![]() |
|
ஊரெழுவில் இப்படிச் சோதனை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஊரெழுவில் இப்படிச் சோதனை (/showthread.php?tid=1683) |
ஊரெழுவில் இப்படிச் சோதனை - Vaanampaadi - 01-01-2006 வீட்டுக்குள் புகுந்து அறைகளை கொத்திக் கிளறிய படையினர்! ஊரெழுவில் இப்படிச் சோதனை ஊரெழுப் பகுதியிலுள்ள வீடு ஒன்றுக்கு மண்வெட்டி கள், பிக்கான்கள், அலவாங்குகளுடன் சென்ற படையினர் அறைகளுக்குள் புகுந்து கொத்திக்கிளறிச் சோதனையிட்டிருக்கின்றனர். கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. வீட்டினுள் தேடுதல் நடத்தப்போவதாக வீட்டு உரிமை யாளரிடம் கூறிய படையினர், அங்கிருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருக்க அவர்களின் கண்முன்னாலேயே சகல அறைகளையும் கொத்திக் கிளறி நாசப்படுத்தினர். வீட்டு முற்றத்தையும் பிக்கான்களால் உழுது பிரட்டி அசிங்கப்படுத்திவிட்டுச் சென்றிருக்கின்றனர். அதற்குப் பிறகு கடந்த 27ஆம் திகதி இரவு குறித்த வீட்டுக்குள் மீண்டும் வந்த படையினர் அங்கிருந்த இளைஞர்கள் இருவரை மிரட்டிவிட்டு அவர்கள் வைத்திருந்த கைத்தொலைபேசிகளைப் பறித்துச்சென்றனர் என்று கூறப்பட்டது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக அச்சுவேலிப் பொலீஸ் நிலையத்திலும் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக் குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. uthayan - Rasikai - 01-01-2006 எப்பதான் தீர்வு?
- தூயவன் - 01-01-2006 <!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin--> எப்பதான் தீர்வு?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->போய் அதுக்கு சத்தியாகிரகம் இருங்கோ. வீட்டில் வந்து கொடுப்பார்கள் :twisted: :twisted: - kurukaalapoovan - 01-01-2006 A9 பூட்டினாலும் 45000 பேரும் சத்தியாகிரகம் தான் விருப்பமோ இல்லையோ இருக்க வேணும். :? ஆனால் காவி உடை தரித்த அரசியல்வாதி சொல்லுறார் A9 பூட்டி பாடம் புகட்டுங்கோ எண்டு. அவர்கள் இழுக்க விரும்பிற ஆப்பு 1 ஆ 2 யாருக்கு சொல்ல :roll: |