Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஹிந்துவின் தலையங்கம், இந்திய நிலைப்பாடு
#25
இலங்கைப் பிரச்சனையின் மிக அண்மைக்கால வரலாறுகளை இந்தியா மறந்துவிடக் கூடாது: ஆய்வாளர் எஸ்.வி.இராசதுரை
[புதன்கிழமை, 4 சனவரி 2006, 05:35 ஈழம்] [கொழும்பு நிருபர்]
இலங்கை அரசாங்கத்துடன் உறவுகளை மேற்கொள்ள விரும்புகிற இந்திய அரசு அண்மைக்கால வரலாறுகளை மறந்துவிடக் கூடாது என்று தமிழக ஆய்வாளர் எஸ்.வி.இராசதுரை சுட்டிக்காட்டியுள்ளார்.


தமிழ்நாட்டின் தினமணி நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரை:

அண்மையில் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த இலங்கை அதிபர் ராஜபக்சவின் சென்னைப் பயணம் ஏதோவொரு காரணத்தால் கடைசி நேரத்தில் இத்து செய்யப்பட்டுவிட்டது. கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் இந்திய ஊடகங்களில் இலங்கை அரசின் கொள்கைகளுக்கும் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் கணிசமான ஆதரவு இருப்பதை அவர் அறியாதவரல்லர். 1980-களில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல்களில் யாழ். நூலகம் எரிக்கப்பட்டது உட்படப் பல்வேறு நடவடிக்கைகளில் நேரடியான, மறைமுக ஆதரவு கொடுத்தவர்களில் ஒருவர் எனத் தமிழ் மக்களால் கருதப்படும் காமினி திஸ்ஸநாயக்க போன்றோரும்கூட ஜனநாயகவாதிகளாகக் கருதப்படுவதையும் அவர் அறிந்திருப்பார்.

எனினும் அவருடன் வந்திருந்தவர்களில் ஒரு குறிப்பிட்ட நபரைப் பத்திரிகையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது ராஜபக்சவின் "கூட்டணி தர்ம'த்தால்கூட இயலாததாக இருந்திருக்கும். அவரது கூட்டணியைச் சேர்ந்த இரண்டு சிங்கள தீவிரவாத அமைப்புகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியத் தலைவரான உதய காம்மன்பில என்பவரும் அதிபரின் குழுவில் இடம்பெற்றிருந்தார். அந்தத் தீவில் போருக்கு எதிராகவும் அமைதிக்கும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்காகவும் குரல் கொடுக்கும் சிங்களக் கலைஞர்கள் மீது தொடர்ந்து வன்முறையைத் தூண்டிவிட்டு வருபவர் என்னும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளவர் அவர். அந்த நாட்டின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கும் "பாதுகாப்புக் குழு'வில் அவரும் இடம்பெற்றிருப்பதாக ஒரு செய்தி அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

இது உண்மையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய கடமை இந்திய அரசாங்கத்திற்கு உண்டு.

ஜாதிக ஹெல உறுமயவும் மற்றொரு சிங்கள தீவிரவாத அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனவும் விதித்த நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ராஜபக்சய தலைமையிலான கூட்டணி உருவாகிற்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் சுனாமி நிவாரணத்திற்கு சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் புலிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் இரத்து செய்ய வேண்டும். இலங்கையில் கூட்டாட்சி முறையை உருவாக்குதல் என்னும் அடிப்படையில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைக் கைவிட வேண்டும் என்பன இந்த நிபந்தனைகளில் அடங்கும்.

அதாவது மீண்டும் உள்நாட்டுப் போரைத் தொடங்க வேண்டும் என்பதுதான் இந்த நிபந்தனைகளின் சாரம். இது ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைபாட்டுக்கு மட்டுமன்றி, சந்திரிகா ஆட்சியிலிருந்த வரை ராஜபக்சவும் கூட ஏற்றுக்கொண்டிருந்த கொள்கைக்கும் எதிரானதாகும்.

அச்சமயம் சந்திரிகா அரசாங்கத்தில் பிரதமராக இருந்த ராஜபக்ச, கண்டியில் புத்தரின் பல் இருப்பதாகக் கருதப்படும் ஆலயத்திற்குச் சென்று அங்கு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான எல்லாவல மேதானந்தவின் காலில் விழுந்து அந்த ஒப்பந்தத்தின் பிரதியை வாங்கிக் கொண்டார். அதன் பிறகு அனைத்துச் சமயச் சடங்குகளையும் செய்த பின்னர் அந்த ஆவணத்தை புத்தரின் பல் இருப்பதாகச் சொல்லப்படும் பேழைக்கு முன் வைத்து வணங்கினார். இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் எல்லாருமே புத்த பிக்குகளின் ஆசியைப் பெறுவது வழக்கம் என்றாலும் தேர்தல் அறிக்கைகளையோ கூட்டணி அரசியல் ஒப்பந்தங்களையோ அவர்களது காலடிகளில் இதுவரை சமர்ப்பித்ததில்லை.

பிற முதன்மையான அரசியல் கட்சிகள், அரசு யந்திரம், இராணுவம் ஆகியவற்றில் விரவியுள்ள புத்தமதவாதத்தின் அதிதீவிர வெளிப்பாடுகள்தான் ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கைகள். உறுமயவின் தலைவரின் முன் ராஜபக்ச மண்டியிட்டது இலங்கை அரசின் மற்றொரு வெளிப்பாடுதான். அந்த நாட்டின் நாடாளுமன்ற இடதுசாரிகளின் ஆதரவுடன் 1972-ல் இலங்கையில் புத்தமதம் அரசு மதமாக அறிவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவே இன்று உறுமய, சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே அந்த நாட்டை ஆள்வதற்கான உரிமை இருக்கிறது என இடைவிடாது கூறி வருவதாகும்.

சிங்கள ஆட்சியாளர்களுக்குத் தேவையான இனவாத அரசியலுக்கு அடிப்படையாக உள்ள புத்த பிக்குகள், ஆங்கிலேயரின் காலனியாதிக்கப் பண்பாட்டை எதிர்த்தல் என்னும் பெயரால், பழங்கால சிங்கள மன்னர்களின் ஆட்சியைச் சுட்டிக்காட்டி, அந்த நாடு முழுவதுமே சிங்களர்களின் ஆட்சியின் கீழ் இருந்ததாகக் கட்டுக்கதைகளைப் பரப்பி வருகின்றனர்.

உண்மையில் இத்தகைய கட்டுக்கதைகளைச் சாத்தியமாக்கியவர்கள் பிரிட்டிசார்தான். கண்டியின் கடைசி சிங்கள அரசைத் தோற்கடித்த பின்னர், அந்த அரசின் வாரிசுகளுடன் 1815-ல் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் "புத்தமதமும், அதன் சடங்குகள் சம்பிரதாயங்களும், பிக்குகளும் பௌத்த வழிபாட்டுத் தலங்களும் பராமரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும்" எனப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூறினர். தாங்கள் பாதுகாக்க விரும்பிய அரசியல் சமநிலையைக் குலைக்கும் வகையில் சமுதாய மாற்றங்களுக்கும் சீர்திருத்தங்களுக்குமான இயக்கங்கள் தோன்றுமானால் அவற்றை வலுக்குன்றச் செய்வதற்கு பௌத்த மதம் பயன்படும் என பிரிட்டிசார் கருதியதாக இலங்கையின் புகழ்பெற்ற வரலாற்றறிஞர் கே.எம்.டி சில்வா கூறியுள்ளார்.

பிரிட்டிசாருக்குப் பின்வந்த சிங்கள ஆட்சியாளர்கள் இதனை இன்னும் ஆழமாகப் புரிந்து கொண்டனர். இலங்கை அரசாங்கம் ஒவ்வோராண்டும் தனது வரவு - செலவுத் திட்டத்தில் பௌத்த விவகாரங்கள் துறைக்கு பெருந்தொகைகளை ஒதுக்குகிறது. 2004-ல் இப்படி ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 18.50 கோடி. இப்படி ஒதுக்கப்படும் தொகையில் பெரும்பகுதி புத்த மடங்களுக்குப் போய்ச் சேர்கிறது. எனவே அவர்களும் தங்கள் பங்குக்கு, ஆட்சியாளர்களும் பிற முதன்மையான சிங்களக் கட்சிகளும் விரும்புகிற இனவாத அரசியலுக்குத் தூபம் போடுகின்றனர். எடுத்துக்காட்டாக சுனாமி நிவாரணப் பணிகளைக் கூட்டாக மேற்கொள்வதற்கு சந்திரிகா அரசாங்கம் புலிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்பதற்காக உறுமயவின் செயலாளரும் புத்த பிக்குவுமான ஓமல்பெ சோபித, கண்டியிலுள்ள கோவிலுக்கு முன் அமர்ந்து "சாகும் வரை உண்ணாநோன்பு இருக்கப்போவதாக'' அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கொழும்பிலுள்ள பிக்குகளும் இந்த ஒப்பந்தம் தேசத் துரோகமானது என அறிவித்து உண்ணாநோன்பைத் தொடங்கினர்.

சிங்களவகள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாகப் பிரசாரம் செய்த உறுமய, கடந்த இரண்டாண்டுகளில் கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தியது.

இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு ஆதரவாகவும் பெரும்பான்மை மதவாதத்திற்கு எதிராகவும் பேசுபவர்கள், சிங்கள பௌத்தவாதம் அந்த நாட்டின் அமைதிக்கும் முன்னேற்றத்துக்கும் ஏற்படுத்தி வரும் பாதிப்புகளைப் பற்றி மௌனம் காக்கின்றனர். அந்த நாட்டில் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முதல் நிபந்தனை சிங்கள பௌத்தத்தை அரசு மதம் எனக் கூறும் அந்த நாட்டின் அரசியல் சட்டப் பிரிவை நீக்குவதுதான். இந்த அரசியல் சட்டப் பிரிவுதான் தமிழர்கள் மீது பாரபட்சம் காட்டுவதற்கு சிறிமாவோ பண்டாரநாயக அரசாங்கத்திற்கும் அதன் பிறகு ஜே.ஆர்.ஜெயவர்தன அரசாங்கத்திற்கும் அடிப்படையாக இருந்து 1983-ல் இனக் கலவரத்தைத் தூண்டிவிட்டது.

இலங்கையுடன் தொழில் - வர்த்தக உறவுகளையோ பாதுகாப்பு உறவுகளையோ வலுப்படுத்திக் கொள்வதையும் இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்படுவதையும் விரும்பும் மத்திய அரசாங்கம் இந்த மிக அண்மைக்கால வரலாற்றை மறந்துவிடக் கூடாது என்று அதில் எஸ்.வி.இராசதுரை குறிப்பிட்டுள்ளார்.



http://www.eelampage.com/?cn=23076
Reply


Messages In This Thread
[No subject] - by yarlpaadi - 01-02-2006, 01:25 PM
[No subject] - by Luckyluke - 01-03-2006, 08:00 AM
[No subject] - by rajathiraja - 01-03-2006, 08:12 AM
[No subject] - by வினித் - 01-03-2006, 08:40 AM
[No subject] - by Luckyluke - 01-03-2006, 08:49 AM
[No subject] - by Sriramanan - 01-03-2006, 09:12 AM
[No subject] - by rajathiraja - 01-03-2006, 09:15 AM
[No subject] - by Luckyluke - 01-03-2006, 10:17 AM
[No subject] - by Birundan - 01-03-2006, 10:55 AM
[No subject] - by kurukaalapoovan - 01-03-2006, 11:22 AM
[No subject] - by Luckyluke - 01-03-2006, 11:45 AM
[No subject] - by rajathiraja - 01-03-2006, 11:47 AM
[No subject] - by Thala - 01-03-2006, 12:36 PM
[No subject] - by Thala - 01-03-2006, 12:42 PM
[No subject] - by rajathiraja - 01-03-2006, 12:46 PM
[No subject] - by kurukaalapoovan - 01-03-2006, 02:40 PM
[No subject] - by தூயவன் - 01-03-2006, 02:49 PM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 01-03-2006, 04:13 PM
[No subject] - by Luckyluke - 01-04-2006, 07:40 AM
[No subject] - by rajathiraja - 01-04-2006, 07:53 AM
[No subject] - by rajathiraja - 01-04-2006, 07:57 AM
[No subject] - by Luckyluke - 01-04-2006, 08:07 AM
[No subject] - by rajathiraja - 01-04-2006, 09:03 AM
[No subject] - by narathar - 01-04-2006, 10:33 AM
[No subject] - by Thala - 01-04-2006, 10:50 AM
[No subject] - by Luckyluke - 01-04-2006, 10:53 AM
[No subject] - by Thala - 01-04-2006, 11:03 AM
[No subject] - by narathar - 01-04-2006, 11:05 AM
[No subject] - by அகிலன் - 01-04-2006, 11:08 AM
[No subject] - by rajathiraja - 01-04-2006, 11:13 AM
[No subject] - by rajathiraja - 01-04-2006, 11:23 AM
[No subject] - by Thala - 01-04-2006, 11:28 AM
[No subject] - by Luckyluke - 01-04-2006, 11:49 AM
[No subject] - by Luckyluke - 01-04-2006, 11:56 AM
[No subject] - by அகிலன் - 01-04-2006, 12:00 PM
[No subject] - by rajathiraja - 01-04-2006, 12:02 PM
[No subject] - by அகிலன் - 01-04-2006, 12:10 PM
[No subject] - by அகிலன் - 01-04-2006, 12:12 PM
[No subject] - by rajathiraja - 01-04-2006, 12:16 PM
[No subject] - by Luckyluke - 01-04-2006, 12:17 PM
[No subject] - by Thala - 01-04-2006, 12:19 PM
[No subject] - by அகிலன் - 01-04-2006, 12:23 PM
[No subject] - by rajathiraja - 01-04-2006, 12:29 PM
[No subject] - by Vasampu - 01-04-2006, 12:53 PM
[No subject] - by Luckyluke - 01-04-2006, 01:00 PM
[No subject] - by தூயவன் - 01-04-2006, 02:42 PM
[No subject] - by vasanthan - 01-04-2006, 02:58 PM
[No subject] - by Vasampu - 01-04-2006, 04:59 PM
[No subject] - by eelapirean - 01-04-2006, 05:39 PM
[No subject] - by நர்மதா - 01-04-2006, 10:09 PM
[No subject] - by Vasampu - 01-04-2006, 11:38 PM
[No subject] - by Sukumaran - 01-05-2006, 12:19 AM
[No subject] - by Vasampu - 01-05-2006, 12:28 AM
[No subject] - by Sukumaran - 01-05-2006, 12:38 AM
[No subject] - by Danklas - 01-05-2006, 06:53 AM
[No subject] - by கந்தப்பு - 01-05-2006, 07:02 AM
[No subject] - by MUGATHTHAR - 01-05-2006, 07:08 AM
[No subject] - by தூயவன் - 01-05-2006, 03:59 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)