01-02-2006, 01:24 AM
ஒரு தடவை எனது கல்லூரி நண்பனுடம் பேசிக்கொண்டு இருந்த போது இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பியது பற்றி பேச்சு வந்தது. அப்போது அவன் சொன்னான் இதிலே என்ன தவறு உள்ளது காஸ்மிரிலே இந்திய இராணுவம் இருக்க வில்லையா? பஞ்சாப்பில் இந்திய இராணுவம் இருக்க வில்லையா என்று? பின்புதான் எனக்குத் தெரிந்தது அவனுக்கு இலங்கை ஒரு தனி நாடு என்ற உண்மை தெரியவிலலை என்று. அவன் இலங்கையும் இந்தியாவில் ஒரு பகுதி என்று நினைத்துக்கொண்டிருக்கிறான். பாவம் அவனைப்போல பலர் அங்கு இருக்கிறார்கள். புரியவைக்க நாள் எடுக்கும். சில வேளைகளில் நான் இவ்வாறான கருத்தாடல்களை தவிர்த்துவிடுவதும் உண்டு. ஏன் என்றால் நான் தான் களைத்துப்போவேன் இறுதியில். பயன் எதுவும் இருக்காது.

