01-02-2006, 12:30 AM
<b>இளைஞர்களே!பாதுகாப்பான பகுதிக்கு நகருங்கள் - <i>பொங்கியெழும் மக்கள் படை அறிவிப்பு </i></b>
தமிழ் இளைஞர்கள் தமக்குப் பாதுகாப்பான பகுதிகளுக்கு அதாவது விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய சுூழல் எழுந்துள்ளது. சிங்களப் படைகளால் கேவலமாக குதறப்பட்டு கொல்லப்படுவதிலிருந்து தப்பிக்க பாதுகாப்பை நோக்கிச் செல்வது என்பது இயல்பான, சரியான செயற்பாடாகும். இவ்வாறு யாழ்ப்பாண பொங்கியெழும் மக்கள் படை தெரிவித்துள்ளது.
<b>யாழ். பொங்கியெழும் மக்கள் படை வெளியிட்டுள்ள அறிக்கை:</b>
கடந்த பல நாட்களாக சிறிலங்கா இனவெறிப் படைகள் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது படுகொலைகளையும், காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல்களையும் மேற்கொண்டுவருகிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் படை உயர்பீடத்தின் வழிகாட்டுதலுக்கமைவாக இத்தாக்குதல்கள் நடைபெறுகின்றன. அதாவது எம்மை அச்சுறுத்திப் பணிய வைத்துவிடலாம் என்ற உத்தியுடன் செயற்படுகிறார்கள்.
அத்துடன் சந்திக்குச் சந்தி வீதி ஓரங்களில் குவிக்கப்பட்டுள்ள படைகள் தெருவில் செல்கின்றன இளைஞர்களை குறிவைத்தே தமது தாக்குதல்களை நடத்துகின்றனர். அண்மைய நாட்களில் வீதிகளில் மறித்து இளைஞர்களைக் கொல்வதும், அவர்களைக் கைது செய்து இழுத்துப் போவதுவும், அடித்து நொறுக்கி குருதி வழிந்தோட அவர்களைத் தெருவோரங்களில் காட்சிக்காகக் குந்த வைப்பதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. கடந்த 28.12.2005 அன்று கொடிகாமம் மந்துவில் பகுதியில் வீட்டில் இருந்த 16 வயது சிறுவனை வெளியே இழுத்துவந்து பெற்றோர் முன்னிலையிலேயே சுட்டுக் கொன்றுவிட்டனர். சிங்கள இனவெறி ஓநாய்கள் வெறிகொண்டு அலையத் தொடங்கிவிட்டன. இவை தொடரவே போகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நிலைமையைத் தணிவுக்குக் கொண்டுவர முயற்சி செய்தோம். ஆனால் சிங்களப்படைகளோ அப்பாவிகள் மீதான தாக்குதல்களை, படுகொலைகளை, பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலை நிறுத்துவதாக இல்லை. இன அழிப்புப் போரொன்றினை தமிழர்கள் மீது திணிப்பதற்கு சிங்கள அரசாங்கம் கங்கணம் கட்டி நிற்கிறது. சமாதானம் என்ற கோசம் சிங்கள அரசாங்கத்திக்ற்கு யுத்தத்திற்கான ஒரு வழிமுறையேதான்.
எனவேதான் தமிழ் இளைஞர்கள் தமக்குப் பாதுகாப்பான பகுதிகளுக்கு அதாவது விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய சுூழல் எழுந்துள்ளது. சிங்களப் படைகளால் கேவலமாக குதறப்பட்டு கொல்லப்படுவதிலிருந்து தப்பிக்க பாதுகாப்பை நோக்கிச் செல்வது என்பது இயல்பான, சரியான செயற்பாடாகும். பொங்கியெழும் மக்கள் படையினராகிய நாம் சிங்களப் படைவெறியர்களது தமிழின அழிப்புகளை தடுத்தேயாகவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் செயற்பட்டு வருகிறோம். நாம் ஓயப்போவதும் இல்லை, தளரப்போவதும் இல்லை. தமிழினத்தினது சுதந்திரத்தையும், கௌரவத்தையும், பாதுகாப்பினையும் உறுதிசெய்வதற்காக நாம் அனைவருமே ஒன்றிணைந்து போராடுவோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
http://www.eelatamil.net/sankathi/index.ph...=1073&Itemid=26