Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஊரெழுவில் இப்படிச் சோதனை
#1
வீட்டுக்குள் புகுந்து அறைகளை
கொத்திக் கிளறிய படையினர்!
ஊரெழுவில் இப்படிச் சோதனை
ஊரெழுப் பகுதியிலுள்ள வீடு ஒன்றுக்கு மண்வெட்டி கள், பிக்கான்கள், அலவாங்குகளுடன் சென்ற படையினர் அறைகளுக்குள் புகுந்து கொத்திக்கிளறிச் சோதனையிட்டிருக்கின்றனர்.
கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.
வீட்டினுள் தேடுதல் நடத்தப்போவதாக வீட்டு உரிமை யாளரிடம் கூறிய படையினர், அங்கிருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருக்க அவர்களின் கண்முன்னாலேயே சகல அறைகளையும் கொத்திக் கிளறி நாசப்படுத்தினர். வீட்டு முற்றத்தையும் பிக்கான்களால் உழுது பிரட்டி அசிங்கப்படுத்திவிட்டுச் சென்றிருக்கின்றனர்.
அதற்குப் பிறகு கடந்த 27ஆம் திகதி இரவு குறித்த வீட்டுக்குள் மீண்டும் வந்த படையினர் அங்கிருந்த இளைஞர்கள் இருவரை மிரட்டிவிட்டு அவர்கள் வைத்திருந்த கைத்தொலைபேசிகளைப் பறித்துச்சென்றனர் என்று கூறப்பட்டது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக அச்சுவேலிப் பொலீஸ் நிலையத்திலும் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக் குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது.


uthayan
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
ஊரெழுவில் இப்படிச் சோதனை - by Vaanampaadi - 01-01-2006, 08:22 AM
[No subject] - by Rasikai - 01-01-2006, 02:36 PM
[No subject] - by தூயவன் - 01-01-2006, 02:47 PM
[No subject] - by kurukaalapoovan - 01-01-2006, 02:55 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)