01-02-2006, 05:27 PM
அருவி Wrote:குறுக்ஸ் என்ன சொல்லவாறீர்கள் என்று புரியவே இல்லயே!
ரஷ்யப்புரட்சியில் கிளர்ந்தவர்கள் யார்? என்ன தனி ஒரு சர்வாதிகாரியால் ரஷ்யபுரட்சி ஏற்பட்டதா? ரஷ்யப் புரட்சியின் பின் ஏற்பட்டதே ரஷ்ய சர்வாதிகாரம். அதற்கு முன் ஒன்றுபட்ட மக்களைத்தான் அணைத்துவைத்திருந்தார்கள்.
சரி இந்தியாவிற்கு இது எவ்வாறு பொருந்தாது என்று சொல்கிறீர்கள்?
தென்னாசிய கலாச்சாரம்(பொதுவாக ஆசியக்கலாச்சாரம் என்று சொல்லப்பட்டாலும் ஒரு குறுகிய பிரதேசத்தை எடுத்து நோக்குவோம்) இந்தியாவிடம் இருந்து பரவியது மார்பு தட்டுகிறார்கள். (இதில் அக்கலாச்சாரம் தோன்றிய இடம் இன்று இந்தியாவிற்குள் இல்லையென்பது வேறு விடயம்) அப்படியாயின் அவர்களை எவ்வாறு தம்முடன் அரவணைக்கமுடியாது போனது. காரணம் இந்தியாவின் முரட்டுத்தனம். காந்தி என்ற ஒரு தனிமனிதனின் முகமூடியால் இந்தியா தன் குரோத முகத்தை மறைத்துள்ளது. சந்திரிக்காவிற்கு ஒரு சமாதானம் போல் இந்தியாவிற்கு காந்தீயம். இதில் இருவருக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இருவருடைய முகமூடிகளும் தொடர்ந்து கிழிக்கப்பட்டதுதான்.
அருவி, புரட்சி-போராட்டம் என்பது ஒரு நிலை. அது வெற்றிகரமாக நடந்து முடிந்தாப்பிறகு அதில் நம்பிக்கையோடு பங்கு பற்றிய எல்லோரு புரட்சியில் காட்டிய ஒற்றுமையோடு தொடர்ந்து வாழ்கிறார்களா இல்லையா என்று அடுத்த நிலையையும் பார்க்க வேண்டுமல்லவா?
லெனினை ஒரு சர்வாதிகாரி என்று செல்லும் கிறுக்கன் இல்லை நான். புரட்சி முடிந்த பின்னர் காலம் போகப் போக எல்ல குடியரசிலும் பொரும்பான்மையான மக்கள் கமுயூனிசத்தில் இறுதிவரை நம்பிக்கை வைத்திருந்தார்களா? நம்பிக்கை இழக்கப்பட்ட போது அதன் விளைவுகள் எவ்வாறு கட்டுக்கு மீறாமல் வைக்கப்பட்டிருந்தது என்றும் கொஞ்சம் யோசியுங்கள். நிச்சையமாக கிட்லரின் படையெடுப்பு மீண்டும் ஒன்று சேர உதவியது. அந்த பொது எதிரியை வெற்றி கொண்ட பெருமை தான் (ஒரு போர்த் தளபதியாக) ஸ்ராலினுக்கு உண்டு. ஒரு நாட்டின் (அல்லது பல குடியரசுகளின்) நல்ல தலைவனாக போர் அற்ற காலங்களில் இருக்க முடியவில்லை ஸ்டாலினால்?
புரட்சிக்கு வித்திட்டு உருவாக்கி வழிநடத்தியவரின் (லெனின்) தலமையில் வெற்றி பெற்ற தேசமாக அதிககாலம் அது இருக்கவில்லை. அந்த வகையில் சேவியத்யூனியன் சிறுவயதிலேயே அனாதையானது பிற்காலத்தில் அதன் தேல்விக்கு காரணம் என்று கூறலாம். தீர்க்கதரிசம் கொண்ட தலைவரை அவர்கள் ஆரம்பத்திலேயே இழந்துவிட்டார்கள். பாக்கிஸ்தான் ஜின்னாவை சுதந்திரமடைந்த குறுகிய காலத்தில் இழந்தது அதன் பூகம்பம் நிறைந்த அரசியலிற்கு ஒரு காரணம் எனக் கூறுவார்கள்.
இந்தியா அதனை சுற்றியுள்ள நாடுகளிற்கு (உதாரணத்திற்கு கமுயூனிசம் போன்ற) ஒரு பொதுபடையான கொள்கையை முன்வைத்து வழிகாட்டியாக இருக்க முடியாது. அந்த வகையில் அவர்களை ஒரு பொது எதிரிக்காகவும் அணிதிரள வைக்க முடியாது. ஒன்றாகப் போராடிய ஜின்னாவே வெள்ளைக்காரன் வெளியேறுவது உறுதிப்படுத்தப்பட்டவுடனே ஹிந்துஸ்தான் பாக்கிஸ்தான் என 2 ஆக பிரிக்க வேண்டு என்று விட்டார். பிறகு எங்கு கலாச்சாரத்தின் அடிப்படையில் ஒன்றுபடுவது?
ஒற்றுமையை மூளைச்சலவை செய்து அதுக்கு ஏமாற்றப்படாதவர்களை திணிப்பினால் அடக்கு முறையால் உருவாக்கலாம் என்று கனவு கண்டால் நடக்குமா?


) அப்படியாயின் அவர்களை எவ்வாறு தம்முடன் அரவணைக்கமுடியாது போனது. காரணம் இந்தியாவின் முரட்டுத்தனம். காந்தி என்ற ஒரு தனிமனிதனின் முகமூடியால் இந்தியா தன் குரோத முகத்தை மறைத்துள்ளது. சந்திரிக்காவிற்கு ஒரு சமாதானம் போல் இந்தியாவிற்கு காந்தீயம். இதில் இருவருக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இருவருடைய முகமூடிகளும் தொடர்ந்து கிழிக்கப்பட்டதுதான்.