01-02-2006, 08:08 PM
ஐரோப்பாவில் எரிவாயு பற்றாக்குறை ?
பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, போலந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளுக்காக எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்நாடுகளில் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளிற்கு தேவையான எரிவாயுவின் பெரும்பங்கை ரசியா வழங்கி வருகின்றது. ரசிய எரிபொருள் நிறுவனமான காய்புரோ அண்மையில் அதன் அண்டை நாடான உக்ரெய்னுக்கு வழக்கப்பட்டு வந்த எரிவாயுவின் விலையை உயர்த்த போவதாக தெரிவித்தபோதிலும் அதற்கு உக்ரெய்ன் உடன்படவில்லை. இந்த இழுபறியை தொடர்ந்து உக்ரெய்னுக்கான எரிவாயு விநியோகத்தை ஜனவரி 1 முதல் ரசியா நிறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் பலவும் தமது எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமக்கு குறைந்த அளவிலான எரிவாயுவே குழாய்கள் மூலம் கிடைப்பதாக அறிவித்துள்ளன. ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகம் செய்யும் ரசிய எரிவாயு குழாய்களில் பெரும்பாலானவை உக்ரெய்ன் ஊடாகவே செல்கின்றன. இந்த குழாய்களில் இருந்து உக்ரெய்ன் எரிவாய்வை திருட ஆரம்பித்திருப்பதாலேயே ஐரோப்பிய விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரசியா குற்றம் சாட்டியுள்ளது.
செய்தி மூலம்: பிபிசி இணையத்தளம்
மேலும் படிக்க http://news.bbc.co.uk/1/hi/world/europe/45...5726.stm[/size]

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>