12-28-2003, 02:08 PM
இந்தியாவின் தென்னாசிய பாதுகாப்பு வலயத்தில் சிறிலங்கா - தமிழீழம்
டி. சிவராம் (தராக்கி)
நொக்கியா செல்லிடத் தொலைபேசியை அறியாத தமிழர் ஒரு சிலரே உள்ளனர். அது உற்பத்தி செய்யப்படும் நாடு பின்லாந்து என்பது கூட நம்மவர் சிலருக்குத் தெரியும்.
போன கிழமை இந்தியாவைப் பற்றி எழுதுகிறேன் என கூறியவன். இப்போது ஏன் பின்லாந்தைப் பற்றிக் கதைக்க வெளிக்கிடுறான் எனக் கேள்வி எழலாம்.
பின்லாந்து ரஷ்யாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த எல்லைப்புற நாடு. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர் தனது சுற்றுப்புறப் பிராந்தியப் பாதுகாப்பை மிகக் கவனமாகக் பலப்படுத்தவேண்டிய தேவை அப்போதைய சோவியத் யுூனியனுக்கு ஏற்பட்டது.
அமெரிக்காவும் அதன் பிரதான நேச நாடான பிரித்தானியாவும் சோவியத் யுூனியனுடைய ஐரோப்பிய எல்லைப்புறத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கில் வட அத்திலாந்திக் ஒப்பந்த அணியை (ழேசவா யுவடயவெiஉ வுசநயவல ழுசபயnணையவழைn - Nயுவுழு) ஐரோப்பாவின் கிழக்குப் புறமாகவும் வடக்குப் பக்கமாகவும் விரிவாக்கலாயின.
இதைத் தடுப்பதற்காக கிழக்கு ஐரோப்பாவின் சில நாடுகளை மறைமுகமாகவும் சிலவற்றை நேரடியாகவும் தனது நேரடிக் கேந்திரப் பாதுகாப்பு வலயத்தினுள் சோவியத் யுூனியன் கொண்டு வந்தது.
மேற்படி கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வலுவுள்ள சோவியத் சார்பு இடதுசாரி இயக்கங்கள் இருந்ததும் சோவியத் யுூனியனுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.
ஆனால் வட ஐரோப்பாவில் சோவியத் யுூனியனின் எல்லைப்புற நிலைமை வேறாகக் காணப்பட்டது. சோவியத் யுூனியன் தனது வட ஐரோப்பிய பாதுகாப்பு வலயமாகக் கருதிய பிராந்தியத்தினுள் முதலாவதாகப் பின்லாந்தும் இரண்டாவதாக சுவீடனும் மூன்றாவது நோர்வேயும் நான்காவதாக டென்மார்க்கும் காணப்பட்டன.
(இந்நான்கு நாடுகளையுமே ஸ்கந்திநேவிய நாடுகள் என அழைக்கிறோம்)
நான்கு நாடுகளுக்கும் அப்போதிருந்த சிக்கல் சோவியத் யுூனியனுடைய பாதுகாப்பு வட்டம் என்பதற்குள் நேரடியாக மாட்டிக்கொண்டு கிழக்கு ஐரோப்பிய நாடுகளைப்போல் தமது இறைமையை முற்றாக இழப்பதா அல்லது தமது சுதந்திரத்தைப் பேணக்கூடிய முறையில் சமரசம் செய்து கொள்வதா என்பதே.
இதில் பின்லாந்தும், சுவீடனும் அமெரிக்காவின் நேட்டோ (Nயுவுழு) இராணுவக் கூட்டில் இணையாமல் தவிர்த்துக்கொண்டன. நோர்வேயும் டென்மார்க்கும் நேட்டோவில் இணைந்து கொண்டபோதும் சோவியத் யுூனியனுடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய எந்த இராணுவ hPதியிலான அலுவலிலும் ஈடுபடுவதில்லை என அறிவித்தன.
(இதில் நோர்வே பின்னர் சோவியத் யுூனியன் மீது அமெரிக்கா இலத்திரனியல் புலனாய்வு வேலைகளை செய்வதற்குப் பெருமளவு ஒத்துழைத்தது என்பது நாம் கவனிக்கவேண்டும்.)
மேற்படி நான்கு ஸ்கந்திநேவிய நாடுகளில் பின்லாந்து சோவியத் யுூனியனுடன் நீண்ட நேரடி எல்லைப்புறத்தைக் கொண்டதாகும்.
எனவே சோவியத் யுூனியனுடைய பாதுகாப்பிற்குக் குந்தகமாக அமையக்கூடிய எந்தவொரு உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கையையோ நடைமுறையையோ கடைப்பிடிப்பதில்லை என்ற அடிப்படையில் பின்லாந்து அன்றைய அந்த உலக வல்லரசுடன் ஒரு ~நட்புறவு| ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது.
இவ்வொப்பந்தம் பின்லாந்தினுடைய இறைமையை - தனித்துவத்தை - பறித்தெடுத்து விட்டது என அமெரிக்கா சார்பு விமர்சகர்கள் அன்று கண்டித்தனர். ஆனால் சோவியத் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தளமாகாமல் தனது சுதந்திரத்தைப் பேணுவதே ஸ்கந்திநேவியத் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அடித்தளமாகும் என பின்லாந்து தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நியாயப்படுத்தியது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளைப் போல் பின்லாந்து சோவியத் யுூனியனின் இரும்புத்திரைக்குள் மறைந்து போகாது மேற்குடனும் தனது பொருளாதார உறவுகளை தொடர்ந்து பேணிட இவ்வொப்பந்தமே காரணமாயிற்று எனச் சில ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுவர். பின்லாந்தின் இந்த அனுபவம் சர்வதேச அரசியற் கற்கைகளில் ஒரு முக்கிய கோட்பாட்டின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. இதுவே ~பின்லாந்துப்படுத்தல்| (குiடெயனெளையவழைn) என்றறியப்படும்.
1987ஆம் ஆண்டு சிறிலங்கா இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலம் அது பின்லாந்துப்படுத்தப்பட்டுவிட்டது எனச் சில உலக அரசியல் ஆய்வாளர் கூறுவர். இக்கருத்தை கலாநிதி அமால் ஐயவர்த்தன அந்நேரத்தில் ஐலண்ட் ஆங்கில நாளேட்டில் எழுதிய ஓரு ஆய்வுக்கட்டுரையில் முன்வைத்தார். அவருடைய கருத்தைப் பல சிங்கள ஆய்வாளர் ஏற்க மறுத்து வருகின்றனர்.
கொழும்பிலுள்ள 'விவரமறிந்த" ஆங்கில பத்தி எழுத்தாளர் ஒருவர் அண்மையில் என்னுடன் இந்தியா பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது 1987 சிறிலங்கா - இந்தியா ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என ஆணித்தரமாகக் கூறினார். அவரைப்போலவே பல சிங்களக் கருத்தியலாளரும் அரசியலாளரும் எண்ணுகின்றனர். சிறிலங்காவின் வெளியுறவுக் கொள்கையை மட்டுமல்லாது அதனுடைய உள்நாட்டுக் கொள்கையையும் இந்திய - இலங்கை ஒப்பந்தமும் அதன் பின்னிணைப்பான கடிதப் பரிமாற்றமும் கட்டுப்படுத்துகின்றன என்ற இந்த உண்மையை கண்ணை மூடிப் பால் குடித்த பூனையைப்போல இவர்கள் காண மறுக்கின்றனர்.
இந்த வகையில் சிறிலங்கா முழுமையாகப் பின்லாந்துப்படுத்தப்படவில்லை எனக் கூற வேண்டியுள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இன்று வரை பின்லாந்து சோவியத் யுூனியனுடனான ஒப்பந்தத்திற்கு முரணாக எதுவும் செய்திடாத வகையில் தனது இறைமையைப் பேணுவதில் தெளிவாக செயற்பட்டு வருகிறது.
(ஆலாந்து என்ற சிறிய பகுதிக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்பு தன்னாட்சி முறையும் இந்தப் பின்னணியில் புரிந்துகொள்ளப்படலாம்)
ஆனால் தென்னாசியாவிற்கு ஒரு பொதுமையான பாதுகாப்பு ஒழுங்கு இருக்கின்றது எனவே அதற்குத் தனது பின்லாந்துப்படுத்தல் இன்றியமையாத ஒன்று எனவோ சிங்கள அரசியலாளரோ, வெளியுறவுக் கொள்கையாளரோ அன்றும் இன்றும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை - இருக்கப்போவதுமில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தமானது சிறிலங்காவின் உள்ளக மற்றும் வெளிசுயநிர்ணய உரிமையையும், இறைமையையும் சட்டாPதியாக மட்டுப்படுத்திவிட்டது என்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இதன் காரணமாக இந்திய - சிறிலங்கா உறவு ஒருபோதும் முழுமையான பின்லாந்துப்படுத்தலின் அடிப்படையில் அமையமுடியாது எனக் கூறலாம். கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவுடனும் பாகிஸ்தானுடனும் சிறிலங்கா செய்ய முற்பட்ட ஒப்பந்தங்கள் இரண்டும் இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கு மிக முரணாகவும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுபவையாகவும் இருந்தமை எனது மேற்படி கூற்றிற்கு வலுச்சேர்ப்பதாகும்.
இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், பூட்டான் ஆகிய நான்கு நாடுகளும் தனது பாதுகாப்பு வலயத்திற்கு இன்றியமையாத பின்லாந்துப் படுத்தப்பட வேண்டிய நாடுகள் என இந்தியா நீண்ட காலமாகக் கருதிவருகிறது. ஆனால் ஸ்கந்தி நேவியப் பிராந்திய நாடுகளைப்போலன்றி மேற்படி நான்கு நாடுகளும் இதை தமது வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கோட்பாடுகளின் ஒரு இன்றியமையாத அம்சமாக ஆரம்பத்திலிருந்தே ஏற்க மறுத்து வருகின்றன.
இனி தென்னாசியப் பிராந்தியத்தில் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு இந்தியா சுதந்திரமடைந்த காலத்திலிருந்து அதற்கு இருந்து வந்த உந்தல்கள் என்ன என்பதையும் அவை காலத்திற்குக்காலம் உலக அரசியற் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எங்ஙனம் மாற்றமடைந்து வருகின்றன என்பதையும் பார்ப்போம்.
இந்தியா சுதந்திரமடைந்த பொழுது தனது பாதுகாப்பிற்கு இன்றியமையாத ஒரு அரணாக இமயமலைத் தொடரைக் கருதிற்று. ஆனால் இமயமலை அடிவாரத்தின் முக்கிய பகுதிகள் அப்போது தனி இறைமையுள்ள அரசுகளாக இருந்த நேபாளம், புூட்டான், சீக்கிம் மற்றும் காஷ்மீர் ஆகியவற்றின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. இவற்றில் காஷ்மீர் இராச்சியத்தின் மன்னர் தனது நாட்டின் உரிமையை இந்தியா சுதந்திரமடைந்த கையோடு அதனுடன் பேரம் பேசிக் கொடுத்து விட்டார். இதைப் பாகிஸ்தான் ஏற்க மறுத்ததும், காஷ்மீர் மீது அது படையெடுத்து அந்நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றியதும், அச்சிக்கல் இன்றுவரை தொடர்வதும் நீங்களறிந்த விடயங்களே.
இமயமலையின் அடிவாரத்திலிருந்த நாடுகளை தன் நேரடி அல்லது மறைமுக கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என இந்தியா கருதியமைக்கு ஒரு மிக முக்கியமான போரியல் காரணம் உண்டு. மலையும் சமதரையும் உள்ள ஒரு பிராந்தியத்தில் இருபடைகள் மோதுமாயின் மலை உச்சிகள் யார் கைகளில் உண்டோ அவர்களே வெல்வர் என்பது மரபு வழிப் போரியலின் பொது நியதி. எனவே சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றின் படைகள் நேபாளம், புூட்டான், சீக்கிம், காஷ்மீர் ஆகியவற்றின் எல்லைபுறங்களாக அமைந்துள்ள இமயமலை தொடரின் முக்கிய உச்சிகளை - குறிப்பாகக் கணவாய்கள், பனிநகர்விடங்கள் (புடயஉநைசள) போன்றவற்றின் மேலாக உள்ளவற்றை - தமது செல்வாக்கினுள் கொணர்ந்து விட்டால் தனது பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவிடும் என இந்தியா கருதிற்று.
எனவே பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் கிடைத்த அடுத்த ஆண்டே அதாவது 1949 இலே இந்தியா இமயமலைத் தொடரின் மிகக் கேந்திரநுட்பம் வாய்ந்த இடத்தில் அமைந்திருத்த புூட்டானுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டது. இதன்படி பூட்டான் தனது வெளிவிவகாரங்iளை இந்தியாவின் மதியுரைப்படியே செய்யுமெனவும், ஆனால் இந்தியா அந்நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிடாது எனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைச்சாத்திடப்பட்ட இந்தியா - பூட்டான் ஒப்பந்தத்தின் 6ஆவது பிரிவின்படி புூட்டான் தனக்குத் தேவையான ஆயுதங்கள், ரவைகள், இயந்திரங்கள் என அனைத்துப் போர்த் தளபாடங் களையும் இந்தியாவினூடாகவே கொள்வனவு செய்ய வேண்டுமென வரையறுக்கப்பட்டது.
இவ்விடத்தில் ஒன்றைக்குறிப்பிட வேண்டும்.
தென்னாசியாவின் பின்லாந்துப்படுத்தலில் அகப்பட்ட நாடுகளுள் சிறிலங்கா பூட்டானை விடக் கவலைக்கிடமான நிலையில் உள்ள தென்பதே அது. இந்தியா - புூட்டான் ஒப்பந்தத்தில் பின்னைய நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட மாட்டேன் என இந்தியா எழுத்தில் கொடுத்துள்ளது. ஆனால் சிறிலங்காவின் உள்நாட்டுச் சிக்கல்களிலெல்லாம் தலையாய சிக்கலான தமிழ்பேசும் மக்களின் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்ற விடயத்தில் இந்தியாவிற்கு மிக முக்கிய பங்கு உள்ளது என இந்திய - இலங்கை ஒப்பந்தம் கூறுகிறது. புூட்டானை அடுத்து இந்தியா நேபாளத்துடன் 1950ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது.
இவ்வொப்பந்தத்தை ஒட்டியும் இந்திய - இலங்கை ஒப்பந்தம் போன்று ஒரு கடிதப் பரிமாற்றம் செய்யப்பட்டது. இக்கடிதப் பரிமாற்றத்தின் உட்கிடை 1959ஆம் ஆண்டு வரை இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.
(ஒப்பந்தங்களை ஒட்டிய கடித அல்லது குறிப்புப் பரிமாற்றங்கள் (நுஒஉhயபெந ழக டுநவவநசள ழச ழேவநள) ஒப்பந்தங்களைப் போலவே முழுச் சட்டவலுவுள்ளவை என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டும்) இந்திய - நேபாள ஒப்பந்தத்தின் படி இந்தியாவின் பாதுகாப்புக்குக் குந்தகமாக நேபாளம் எந்தவொரு வெளிநாட்டுச் சக்தியையும் தனது மண்ணில் அனுமதிக்காது எனவும், இந்தியாவும் அங்ஙனமே நடந்து கொள்ளும் எனவும் இணங்கப்பட்டது.
அத்துடன் அந்த ஒப்பந்தத்தின் ஐந்தாவது பிரிவின்படி நேபாளம் தனது போர்த்தள பாடங்களை இந்தியாவினு}டாகவே வாங்க வேண்டுமெனவும் வரையறுக்கப்பட்டது. ஒப்பந்தம் எழுதியாயிற்று, வேலை முடிந்தது என்றபடி இந்தியா சும்மா இருப்பதில்லை என்பதை இங்கு நாம் நோக்க வேண்டும்.
இந்தியாவின் பிடியிலிருந்து சிறிது சிறிதாக விடுபட்டு தனது நாட்டின் முழு இறைமையை நிலைநாட்டிடும் நோக்கில் நேபாள மன்னர் தனது அடுத்த அண்டை நாடான சீனாவுடன் பலதரப்பட்ட உறவுகளை வளர்க்கலானார். இவ்வுறவு படிப்படியாக வளர்ச்சியடைந்து 1986 - 87இல் சீனாவிடமிருந்து சில போர்த்தளபாடங்களை நேபாளம் வாங்குமளவிற்குச் சென்றது.
இதையறிந்த உடனேயே நேபாளத்துடனான தனது எல்லையை இந்தியா மூடிவிட்டது. இதனால் அந்நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி உருவாயிற்று. இச்சூழலைப் பயன்படுத்தி ஜனநாயகத்துக்கான இயக்கம் என ஒன்று இந்தியாவின் மறைமுக உதவியோடு கிளம்பி மன்னராட்சியின் அதிகாரத்தை மட்டுப்படுத்திடப் போராட்டத்தில் இறங்கியது. இதனால் இந்தியாவின் கைப்பொம்மையாகக் கருதப்பட்ட கிரிஜ பிரசாத் கொய்ராலா பிரதமராக அதிகாரத்திற்கு வந்தார். 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியப் பிரதமரும் நோபாளப் பிரதமரும் சந்தித்து கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டனர். இதில் நேபாளம் இந்தியாவின் பாதுகாப்பு பற்றிய அக்கறைகளை முழுமையாக மதிக்கும் எனவும் தனது மண்ணில் இந்தியாவிற்கு அச்சுறுத்தலோ பாதுகாப்புக்குத் குந்தகமோ ஏற்படுத்தக்கூடிய மூன்றாம் தரப்பினரை அனுமதிக்காது எனவும், இந்தியாவும் நேபாளத்தைப் பொறுத்தவரை மேற்படியே நடந்துகொள்ளுமெனவும் பாதுகாப்பு விடயங்களில் இரு நாடுகளும் கலந்தோலோசித்தே முடிவுவெடுக்கும் எனவும் பிரகடனப்படுத்தப்பட்டது.
அதாவது 1950ஆம் ஆண்டு உடன்படிக்கையிலிருந்து இம்மியளவும் நேபாளம் வழுவாமலிருக்க வேண்டும் என்பதில் இந்தியா மிக உன்னிப்பாகச் செயல்பட்டு வருவதை இதிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம். 1987 இலங்கை - இந்திய ஒப்பந்தமும் இதற்கு விதிவிலக்கல்ல.
1950இல் அப்போது சுதந்திர இராச்சியமாக விருந்த சீக்கிம்முடனும் இந்தியா மேற்கூறியது போன்ற பின்லாந்துப்படுத்தும் ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டது. சீக்கிம் இந்தியாவினுடைய 'கையாளலை" எதிர்கொண்டு அல்லது வெட்டியோடி தனது இறைமையைப் பேணிடக் கூடிய தகைமை கொண்ட அரசாட்சியற்ற நாடாக இருந்தமையால் 1975 இல் அதை தனது இருபத்தியிரண்டாவது மாநிலமாக இந்தியா உள்வாங்கிவிட்டது.
இது மட்டுமன்றி பாகிஸ்தானிடமிருந்து தனிநாடாக பங்களாதேஷ் பிரிந்தவுடனேயே அதனுடன் இந்தியா ஒரு பாதுகாப்பு மையப்பட்ட ஒரு நட்புறவு ஒப்பந்தத்தை 1972இல் ஏற்படுத்திக் கொண்டது. இதன்படி பங்களாதேஷ் இந்தியா தவிர்ந்த வேறு எந்த நாட்டுடனும் இராணுவக் கூட்டு வைத்துக்கொள்ளக்கூடாது என வரையறுக்கப்பட்டது. (இவ்வொப்பந்தம் இப்போது காலாவதியாவிட்டதாக அண்மையில் நான் சந்தித்த ஒரு வங்காளப் அரசியல்துறைப் பேராசிரியர் கூறுகிறார்)
இந்தியா பின்லாந்துப்படுத்திய அல்லது பின்லாந்துப்படுத்திட முயன்றுவரும் மேற்படி நாடுகளுக்கும் இலங்கைக்கும் அடிப்படைப் பாதுகாப்பு மற்றும் போரியல் சார் வேற்றுமைகள் உண்டு. தமிழீழத்திற்கும் இவை செல்லுபடியாகும்.
இவை என்ன, இவற்றிற்கு முகம் கொடுத்து எமது முழு இறைமையை விட்டுக்கொடுக்காதபடி நாம் எமது பயணத்தைத் தொடர்வதற்கான அரசியற் கேந்திர சூழல் எங்ஙனம் அமைகிறது என்பதை அடுத்த கிழமை பார்ப்போம்.
நன்றி: வீரகேசரி (28-12-03) & தமிழ்நாதம்.