12-31-2005, 05:48 PM
<b>மாவட்ட தலைவரா? மாவாட்டுற தலைவரா?</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<i><b>"ஆறு' படத்தில் அரசியல் வசனம்: நடிகை ஐஸ்வர்யா, தயாரிப்பாளர் சரண் உள்பட 3 பேருக்கு சம்மன்</b></i>
"ஆறு' படத்தில் அரசியல்வாதியைக் கிண்டலடிப்பது போன்ற வசனம் தொடர்பான வழக்கில் நடிகை ஐஸ்வர்யா, தயாரிப்பாளர் சரண், இயக்குனர் ஹரி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மூன்று பேரும் மார்ச் 15-ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று மாஜிஸ்திரேட் ராஜசேகரன் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காங்கிரஸ் கட்சித் தலைவராக உள்ளவர் ராஜரத்தினம். இவர், எழும்பூர் 2-வது நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
<b>"ஆறு' படத்தில் நடிகை ஐஸ்வர்யா சவுண்ட் சரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் பொதுக் கூட்டத்தில் பேசுவது போன்ற ஒரு காட்சியில், "டேய் நீ மாவட்ட தலைவராடா இல்லை; மாவாட்டுர தலைவர்டா' என்று வசனம் பேசி நடித்துள்ளார்.</b>
இந்த வசனம் என்னைத் தாக்கி பேசுவது போன்று உள்ளது. ஏனெனில், இந்தப் படத்துக்கு காரைக்குடியைச் சேர்ந்த காங்கிரஸ் செயலர் கண்ணன் தான் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியுள்ளார்.
அவரின் தூண்டுதலின் பேரில் இந்த வசனம் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இது என் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது. எனவே நடிகை ஐஸ்வர்யா, இயக்குனர் ஹரி, தயாரிப்பாளர் சரண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ராஜசேகரன், மூன்று பேரும் மார்ச் 15-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
http://www.dinamani.com/Cinema/CineItems.a...itle=%F9Nn%A7Ls

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>