Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
'புருடா விட்ட' சு.சுவாமிக்கு ரூ. 5 லட்சம் அபராதம்
#1
முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த கிரிமினல் வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானிக்கு, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக வழக்கம்போல் புரளி கிளப்பிய சுப்பிரமணியம் சுவாமி ரூ. 5 லட்சம் நஷ்டஈடு வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதையாவது பரபரப்பாகக் கூறி வரும் சு.சுவாமி சில காலத்துக்கு முன் ஜேத்மலானிபுலிகள் இடையே தொடர்பு என குண்டு போட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் கமிஷன் முன்பு ஆஜரான சுவாமி, விடுதலைப் புலிகளுக்கும், ராம் ஜேத்மலானிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், அதனால்தான், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பலருக்காக, விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ஜேத்மலானி அவர்களுக்காக வாதாடுகிறார் என்று கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து சுவாமிக்கு எதிராக ஜேத்மலானி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

ஜேத்மலானி பணம் வாங்கினார் என்பதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்யுமாறு சுவாமிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஆதாரம் எதையும் சுவாமி தாக்கல் செய்யவில்லை.

மேலும், தான் கூறிய கருத்தில் மாற்றம் இல்லை என்றும் இதற்காக வருத்தமோ, மன்னிப்போ கோர முடியாது என்றும் சுவாமி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தனது புகாருக்கான ஆதாரத்தை சுவாமி சமர்ப்பிக்காத காரணத்தால், ஜேத்மலானிக்கு சுப்பிரமணியம் சுவாமி ரூ. 5 நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நன்றி : தட்ஸ் தமிழ்.காம்
,
......
Reply


Messages In This Thread
'புருடா விட்ட' சு.சுவாமிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் - by Luckyluke - 01-04-2006, 08:35 AM
[No subject] - by Mathan - 01-04-2006, 09:54 AM
[No subject] - by Luckyluke - 01-04-2006, 10:20 AM
[No subject] - by Mathan - 01-04-2006, 10:26 AM
[No subject] - by rajathiraja - 01-04-2006, 10:36 AM
[No subject] - by Luckyluke - 01-04-2006, 10:50 AM
[No subject] - by Mathan - 01-04-2006, 10:59 AM
[No subject] - by Luckyluke - 01-04-2006, 11:03 AM
[No subject] - by rajathiraja - 01-04-2006, 11:09 AM
[No subject] - by sinnappu - 01-04-2006, 03:48 PM
[No subject] - by Luckyluke - 01-05-2006, 08:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)