Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கேக்கிறாரெல்லே
#1
வட கிழக்கு தமிழர்களின் தாயகப் பிரதேசம் என்று நிரூபிக்க பகிரங்க விவாதத்திற்கு வருமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன், அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் ஆகியோருக்கு எல்லாவல மேதானந்த தேரர் அழைப்பு விடுத்துள்ளார். இவ்வாறான தாயகப் பிரதேசம் தமிழர்களுக்கு அவசியம் இல்லை. இந்த நாட்டின் தாயகப் பிரதேசங்கள் சிங்கள மக்களுக்கு மட்டுமே உரித்தானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் தலைவரான எல்லாவல மேதானந்த தேரர் இப்பகிரங்க விவாதம் தொடர்பாக நேற்று கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

இலங்கையில் இனப்பிரச்சினை நிலவுவதாக சர்வதேசதிற்கும் மக்களுக்கும் ஊடகங்கள் மூலம் மாயை நிலையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அனைவரும் தெளிவாக உணர்ந்து கொள்ள வேணடிய விடயம் நாட்டில் தீவிரவாதப் பிரச்சினையே நிலவுகின்றது என்பதே.

நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்துடன் தனி அரசு ஒன்றை நிறுவும் நோக்கத்துடன் தமிழராகப் பிறப்பெடுத்த சிலரினால் இந்த தீவிரவாதம் உருவாக்கப்பட்டுள்ளது.

எனினும் 99 சதவீதமான தமிழ் மக்கள் இந்த இயக்கத்தை விரும்பவில்லை. புலித் தீவிரவாதிகளின் ஆயுதங்களுக்கு அச்சமுற்று தமிழ் மக்கள் அமைதியாக இருந்து வருகின்றனர். புலிகள் வட கிழக்கு பிரதேசங்களில் தமிழர் தாயகப் பிரதேசம் உள்ளதாகக் காட்டிக் கொண்டு தாயகத்தைக் காப்பாற்றுவதாகக் கூறிக் கொண்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

புலிகள் வட கிழக்கு பிரதேசத்தை தமிழர் தாயகப் பிரதேசம் என்று கூறுவார்களாயின் அதற்கான சான்றுகளை அவர்கள் நிரூபிக்க வேண்டும். அதற்காக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நான் அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Messages In This Thread
கேக்கிறாரெல்லே - by Mathuran - 01-04-2006, 07:34 PM
[No subject] - by வினித் - 01-04-2006, 07:43 PM
[No subject] - by கீதா - 01-04-2006, 09:50 PM
[No subject] - by Mathuran - 01-04-2006, 11:52 PM
[No subject] - by ஊமை - 01-05-2006, 12:18 AM
[No subject] - by Mathuran - 01-05-2006, 12:39 AM
[No subject] - by Niththila - 01-05-2006, 05:29 PM
[No subject] - by sabi - 01-05-2006, 11:01 PM
[No subject] - by Mathuran - 01-05-2006, 11:55 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)