01-02-2006, 07:07 PM
<b>இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி வழங்காது - கருணாநிதி கருத்து</b>
திமுக தலைவர் கருணாநிதி இலங்கைக்கு இந்திய அரசு இராணுவ உதவி அளிக்காது என்றே தாம் நினைப்பதாகக் கூறியிருக்கிறார்.
சென்னையில் இன்று ஜனநாயக முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதியிடம், இலங்கைக்கு ராணுவ உதவி அளிக்கப்படக்கூடாது என பாமக, மற்றும் மதிமுக கட்சிகள் குரல் கொடுத்திருப்பது குறித்து கேட்கப்பட்டது. அவர்கள் கருத்தை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள், மத்திய அரசும் அதற்கு மாறாக சிந்திப்பதாக தெரியவில்லை என்றார் கருணாநிதி.
தொடர்ந்து திமுக வெளிநாட்டுப் பிரச்சினைகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிலையினை ஏற்று செயல்படுவதாகத் தெரிகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அதிலும் மாற்றமில்லை, இலங்கைத் தமிழர்கள் எந்தத் துயரத்திற்கும் ஆட்படுத்தப்படக்கூடாது என்ற திமுகவின் கொள்கையிலும் மாற்றமில்லை என்றார் அவர்.
சில தினங்களுக்குமுன் பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், திராவிடர் கழகம் ஆகியவை இணைந்து சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தி, இலங்கையின் புதிய அதிபர் மகிந்த ராஜபக்சவைக் கண்டித்தும், அந்நாட்டிற்கு ராணுவ உதவி அளிக்க்க்கூடாது எனக் கோரியும் தீர்மானம் இயற்றியது.
அக்கூட்டத்தில் திமுகவின் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை. மதிமுக, பாமக நிலைப்பாடு குறித்தும் கருத்து தெரிவிக்கவில்லை.
இந்நிலையிலேயே இன்றை செய்தியாளர் சந்திப்பில் கருணாநிதி ராணுவ உதவி தவறு என்ற ரீதியில் பேசியிருக்கிறார். பொதுவாகவே திமுக இலங்கைப்பிரச்சினையில் தீவிரமாகப் பேசுவதை பல ஆண்டுகளாக தவிர்த்து வந்தாலும்கூட, இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரானதாக கருதப்படும் விஷயங்களில், தாங்கள் ஒன்றும் அவர்கள் நலனுக்கு எதிரானவர்களல்ல என்பதை தெளிவுபடுத்தியிருக்ககிறது என்பதை நாம் இங்கே நோக்கலாம்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட அதிபர் ராஜபக்சேயை சந்திப்பதை தவிர்த்திருக்கிறார். முதலில் அதிபர் தமிழ்நாட்டிற்கு வந்து ஜெயலலிதாவை சந்திப்பதாகத்தான் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று அவரது வருகை ரத்தானது. காரணம் தெரிவிக்கப்படவில்லை.
சட்டமனறத் தேர்தல்கள் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் எதிர்க்கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையை தனக்கு எதிராக பயன்படுத்தவேண்டாம் என நினைத்தே முதல்வர் ஜெயலலிதா அதிபர் ராஜபக்சவை இங்கு வரவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருப்பார் என்கின்றனர் நோக்கர்கள்.
¿ýÈ¢:À¢À¢º¢தமிழோசை

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>