12-31-2005, 05:55 PM
Danklas Wrote:உதயன் பத்திரிகை வெளிவந்தது Wrote:உரும்பிராய் கிழக்கு, கரந்தனைப் பிறப்பிட மாகக் கொண்டவரும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய திருமதி துரையப்பா சரஸ்வதி காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற துரையப்பாவின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற செல்லப்பா இலட்சுமிப்பிள்ளை தம்பதியரின் மூத்த மகளும் செல்வராசா (லண்டன்), விக்கினேஸ்வரராஜா (கனடா), <b>காலஞ்சென்ற தயாநிதி (ஆசிரியை)</b> மற்றும் சந்திரலீலா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் கலா வதி, இந்திராதேவி, காலஞ்சென்ற சிவலிங்கராசா மற்றும் குகன் ஆகியோரின் அன்பு மாமியாரும் செந்தீஸ், செந்திலா, வாசுகி, மயூரன், மாலதி, அபிரன், அனுரன் ஆகியோரின் பேர்த்தியும் கபிஷாவின் பூட்டியும் காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் தங்கமணி, காலஞ் சென்ற மகாலிங்கம் (பொலீஸ் உத்தியோகத்தர்), சோதிலிங்கம், பஞ்சலிங்கம் (கனடா), சுந்தரலிங்கம் (ஜேர்மனி), சிவலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (31.12.2005) சனிக் கிழமை கனடாவில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்
செ.சோதிலிங்கம்
(தம்பி). அச்செழு, நீர்வேலி
மன்னிக்கவு செல்வமுத்து அவர்களே,,, உங்கள் சகோதரி ஏற்கனவே உங்களை விட்டு பிரிந்துவிட்டாரா?? என்ன நடந்தது? இயலுமானால் அறியத்தருவீர்களா? :?
ஆமாம் டண். அவர்கள் முதலே கான்சர் என்ற நோயால் இறந்து விட்டதாக அறிந்தேன். அவர் ஒரு சிறந்த ஆசிரியை என்றும் அறிந்தேன்

