![]() |
|
'புருடா விட்ட' சு.சுவாமிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: 'புருடா விட்ட' சு.சுவாமிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் (/showthread.php?tid=1624) |
'புருடா விட்ட' சு.சுவாமிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் - Luckyluke - 01-04-2006 முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த கிரிமினல் வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானிக்கு, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக வழக்கம்போல் புரளி கிளப்பிய சுப்பிரமணியம் சுவாமி ரூ. 5 லட்சம் நஷ்டஈடு வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதையாவது பரபரப்பாகக் கூறி வரும் சு.சுவாமி சில காலத்துக்கு முன் ஜேத்மலானிபுலிகள் இடையே தொடர்பு என குண்டு போட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் கமிஷன் முன்பு ஆஜரான சுவாமி, விடுதலைப் புலிகளுக்கும், ராம் ஜேத்மலானிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், அதனால்தான், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பலருக்காக, விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ஜேத்மலானி அவர்களுக்காக வாதாடுகிறார் என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து சுவாமிக்கு எதிராக ஜேத்மலானி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். ஜேத்மலானி பணம் வாங்கினார் என்பதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்யுமாறு சுவாமிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஆதாரம் எதையும் சுவாமி தாக்கல் செய்யவில்லை. மேலும், தான் கூறிய கருத்தில் மாற்றம் இல்லை என்றும் இதற்காக வருத்தமோ, மன்னிப்போ கோர முடியாது என்றும் சுவாமி தெரிவித்திருந்தார். இதையடுத்து தனது புகாருக்கான ஆதாரத்தை சுவாமி சமர்ப்பிக்காத காரணத்தால், ஜேத்மலானிக்கு சுப்பிரமணியம் சுவாமி ரூ. 5 நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நன்றி : தட்ஸ் தமிழ்.காம் - Mathan - 01-04-2006 சுப்பரமண்ய சுவாமி என்று ஒருவர் இருப்பதே சர்ச்சைகளின் மூலம் தான் மக்களுக்கு தெரியும். தனது இருப்பை வெளிக்காட்டவே அவர் அடிக்கடி இப்படி அள்ளி விடுவார். ஒரு அரசியல் கோமாளி அவர். - Luckyluke - 01-04-2006 என்னவென்று சொல்வது... அந்த ஆள் இந்த அழகில் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வேற.... அவரது சொந்த ஊர் மதுரை பக்கத்திலுள்ள சோழவந்தான் என்று சொல்லிக் கொள்கிறார்.... - Mathan - 01-04-2006 அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹார்வாட் பல்கலைகழகத்தில் படித்தாரா அல்லது அங்கு பேராசிரியராக இருந்தாரா? - rajathiraja - 01-04-2006 ஆம் அவர் அமெரிக்க ஹார்வாட் பல்கலைகழகத்தில் அழைப்பு பேராசிரியராக இருக்கிறார். மேலும் இவர் சீன மொழி அறிந்தவர். அந்த மொழியை 3 மாதத்தில் கற்று கொண்டவர். நல்ல அற்வாளிதான். ஆனால் பல சமயம் தெனாலி வேலை தான் செய்வார். - Luckyluke - 01-04-2006 சுப்ரமணியசாமி தலை சிறந்த அறிவாளி தான்.... இந்தியாவின் நிதியமைச்சர் பி. சிதம்பரம் இவரின் மாணவர் என்று கூறுகிறார்கள். ஆனால் அமெரிக்காவின் கைக்கூலி போல் செயல்படுவார். ஈழத்தமிழர் விவகாரத்தில் எப்போதுமே கோமாளி போல் தான் நடந்துக் கொள்வார்.... - Mathan - 01-04-2006 ஈழதமிழர் விவகாரம் மட்டுமல்ல வேறுபல விடயங்களிலும் இவர் அப்படிதான். பரபரப்பை ஏற்படுத்தி தன்னை முன்னிலை படுத்துவார். ஒரு டீ பார்ட்டி நடத்தி இந்திய அரசை கவிழ்த்தாரம் உண்மையா? - Luckyluke - 01-04-2006 உண்மை தான்.... அதற்கு துணை போனவர் ஜெயலலிதா... மூப்பனார் என்ற முள்ளம்பன்றியின் வறட்டு கவுரவத்தால் 1998-ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.... சுப்ரமணியசாமியை அரசியல் தரகர் என்றே குறிப்பிடலாம்.... - rajathiraja - 01-04-2006 இவர்க்கு உலகம் முழுதும் நிறய தொடர்புகள் உண்டு. இவரின் நிறைய மாணவர்கள் உலகம் முழுதும் மதிப்பான இலத்தில் உள்ளனர். அந்த தொடர்புகளின் வழியாக கிடைத்த தகவல்களை வைத்து இவர் BLACK MAIL வேலைகள் செய்வார். - sinnappu - 01-04-2006 Mathan Wrote:ஈழதமிழர் விவகாரம் மட்டுமல்ல வேறுபல விடயங்களிலும் இவர் அப்படிதான். பரபரப்பை ஏற்படுத்தி தன்னை முன்னிலை படுத்துவார். ஒரு டீ பார்ட்டி நடத்தி இந்திய அரசை கவிழ்த்தாரம் உண்மையா? உவரை நாங்கள் கூப்பிடுறது கிறுக்குப்பயல் எண்டு :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: இருக்கட்டும் உவர் டம்பீ ராம் ஜெத்மலானி ?? எப்பிடிப்பட்ட ஆளப்பா உவரின்ர ஆரம்பவாழ்க்கை கிறிமினல் ரைப் எண்டு கேள்விப்பட்டன் உண்மையோ :? :? :? :? :? :? :? :? :? :? - Luckyluke - 01-05-2006 இந்தியாவின் டாப் கிரிமினல் அனைவருக்கும் ராம்ஜெத்மலானி தான் வழக்கறிஞர்.... ஜெயலலிதாவுக்கும் அவர் வாதாடி இருக்கிறார்... |