ஒரு தேனீர்கடை ஆமியிலை லீவு கொடுக்காமல் ஓவ் ரயிமிலை நிக்கிறவை அந்த தேனீர்கடையை நடத்துகினம்.

பரமேஸ்வரா கொலிச்சும் அங்காலை அதோடை கூடிய ஒரு பென்கள் பாடசாலைக்கும் மானவர் போய்வருகினம் அவர்கள் மட்டும் அந்த பாதையால் போய்வரலாம் ஆனால் பாடசாலைக்கு போறதற்கு விசேட பேருந்து கொடுத்திருக்கு அதிலைதான் போகினம் சயிக்கிலில் வருபவர்களும் வரலாம்.

பொன்னம்பல வானெஸ்வரம் என்டு நினைக்கிறன் அதுக்கை ஒரு மயில் கூட்டுக்கை அடைச்சிருக்கு அதாவது கீரிமலைக்கு திரும்புற பாதை அந்த கோவில் பின் வீதியாலைதான் திரும்பி போகவேனும் கீரிமலைக்கு.
கோவில் உடைச்சு திருப்பி கட்டினமாதிரி கிடக்கு ஆனால் கோவிலுக்குள்ளை இருக்குற கடவுள் எல்லாம் புதுசு போலகிடக்கு ஏன் என்டால் பல சிற்பங்களை கானவில்லை சிலது வெறும் கூடாக கிடக்கு புhசாரி அரிச்சனை செய்ய கேட்க வசந்தமன்டபம் வரைக்கும்கூட்டிப்போனார் அப்பவே புரிஞ்சுட்டுது இது இன்னும் கும்பா அபிசேகம் முடியவில்லை என்டு.

தொடரும்.


- Paranee - 10-20-2003

நானும் கண்களால் கண்டேனய்யா !
Quote:அது செய்தி இது எனது கண் கன்ட விடயம் அதனாலே இதை இங்கு பகிர்ந்தேன் இன்னும் தருகிறேன்.



- Paranee - 10-20-2003

இன்னமும் தாருங்கள் சேது
ஊர்ப்புதினங்கள் இப்படிக்கேட்பது எவ்வளவு ஆனந்தம்


- Mathivathanan - 10-20-2003

தமிழீழம் வாங்கியாச்சோ.. அதை முதலிலை சொல்லுங்கோ.. 87 ஆம் ஆண்டிலையிருந்து இன்றுவரை சண்டை பிடிச்சதே அதுக்குத்தானே.. அவன் அங்கை யிருக்கிறான் இவனிருக்கிறானெண்டு சுத்துறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Mathivathanan - 10-20-2003

கருத்து வாறதும்.. மாயமா மறையிறதையும் பார்க்க வாங்கியாச்சுப்போலைத்தான் கிடக்கு.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- தணிக்கை - 10-21-2003

இதையும் எளுதின இடம் தெரியாமல் எடுத்தால் நான் கருத்துகளத்தில் இருந்து வெளியேறுவதாக தீர்மானித்துள்ளேன்.

காரனம் தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் இடத்தில் நான் இருக்க விரும்பவில்லை.



சரி கீரிதலை காங்கேசன் துறை போனம்.

இறானுவ சிப்பாய் எமது பயனத்திற்கு காவல் தந்துகொன்டிருந்தார்.

சிறுது}ரம் போனபின் அவரும் எமது நன்பாராகி கொன்டார்.

எத்தனைவயது என கேட்டோம் 21 வயது என சொன்னார். ஆனால் பாத்தால் 18 வயது இருக்கும்.
3 வருடத்தை ஒருமாதிரி களித்துவிட்டேனாம். இன்னும் 4 வருடம் எப்படியாதல் தப்பிவிட்டால் சரியாம்.

ஏன் என கேட்டேன் 30 இலட்சம்வரை கடன் எடுக்கலாமாம் அதை எடுத்துக்கொன்டு மிடில் ஈஸ்ற்கு ஓடலாமாம்.

தன்னைப்போல பலர் அதை செய்துபோட்டார்களாம் அதுமட்டுமோ தன்னிடம் இருக்கும் துவக்கை தான் ஒரு இலட்சம் ருபாய்கு விக்க றெடியாம்.

தனக்கு எங்காவது கிளக்குமாகானம் அல்லது தென் இலங்கைக்கு மாற்றம் கிடைத்தால் தான் துவக்கை வித்துப்போட்டு கடனும் எடுத்துக்கொன்டு மாறலாமாம் ஆனால் அவற்றை பலாலியில் இருந்து செய்யமுடியாதாம் காரனம் ஓட இடம் இல்லையாம். யாழ்பானம்போய் புலிகளின் இடத்தால் ஓடியும் தப்பமுடியாதாம்.

தான் இன்னும் 2 வருடம் முடித்தால் தென் இலங்கைக்கு மாற்றம் வருமாம் அதற்குப்பிறது அதை செய்யபோறனாம்.
இப்ப 3 வருடம் பலாளி வாள்கையாம்.

இன்னும் 2 வருடம் சன்டை வராமல் இருந்தால் தான் தப்பிவிடுவனாம்.

தங்களுக்கு சாராயம் குடிக்க அனுமதி இல்லையாம் ஆனால் செற்றாக சேர்ந்து ஆரும் சனத்திடம் பறித்தால் அதை இரவோடு இரவாக குடிப்பமாம்.

பெண்னுக்கான ஆசைவந்தால் நீக்கப்பட்டுள்ளது.

ஒரு முகாமில் ஒரு பற்றாலியன் இறானுவம் இருந்தால் அதைவிட அரைபங்கிலும் கூடிய பென் பற்றாலியனை இப்பபோட்டிருக்காம் நீக்கப்பட்டுள்ளது.

ஆனால் பொறுப்பான பெரியவருக்கு ஒன்றும் தெரியகூடாதாம் ஆனால் அவர் தங்களைவிட மோசமானவராம்.

தொடரும்...............


- Paranee - 10-21-2003

தேவைதானா ?


- yarl - 10-21-2003

நேற்று வந்தவர் ஒருவர் சொன்னார் .ஆமிக்காரன் பலாhலியைச்சுற்றி தோட்டம் வாழைமரம் என்று நிறைய செய்துள்ளான் என்று..

ஆயிரக்கணக்கில் ஆமியை வைத்துக்கொண்டு அவங்களும் என்ன செய்வது?அதுதான் தோட்டம் செய்திருக்கிறாங்கள் போலை..

வரிப்பிரச்சனை கேட்டேன் .கடைகளில் 3 பற்றுச்சீட்டு என்று சொன்னார்

அரச உத்தியோகத்தவர் நேரம் கடந்து வேலைக்குசெல்வது நேரத்தோடு வேலையால் வருவது
எல்லாம் கண்காணிப்புக்குள்ளாகியிருக்கிறதாம்...

பள்ளிக்கூட வாத்திமார் பள்ளிக்கூடத்தில் சிலபஸ் முடிக்காமல் ரியுூட்டரியில் படிப்பிக்கமுடியாதாம்.


- Mathivathanan - 10-21-2003

யாழ்.. இருப்பவர்களது குறிக்கோள் வெளிநாடுபோய் நிரந்தரமாக குடியேறுவது என்ற செய்தியையும் தந்தாரா..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- yarl - 10-21-2003

இல்லை சனம் யாழில் வெளிநாட்டை விட வசதியாக வாழ்கிறார்கள் (அநேகமானோர்)என்றும்.தன்னை ஒரு கடைக்காரன்
நீங்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறியள் என்பதை நம்பமுடியவில்லை என்று சொன்னதாகவும் கூறினார்.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

பொடியளை விட இப்ப சனம் வீரமாக இருப்பதாக சொன்னார்.


- P.S.Seelan - 10-21-2003

ஆமாம் அது நூற்றுக்கு நூறு உண்மை சனம் வாரது வரட்டும் என்று வீரமாகத்தான் இருக்கின்றார்கள். பொடியள் வீரம் காட்டினால் கண்துடைப்புக் குழுவல்லோ சண்டைக்கு நிக்குது. ஆனால் வெளிநாட்டுச் சனம் நிறைய நிரந்தரமாய் வந்து தங்க அலுவல்கள் பார்த்துக் கொண்டிருக்கினம்.

அன்புடன்
சீலன்


- தணிக்கை - 10-21-2003

அதை விட சொல்லவோ?

ஜரோப்பாவில வாளுற எத்தனை தமிழ் குடும்பத்திடம் சற்றலைட் ரீவியும் அன்ரநாவும் இருக்கு?

ஆனால் யாழ்பானத்திலை எடுத்த கனிப்பீடு 9000 பேர் இதுவரை புhட்டிப்போட்டினம் இன்னும் பத்தாயிரம்பேர் புhட்டப்போயினம் நம்பமுடியுமோ.

நல்லூர் திலீபன் ஞாபகார்த்த து}பிக்கு பின்னாலை ஒரு றியோ கூல்பார் கிடக்கு அங்கையும் சற்றலைட்டு புhட்டி படம் ஓடுது.

அதுமட்டுமோ நாங்கள் 5 பேர் அங்கை ஜஸ் கிறீம் குடிக்க இடம் இல்லை காரனம் தெரியுமோ.

ஒரு சோடிக்கு ஒரு பெண்காவல்

அந்த கடையிலை மட்டும் அந்த அரை மனி நேரத்திலை 9 சோடிகள் வந்து ஜஸ்கிறீம் குடிச்சினம் நம்பமுடியாது.

அனைத்தும் தனியார் கல்வி நிலையத்திலை படிக்கிற சிறுசுகள்.

எல்லாம் வெளிநாட்டுகாசு செய்தவேலை.

யாழ்பானத்திலை முந்தி பென்கள் சயிக்கிலிலை போறது இப்ப
சீ 90 என்ட மோட்டச்சைக்கில் என்டால் அது யாழ் பென்கள் உடலில் ஒரு அங்கமாக போச்சு.

வீட்டுக்கு இரன்டு தொலைபேசி எங்காவது ஜரோப்பாவிலை இருக்கோ?
ஆனால் யாழ்பானத்திலை வீட்டுக்கு இரன்டு தொலைபேசி புhட்டி இருக்கு காரனம் சொல்லுகினம் ஒன்டு மோற்றோலா அன்னன் வெளிநாட்டில் இருந்து கதைக்கிறது மற்றது லோக்கல் தேவைக்காம் அப்ப பாருங்கோ?

அதுமட்டுமோ விபச்சாரம் இங்கு எளுத முடியாது ஆனால் அப்பாடா அதற்கும் முகவர்கள் இருக்கினம் பாருங்கோ நம்பமுடியுமோ?

வன்னிக்குள் இருந்து ஒரு நன்பன் எனது வாகனத்தில் வந்தார் அவர்சொன்னார் நம்ம பையன்கள் நீலப்படங்களை தடை செய்தாங்கள் அவற்றை எல்லாம் பறிமுதல் செய்தாங்கள் சுமார் 3000 கொப்பிகளை கைப்பற்றினாங்கள் என்டு ஆனால் அன்று பிற்பகலே அதைவிட கேவலமான கொப்பிகள் 6000 பாவனைக்கு விடப்பட்டதாம் இறானுவத்தால்.

அப்ப ஜரோப்பாவே யாழ்பானமோ திறம் சொல்லுங்கோ பாப்பம்.

இதுமட்டுமோ எப்பன் வெளிச்சமாக திரிஞ்சால் அன்டைக்கே பலதை மடக்கலாம் அப்படி திரிகினம் ஆக்கள்.

இவை மட்டுமோ தொன்டமானாறில் இருந்து வல்வெட்டிதுறை ஊடாக பருத்துறைநோக்கி வந்தம் கடற்கரையாலை தென்னிலங்கை அலுமாரி வியாபாரிகள் பிளாஜஸ்ரிக் பொருள் வியாபாரிகள் பளய பொருள் சேர்கஸறவை அதிகம் அங்கினைதான் உலாவுகினம் அதற்கு எம்முடன் வாகனத்தில் கூடவந்த நன்பன் ஒருவன் சில காரனங்களையும் சொன்னான் ம்
பாம்பின்கால் பாம்பறியும்.

தொடரும்.............................


- P.S.Seelan - 10-21-2003

அதென்னப்பா உங்களுக்கு மட்டும் அப்படியான ஆட்களை விஷேசமாகத் தெரிகின்றது. எங்காவது கிடைக்காதா என்று தொங்கப் போட்டுக் கொண்டு இருந்திருப்பீர்கள் அது தானோ காணுரதெல்லாம் அப்படித் தெரிகின்றது. அதுக்குத் தானே ஒரு சிலர் ஆக்கிரமிப்பாளனின் ஆட்சி அமோகம் என்று ஒப்பாரி வைத்துக் கொண்டு திரிகின்றார்கள். போய்ஸ் படம் இரவிரவகா இரத்து செய்த பின் சும்மா ஓடித் திரிந்த வண்டியெல்லாம் ஒரு இரண்டு மூன்று நாளா புல். என்டா அப்பா விஷேசம் என்று கேட்டால் கொழும்புக்கு போஸ் பார்க்க இதுவும் வெளிநாட்டு வியர்வை சிந்தாமல் உழைத்த பணங்களின் சலசலப்புத்தான். வாழ்க இராணுவ சனநாயகம்.

அன்புடன்
சீலன்