12-22-2003, 09:11 PM
என் நண்பர் ஒருவரின் மகன் ஒருவன், போலீஸ் வேலைக்குத்தான் போவேன் என்ற உறுதியுடன் ஒரு வருடமாக ஓட்டம், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் என பல பயிற்சிகள் செய்து உடலை பக்குவப்படுத்தி வந்தான்.
ப்ளஸ் டூ முடித்திருந்த அவனுக்கு வயது 21. சமீபத்தில் அவனை சந்தித்தபோது உடல் மெலிந்து தாடியுடன் காணப்பட்டான்.
விசாரித்ததில், போலீஸ் வேலைக்கு உடல்திறன் தேர்வுக்கு செல்லும் முன் பஸ் ஸ்டாண்டில் உள்ள "எடை போடும் மிஷினில்' ஒரு ரூபாய் போட்டு எடை பார்த்துள்ளான். எடை குறிப்பிட்ட அந்த அட்டையில், "உன் எந்த புது முயற்சியும் இன்று பலனளிக்காது; நிதானமாக முடிவெடு!' என்று எழுதப்பட்டிருந்திருக்கிறது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பையன், உடல் கூறு தேர்வுக்குச் செல்லாமல் வீட்டில் வந்து முடங்கி விட்டான். ஜோதிட சோகம் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்களே... சரியான கல்வி, உடல் தகுதி, பயிற்சி இருந்தும் வாய்ப்பை, வெற்று ஜோதிடத்தை நம்பி தொலைத்து விடாதீர். தன்னம்பிக்கையுடன் செல்லுங்கள்.
—சோ.ராமு, செம்பட்டி
நன்றி: தினமலர்

[i][b]
!
!