01-02-2006, 09:37 PM
மத்தியஸ்தர்களான செல்வமுத்து ஆசிரியருக்கும் தமிழினியக்காவுக்கும் எனது மாண்புமிகு வணக்கம்.இருதரப்பு சகபாடிகளுக்கும் அன்பான வணக்கம்.நாங்கள் பட்டி மன்றம் நடத்தும் அழகையும் வாதப் பிரதிவாதங்களையும் மகிழ்வோடு பாரத்துக்கொண்டிருக்கும் சபையோருக்கும் பணிவான வணக்கம்.எங்களுக்கெல்லாம் இவ்வரிய வாய்ப்பை வழங்கிய ரசிகைக்கு நன்றி.
"\\இன்றைய இளைஞர்களின் பல தேவைகள் பூர்த்தியடைய அவர்கள் வழி கண்டார்கள். இன்றைய இளைஞர்கள் இங்கு கற்ற கல்வியால்... ஏன் இந்த இணையத்தால் எதை எமது இனத்திற்குத் தந்தார்கள்?\\"
சோழியன் அண்ணா இளைஞர்கள் எம்மினத்துக்கு என்ன தரவில்லையென்று இப்படி ஒரு கேள்வியைக் கேட்டனீங்கள்.எங்கட இளைஞர்களான "தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வருடமும் தாயகத்துக்குச் சென்று அங்குள்ள எம் சகோதர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்கள்.உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ இவ்மைப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாயகம் சென்று ஆங்கிலம் மற்றும் கணனி வகுப்புக்களை நடத்துகிறார்கள்.அவர்களுக்கு இங்கு பொழுது போகவில்லையனெறா அங்கு போய் உதவி செய்கிறார்கள்.நீங்கள் சொல்ற மாதிரி இங்கு பிறந்து வளர்ந்தவரகள் என்ற வேறுபாடெல்லாம் என் கண்ணுக்குத் தெரியவில்லை.சுனாமி நேரம் கூட அலை மூன்றில் தாயகம் சென்ற மாணவர்கள் மயூரி இல்லத்துக்கும் சென்று அங்குள்ள சிறார்களுடன் அளவளாவிவிட்டு சென்ற சில மணி நேரத்துள் அந்தப் பிஞ்சுகளில் முன்றிலொரு பங்கினர் எம்மோடு இனி இல்லை.அங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனவுளைச்சலை அகற்ற போராளிகளோடு சேர்ந்து இயங்கியவர்கள் இவ்மைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்தான்.திரும்பி இங்கு வந்த பிறகும் இணையம் முலம் தங்களாலான உதவிகளைச் செய்துகொண்டுதானிருக்கிறார்கள்.மீரா என்றொரு மருத்துவர் இங்கிருந்து சென்று ஆறு மாதங்கள் பணியாற்றி விட்டு வந்திருக்கிறார்.முடிந்தால் அங்கு சென்று பணியாற்றும் இளைஞர்கள் அங்கிருந்து பரிமாறும் ஈமெயிலை உங்களுக்குத் தருகிறேன்.இன்னொன்று கேளுங்கள் சோழியன் அண்ணா வைகாசியில் உலகத்தமிழ் இளைஞர்கள் ஒன்றுகூடி தமிழ் மாநாடு நடாத்தப்போகிறார்கள் தெரியுமா?இணையம் மூலம்தான் அதற்கான முழுத்தொழிற்பாடும் நடக்கிறது.தொண்டர்களை உள் வாங்குவதிலிருந்து போஸ்ரர் சரிபார்ப்பது இப்பn அனைத்துமே இணையத்தின் துணையோடுதான் நடக்கிறது.
பணத்துக்காய் பல்லிழிக்கும் புல்லுருவிகள் இல்லையேல் இளைஞர்கள் எவ்வளவோ செய்ய முடியும்.தயவு செய்து என்ன இளைஞர்கள் செய்தவை என்று கேக்காதயுங்கோ.
மற்றது இங்கு பிறந்து வளரும் பிள்ளைகளுக்கும் தாயகம் தமிழீழத் தாகம் நிறையவே இருக்கு.தாயக உணர்விருந்தால் பிள்ளை போராடப்போயிடும் என்று நினைக்கிற ஒரு சில பெற்றோரைத் தவிர மற்ற பெற்றோர்கள் தங்கள் பிள்ளையால் தம்மினத்துக்கு சிறு உதவியேனும் செய்ய முடியுமா என்றுதான் நினைக்கிறார்கள்.மகமாஸ்ரர் பல்கழைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியம் செஞ்சோலைச் சிறார் இருவரைத் தத்தெடுத்திருக்கிறார்கள் உங்களுக்குத் தெரியுமா அது.ஏன் எம்மிளையருக்கு அந்தக்காசை செலவிட வேறிடம் இல்லையா?
இணையத்தால எனக்கு என்ன நனமையென்று சொல்றன்.ஒரு நாள் விரிவுரைக்குப் போக முடியவில்லை என்றால் ஒன்றில் பாடத்தளத்தில் விரிவுரைக்கான வாசிப்பன்.அல்லது பதிவு செய்யப்பட்ட ஒலிவடிய விரிவுரைய ஒரு நண்பர் மூலம் இணையத்தினூடு பெற்றுக் கேட்பேன்.ஒரு ஒப்படையைச் சமர்ப்பிக்கத்தான் அன்று கல்லூரிக்குப் போகவேண்டியிருந்தால் ஒரு ஈமெயில்ல விசயம் முடிஞ்சிடும்.முன்னர் மாதிரி பாடஅட்டவணை எடுக்கவோ புத்தகம் எடுக்கவோ நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.எக்ஸாம் முடிஞ்ச உடனே டிஸ்கஸனுக்குப் போய் யாருக்கு என்ன விடை வந்தது என்று அறியலாம்.ஒன்லைன் குயிஸ் செய்யலாம்.நூல் நிலைய புத்தகங்களை ஹோல்ட்ல போடலாம் றினியு பண்ணலாம்.யுனி தொடங்க முதலே கோர்ஸ் அவுட்லைன் பார்க்கலாம்.பேராசிரியர் அவேன்ர உதவியாளர்களோட நேரில கதைக்க சந்தர்ப்பம் கிடையாதபோது டிஸ்கஸன் போர்டுக்குப் போய்க்கதைக்கலாம்.இவ்வளவு ஏன் ஒன்லைன் டிகிறீ படிச்சு எடுக்குதுகள் சனம்.வேற நாட்டில இருக்கிற உறவினரோட நண்பர்களோடு வெப்காமில சற் பண்ணலாம்.ஸ்கைப் பயன்படுத்தி உரையாடலாம்.இன்னும் நிறைய இருக்கு.
கணனிக்கு முன்னாலயே இருந்தால் நோய் வாய்ப்பட வாய்ப்பிருக்கு எண்ணுபவர்கள் ஏர்கோனோமிக்ஸ் தளபாட வசதியைப் பயன்படுத்துங்கோ.இன்னும் பத்து வருடங்களில் வங்கி நடவடிக்கைகள் குறைக்கப்பட்டால் எல்லாரும் இணையத்தினூடுதான் காசுப்பரிமாற்றம் எல்லாம் செய்ய வேண்டி வந்தால் அப்ப என்ன செய்வம்.தொழில்நுட்ப வளர்ச்சியினால் கிடைக்கும் அனுகூலங்களை இருகரம் சேர்த்துப் பெற்றுக்கொண்ட நாங்கள் பிரதிகூலங்களையும் சமாளிக்கத்தான் வேண்டும்.
அதே போலதான் இணையத்தில ஆபாசப்படமிருக்கு கெட்டுப்போக வழியிருக்கு என்று புலம்பாம அன்னம் மாதிரி பாலைமட்டும் குடியுங்கோ தண்ணியை விடுங்கோ.ஆபாசம் வன்முறையெல்லாம் தொலைக்காட்சியிலும் இருந்தது தானே அங்க எப்பிடி
பெற்றோர் கட்டுப்பாட்டு வசதி இருந்ததோ அத மாதிரி கணனியிலும் இருக்குப் பாவியுங்கோ.ஒரு கொஞ்சக்காசோட அந்நிய நாட்டில பிழைக்க முடியும் என்று நம்பி வந்த பெற்றோருக்கு குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்கவும் நம்பிக்கை வேணும்.
நடுவர் தமிழினியக்கா வாசிப்பு மனிதனைப் பூரணமடையச் செய்கிறது.வானொலியிலோ தொலைக்காட்சியிலோ செய்திகளை அறிய முடியாத நேரத்தில் உத்தியோக பூர்வ இணைத்தளங்களில் செய்தியை அறிந்து வைத்திருத்தல் அவசியம்தானே.பாடசாலையிலோ வேலைத்தளத்திலோ அக்கறையுள்ள வேற்றின நண்பர் உங்கட நாட்டுப்பிரச்சனை பற்றிக் கேட்டால் நான் இன்றைக்கு செய்தி நேரத்துக்கு வீட்ட இல்லையென்று சொல்லாமல் அக்கறையான ஒருதரோட அளவளவாவது நாட்டு நடப்பை அறிந்து வைச்சிருக்கோணும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.அது மட்டுமில்ல கூகில்ல என்ன நடக்குது பைடோவ யார் வாங்கினவை இப்பிடி எல்லாத்தையும் வாசிக்கிறதால அறிவு விருத்தியடையும் ஆனால் நீங்கள அறிவென்பதை எப்பிடி நோக்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
நீங்கள் சொல்ற மாதிரி இணையத்தில உள்ளதைக் கொண்டே குடுக்க அதை வாங்கி திருத்துற அளவுக்கு யாரும் முட்டாள்கள் அல்ல.எங்க எப்ப எந்தத்த தளத்தில இருந்து சுடப்பட்டிருக்கு என்று துல்லியமாகச் சொல்லும் மென்பொருள்கள் பாடசாலைகளில் பல்கலைக்கழகங்களில் எல்லாமுண்டு.சில பாடங்களுக்கு இணையத்தளங்களை தகுந்த சைற்றேசனோடு பயன்படுத்தலாம்.சில பாடங்களுக்கு புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் மட்டுமே பாவிக்கலாம்.இணையத்தை கட்டாயம் மற்றவருடைய வேலையக் களவாடத்தான் பாவிக்கவேண்டுமா அவர்கள் ஒரு கடினமான விளக்கத்ததை இலகுவான நடையில் எழுதியிருந்தால் அதை வாசிச்சு அறிவை வளர்க்கலாமே தமழினியக்கா.
உங்கட வங்கி ரகசிய அலுவல்களை மற்றவர் ஹாக் பண்ணமுடியாமல் செய்யத்தான் தீச்சுவர் வைச்சிருக்கோணும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
முகம்ஸ் பட்டி மன்றத்துக்கு வரேக்க ஒட்டகப்பாலென்று வேறென்னத்தயோ குடிச்சிட்டு வந்திட்டார்.விஸ்ணு எப்ப சொன்னவர் சிறந்ந வாழ்க்கைத்துணையை இணையத்தில சந்திக்கலாம் என்று.இருந்தாலும் இணையத்தில நாங்கள் எத்தில நல்ல நண்பர்களைச் சந்திக்கிறம் அப்பிடி வாழ்க்கைத்துணையைச் சந்திக்க நேரிட்டால் அதிலென்ன தீமை? கனடாவிலயே பக்கத்தில இருக்கும் ஆக்களை எல்லாம் யாழிலதான் சந்திச்சிருக்கிறன்.அது நன்மைதானே முகம்ஸ்.ஏன் முகம்ஸ் விஸ்ணு அரட்டையும் இசை கேக்கிறதைச் சேர்ததுத்தானே சொன்னவர் புத்துணர்ச்சி தரும் என்று.உங்களுக்கென்ன அரைவாசிதான் மண்டைக்குள்ள புகுந்ததே.பாலைவனத்தில உங்களுக்கு நிறை பீச் இருக்காக்கும். எனக்கெல்லாம் பீச்சுக்குப் போறதெண்டால் நேரம் காலநிலை எல்லாம் சரியா வரணுமே.உடற்பயிற்சியை எவ்வளவு நேரம்தான் செய்துகொண்டே இருக்கிறது.அரட்டையும் மனசை லேசாக்கிறதால விஸ்ணு அப்பிடிச் சொன்னவர்.அது சரி நீங்கள் வயசு போன காலத்தில பீச்சுக்கு காலார நடக்கப்போறனீங்கள்.நடவுங்கோ கொலஸ்ரோல் மாரடைப்பெல்லாம் வராது.
இளம்பெண்கள் எத்தின பேரை சுதந்திரமா எழுத விடுறியள்.ஒரு கருத்துச் சொன்னா அதைத் திரிச்சு அவேன்ர குடும்பத்தோட பொருத்திப்பாத்து என்னல்லாம் நடக்குது.நான் இப்பிடி போன வைகாசிலதான் இணையத்தில ஏதோ எழுதத்தொடங்கினான்.ஆனால் பதினேழு வயசில முதல்க்கதை ஒரு பத்திரிக்கைல வர சொந்தக்காரர் எல்லாம் கதை நல்லாத்தானிருக்கு ஆனால் உனக்குது வேண்டாம்.உது உனக்கு சோறு போடாது அது இது என்று வியாக்கியானம் செய்தவை.நான் இப்பிடியெல்லாம் எழுதுறது என் குடும்பத்தில யாருக்குமே தெரியாது.இது பெண்களுக்கு மட்டுமில்ல ஆண்களுக்கும் பொருந்தும்.இணையத்தில எழுதுறதுக்கு சுதந்திரம் அதிகம்தானே.வசதியும் தானே நாங்களே எழுதி நாங்களே பதிவு செய்து அதில ஒரு சந்தோசம் இருக்கெல்லோ.
முகம்ஸ் பெற்றோருக்குப்பாட அறிவு குறைவென்றாலும் பட்டறிவு நிறையதானே.திருகோணமலைக்கு வந்து கேக்கிறனே முகம்ஸ் செய்த குழப்படியெல்லாம் தெரியாதோ என்று.
கணனில நாங்கள் hide folder option பாவிச்சா நீங்கள் show hide folder option தெரிஞ்சு வைச்சிருங்கோ.<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நீங்க சொன்ன இந்தியாவில தான் அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் மலிவான விலையில் 700 சானல்கள் கொண்ட ஒரு டிஸ்க்கை விற்பனைக்கு விட்டது.சன் ரீவி செய்தியிலை பார்த்தது.பெயர்கள் ஞாபகம் இல்லை.அந்த டிஸ்க் ஏனிப்பிடி மலிவாக விற்கப்பட்டடு எப்பிடி இவ்வளவு விற்பனையானது என்று ஆராய்ந்ததில் அதில் பல வெளிநாட்டு தடைசெய்யப்பட்ட சானல்கள் இருந்ததாம்.அதால பார்க்கிறதுக்கு இணையம்தான் கதி என்றில்லை.இப்பெல்லாம் ஹிந்திப்படத்திலெல்லாம் எல்லாம் காட்டினமே கெட்டுப்போகணும் என்றால் நிறைய வழியிருக்கு.
ஈராக் படங்கள் பத்திரிக்கைகளில் ஒரு அமெரிக்க அதிகாரி ஆண்கைதிகளை பிறப்புறுப்பில் சிகரெட்டால் சுடும் படங்கள் வந்திருந்தனதானே.
முகம்ஸ் அந்த ஒரு மாதிரியான தளங்களுக்குப் போற ஆகள்களில எத்தின சதவீதத்தினர் இளைஞர்கள்??முப்பது நாற்பது வயசெல்லாம் இளையரில்லையாம்.உங்களுக்கொரு விசயம் தெரியுமோ ஆபாச தளங்களுக்குப் போன ஒரு 40 வயசாள் தன் மனனவியை தான் பார்த்த படங்கள் போல பார்க்க ஆசைப்பட்டு இப்ப விவாகாரத்து ஆயிட்டுது.
கனக்க நேரம் எடுத்திட்டன் போல.திரும்பவும் சொல்றன் இணையத்தால் நாமடையும் நன்மைகள் பலப்பல ஆதலால் அன்னமாய் இருப்போம்.
"\\இன்றைய இளைஞர்களின் பல தேவைகள் பூர்த்தியடைய அவர்கள் வழி கண்டார்கள். இன்றைய இளைஞர்கள் இங்கு கற்ற கல்வியால்... ஏன் இந்த இணையத்தால் எதை எமது இனத்திற்குத் தந்தார்கள்?\\"
சோழியன் அண்ணா இளைஞர்கள் எம்மினத்துக்கு என்ன தரவில்லையென்று இப்படி ஒரு கேள்வியைக் கேட்டனீங்கள்.எங்கட இளைஞர்களான "தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வருடமும் தாயகத்துக்குச் சென்று அங்குள்ள எம் சகோதர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்கள்.உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ இவ்மைப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாயகம் சென்று ஆங்கிலம் மற்றும் கணனி வகுப்புக்களை நடத்துகிறார்கள்.அவர்களுக்கு இங்கு பொழுது போகவில்லையனெறா அங்கு போய் உதவி செய்கிறார்கள்.நீங்கள் சொல்ற மாதிரி இங்கு பிறந்து வளர்ந்தவரகள் என்ற வேறுபாடெல்லாம் என் கண்ணுக்குத் தெரியவில்லை.சுனாமி நேரம் கூட அலை மூன்றில் தாயகம் சென்ற மாணவர்கள் மயூரி இல்லத்துக்கும் சென்று அங்குள்ள சிறார்களுடன் அளவளாவிவிட்டு சென்ற சில மணி நேரத்துள் அந்தப் பிஞ்சுகளில் முன்றிலொரு பங்கினர் எம்மோடு இனி இல்லை.அங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனவுளைச்சலை அகற்ற போராளிகளோடு சேர்ந்து இயங்கியவர்கள் இவ்மைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்தான்.திரும்பி இங்கு வந்த பிறகும் இணையம் முலம் தங்களாலான உதவிகளைச் செய்துகொண்டுதானிருக்கிறார்கள்.மீரா என்றொரு மருத்துவர் இங்கிருந்து சென்று ஆறு மாதங்கள் பணியாற்றி விட்டு வந்திருக்கிறார்.முடிந்தால் அங்கு சென்று பணியாற்றும் இளைஞர்கள் அங்கிருந்து பரிமாறும் ஈமெயிலை உங்களுக்குத் தருகிறேன்.இன்னொன்று கேளுங்கள் சோழியன் அண்ணா வைகாசியில் உலகத்தமிழ் இளைஞர்கள் ஒன்றுகூடி தமிழ் மாநாடு நடாத்தப்போகிறார்கள் தெரியுமா?இணையம் மூலம்தான் அதற்கான முழுத்தொழிற்பாடும் நடக்கிறது.தொண்டர்களை உள் வாங்குவதிலிருந்து போஸ்ரர் சரிபார்ப்பது இப்பn அனைத்துமே இணையத்தின் துணையோடுதான் நடக்கிறது.
பணத்துக்காய் பல்லிழிக்கும் புல்லுருவிகள் இல்லையேல் இளைஞர்கள் எவ்வளவோ செய்ய முடியும்.தயவு செய்து என்ன இளைஞர்கள் செய்தவை என்று கேக்காதயுங்கோ.
மற்றது இங்கு பிறந்து வளரும் பிள்ளைகளுக்கும் தாயகம் தமிழீழத் தாகம் நிறையவே இருக்கு.தாயக உணர்விருந்தால் பிள்ளை போராடப்போயிடும் என்று நினைக்கிற ஒரு சில பெற்றோரைத் தவிர மற்ற பெற்றோர்கள் தங்கள் பிள்ளையால் தம்மினத்துக்கு சிறு உதவியேனும் செய்ய முடியுமா என்றுதான் நினைக்கிறார்கள்.மகமாஸ்ரர் பல்கழைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியம் செஞ்சோலைச் சிறார் இருவரைத் தத்தெடுத்திருக்கிறார்கள் உங்களுக்குத் தெரியுமா அது.ஏன் எம்மிளையருக்கு அந்தக்காசை செலவிட வேறிடம் இல்லையா?
இணையத்தால எனக்கு என்ன நனமையென்று சொல்றன்.ஒரு நாள் விரிவுரைக்குப் போக முடியவில்லை என்றால் ஒன்றில் பாடத்தளத்தில் விரிவுரைக்கான வாசிப்பன்.அல்லது பதிவு செய்யப்பட்ட ஒலிவடிய விரிவுரைய ஒரு நண்பர் மூலம் இணையத்தினூடு பெற்றுக் கேட்பேன்.ஒரு ஒப்படையைச் சமர்ப்பிக்கத்தான் அன்று கல்லூரிக்குப் போகவேண்டியிருந்தால் ஒரு ஈமெயில்ல விசயம் முடிஞ்சிடும்.முன்னர் மாதிரி பாடஅட்டவணை எடுக்கவோ புத்தகம் எடுக்கவோ நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.எக்ஸாம் முடிஞ்ச உடனே டிஸ்கஸனுக்குப் போய் யாருக்கு என்ன விடை வந்தது என்று அறியலாம்.ஒன்லைன் குயிஸ் செய்யலாம்.நூல் நிலைய புத்தகங்களை ஹோல்ட்ல போடலாம் றினியு பண்ணலாம்.யுனி தொடங்க முதலே கோர்ஸ் அவுட்லைன் பார்க்கலாம்.பேராசிரியர் அவேன்ர உதவியாளர்களோட நேரில கதைக்க சந்தர்ப்பம் கிடையாதபோது டிஸ்கஸன் போர்டுக்குப் போய்க்கதைக்கலாம்.இவ்வளவு ஏன் ஒன்லைன் டிகிறீ படிச்சு எடுக்குதுகள் சனம்.வேற நாட்டில இருக்கிற உறவினரோட நண்பர்களோடு வெப்காமில சற் பண்ணலாம்.ஸ்கைப் பயன்படுத்தி உரையாடலாம்.இன்னும் நிறைய இருக்கு.
கணனிக்கு முன்னாலயே இருந்தால் நோய் வாய்ப்பட வாய்ப்பிருக்கு எண்ணுபவர்கள் ஏர்கோனோமிக்ஸ் தளபாட வசதியைப் பயன்படுத்துங்கோ.இன்னும் பத்து வருடங்களில் வங்கி நடவடிக்கைகள் குறைக்கப்பட்டால் எல்லாரும் இணையத்தினூடுதான் காசுப்பரிமாற்றம் எல்லாம் செய்ய வேண்டி வந்தால் அப்ப என்ன செய்வம்.தொழில்நுட்ப வளர்ச்சியினால் கிடைக்கும் அனுகூலங்களை இருகரம் சேர்த்துப் பெற்றுக்கொண்ட நாங்கள் பிரதிகூலங்களையும் சமாளிக்கத்தான் வேண்டும்.
அதே போலதான் இணையத்தில ஆபாசப்படமிருக்கு கெட்டுப்போக வழியிருக்கு என்று புலம்பாம அன்னம் மாதிரி பாலைமட்டும் குடியுங்கோ தண்ணியை விடுங்கோ.ஆபாசம் வன்முறையெல்லாம் தொலைக்காட்சியிலும் இருந்தது தானே அங்க எப்பிடி
பெற்றோர் கட்டுப்பாட்டு வசதி இருந்ததோ அத மாதிரி கணனியிலும் இருக்குப் பாவியுங்கோ.ஒரு கொஞ்சக்காசோட அந்நிய நாட்டில பிழைக்க முடியும் என்று நம்பி வந்த பெற்றோருக்கு குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்கவும் நம்பிக்கை வேணும்.
நடுவர் தமிழினியக்கா வாசிப்பு மனிதனைப் பூரணமடையச் செய்கிறது.வானொலியிலோ தொலைக்காட்சியிலோ செய்திகளை அறிய முடியாத நேரத்தில் உத்தியோக பூர்வ இணைத்தளங்களில் செய்தியை அறிந்து வைத்திருத்தல் அவசியம்தானே.பாடசாலையிலோ வேலைத்தளத்திலோ அக்கறையுள்ள வேற்றின நண்பர் உங்கட நாட்டுப்பிரச்சனை பற்றிக் கேட்டால் நான் இன்றைக்கு செய்தி நேரத்துக்கு வீட்ட இல்லையென்று சொல்லாமல் அக்கறையான ஒருதரோட அளவளவாவது நாட்டு நடப்பை அறிந்து வைச்சிருக்கோணும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.அது மட்டுமில்ல கூகில்ல என்ன நடக்குது பைடோவ யார் வாங்கினவை இப்பிடி எல்லாத்தையும் வாசிக்கிறதால அறிவு விருத்தியடையும் ஆனால் நீங்கள அறிவென்பதை எப்பிடி நோக்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
நீங்கள் சொல்ற மாதிரி இணையத்தில உள்ளதைக் கொண்டே குடுக்க அதை வாங்கி திருத்துற அளவுக்கு யாரும் முட்டாள்கள் அல்ல.எங்க எப்ப எந்தத்த தளத்தில இருந்து சுடப்பட்டிருக்கு என்று துல்லியமாகச் சொல்லும் மென்பொருள்கள் பாடசாலைகளில் பல்கலைக்கழகங்களில் எல்லாமுண்டு.சில பாடங்களுக்கு இணையத்தளங்களை தகுந்த சைற்றேசனோடு பயன்படுத்தலாம்.சில பாடங்களுக்கு புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் மட்டுமே பாவிக்கலாம்.இணையத்தை கட்டாயம் மற்றவருடைய வேலையக் களவாடத்தான் பாவிக்கவேண்டுமா அவர்கள் ஒரு கடினமான விளக்கத்ததை இலகுவான நடையில் எழுதியிருந்தால் அதை வாசிச்சு அறிவை வளர்க்கலாமே தமழினியக்கா.
உங்கட வங்கி ரகசிய அலுவல்களை மற்றவர் ஹாக் பண்ணமுடியாமல் செய்யத்தான் தீச்சுவர் வைச்சிருக்கோணும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->முகம்ஸ் பட்டி மன்றத்துக்கு வரேக்க ஒட்டகப்பாலென்று வேறென்னத்தயோ குடிச்சிட்டு வந்திட்டார்.விஸ்ணு எப்ப சொன்னவர் சிறந்ந வாழ்க்கைத்துணையை இணையத்தில சந்திக்கலாம் என்று.இருந்தாலும் இணையத்தில நாங்கள் எத்தில நல்ல நண்பர்களைச் சந்திக்கிறம் அப்பிடி வாழ்க்கைத்துணையைச் சந்திக்க நேரிட்டால் அதிலென்ன தீமை? கனடாவிலயே பக்கத்தில இருக்கும் ஆக்களை எல்லாம் யாழிலதான் சந்திச்சிருக்கிறன்.அது நன்மைதானே முகம்ஸ்.ஏன் முகம்ஸ் விஸ்ணு அரட்டையும் இசை கேக்கிறதைச் சேர்ததுத்தானே சொன்னவர் புத்துணர்ச்சி தரும் என்று.உங்களுக்கென்ன அரைவாசிதான் மண்டைக்குள்ள புகுந்ததே.பாலைவனத்தில உங்களுக்கு நிறை பீச் இருக்காக்கும். எனக்கெல்லாம் பீச்சுக்குப் போறதெண்டால் நேரம் காலநிலை எல்லாம் சரியா வரணுமே.உடற்பயிற்சியை எவ்வளவு நேரம்தான் செய்துகொண்டே இருக்கிறது.அரட்டையும் மனசை லேசாக்கிறதால விஸ்ணு அப்பிடிச் சொன்னவர்.அது சரி நீங்கள் வயசு போன காலத்தில பீச்சுக்கு காலார நடக்கப்போறனீங்கள்.நடவுங்கோ கொலஸ்ரோல் மாரடைப்பெல்லாம் வராது.
இளம்பெண்கள் எத்தின பேரை சுதந்திரமா எழுத விடுறியள்.ஒரு கருத்துச் சொன்னா அதைத் திரிச்சு அவேன்ர குடும்பத்தோட பொருத்திப்பாத்து என்னல்லாம் நடக்குது.நான் இப்பிடி போன வைகாசிலதான் இணையத்தில ஏதோ எழுதத்தொடங்கினான்.ஆனால் பதினேழு வயசில முதல்க்கதை ஒரு பத்திரிக்கைல வர சொந்தக்காரர் எல்லாம் கதை நல்லாத்தானிருக்கு ஆனால் உனக்குது வேண்டாம்.உது உனக்கு சோறு போடாது அது இது என்று வியாக்கியானம் செய்தவை.நான் இப்பிடியெல்லாம் எழுதுறது என் குடும்பத்தில யாருக்குமே தெரியாது.இது பெண்களுக்கு மட்டுமில்ல ஆண்களுக்கும் பொருந்தும்.இணையத்தில எழுதுறதுக்கு சுதந்திரம் அதிகம்தானே.வசதியும் தானே நாங்களே எழுதி நாங்களே பதிவு செய்து அதில ஒரு சந்தோசம் இருக்கெல்லோ.
முகம்ஸ் பெற்றோருக்குப்பாட அறிவு குறைவென்றாலும் பட்டறிவு நிறையதானே.திருகோணமலைக்கு வந்து கேக்கிறனே முகம்ஸ் செய்த குழப்படியெல்லாம் தெரியாதோ என்று.
கணனில நாங்கள் hide folder option பாவிச்சா நீங்கள் show hide folder option தெரிஞ்சு வைச்சிருங்கோ.<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->நீங்க சொன்ன இந்தியாவில தான் அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் மலிவான விலையில் 700 சானல்கள் கொண்ட ஒரு டிஸ்க்கை விற்பனைக்கு விட்டது.சன் ரீவி செய்தியிலை பார்த்தது.பெயர்கள் ஞாபகம் இல்லை.அந்த டிஸ்க் ஏனிப்பிடி மலிவாக விற்கப்பட்டடு எப்பிடி இவ்வளவு விற்பனையானது என்று ஆராய்ந்ததில் அதில் பல வெளிநாட்டு தடைசெய்யப்பட்ட சானல்கள் இருந்ததாம்.அதால பார்க்கிறதுக்கு இணையம்தான் கதி என்றில்லை.இப்பெல்லாம் ஹிந்திப்படத்திலெல்லாம் எல்லாம் காட்டினமே கெட்டுப்போகணும் என்றால் நிறைய வழியிருக்கு.