01-04-2006, 10:09 PM
தமிழின எதிர்ப்புக்கு விருது
இலங்கை அரசின் மிக உயர்ந்த விருது சிறீலங்கா ரத்னா. இந்த விருதைப் பெறுவதற்கு இலங்கைக் குடிமகன் அல்லாத ஒருவரை - சிறீலங்காவின் சிங்களப் பேரினவாத அரசு தேர்வு செய்து கொழும்பில் வழங்கியிருக்கிறது. சிறீலங்கா அரசின் இந்த விருதுக்குரியவர் யார் தெரியுமா? அவர் தான் இந்து நாளேட்டின் தலைமை ஆசிரியர் என்.ராம்! பத்திரிகைத் துறையில் அவரது தன்னிகரற்ற திறமை; குறிப்பாக சிறீலங்காவுக்கு அவர் ஆற்றியஇ மிகவும் தனித்தன்மையான பெருமைக்குரிய சேவைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாம்!
ஈழத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிராக திட்டமிட்ட எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடுநிலை பிறழ்ந்துஇ இந்து ஏடு கண்மூடித்தனமாக கட்டவிழ்த்து விட்டதற்குக் கிடைத்துள்ள பரிசு இது. இவர் தான் சிறிலங்காவின் செல்லப் பிள்ளை. தமிழர்களுக்கு துரோகி என்று தெளிவாக அடையாளம் காட்டிய சந்திரிகாவுக்கும்இ அந்தத் தகுதிக்கான முழு உரிமையும் தனக்கே உண்டு என்பதை ஏற்றுக் கொண்டுள்ள இந்து ஏட்டின் ஆசிரியருக்கும்இ உண்மையை ஒப்புக் கொண்டமைக்காக ஒரு வகையில் நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும்! தன்மானத் தமிழர்கள்இ எதிரி யார் நண்பன் யார் என்பதை இனியாவது அடையாளம் கண்டு கொண்டால் நல்லது!
நன்றி
பெரியார் முழக்கம்