Yarl Forum
மாவட்ட தலைவரா? மாவாட்டுற தலைவரா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: மாவட்ட தலைவரா? மாவாட்டுற தலைவரா? (/showthread.php?tid=1689)



மாவட்ட தலைவரா? மாவாட்டுற தலைவரா? - vasisutha - 12-31-2005

<b>மாவட்ட தலைவரா? மாவாட்டுற தலைவரா?</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<i><b>"ஆறு' படத்தில் அரசியல் வசனம்: நடிகை ஐஸ்வர்யா, தயாரிப்பாளர் சரண் உள்பட 3 பேருக்கு சம்மன்</b></i>

"ஆறு' படத்தில் அரசியல்வாதியைக் கிண்டலடிப்பது போன்ற வசனம் தொடர்பான வழக்கில் நடிகை ஐஸ்வர்யா, தயாரிப்பாளர் சரண், இயக்குனர் ஹரி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மூன்று பேரும் மார்ச் 15-ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று மாஜிஸ்திரேட் ராஜசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காங்கிரஸ் கட்சித் தலைவராக உள்ளவர் ராஜரத்தினம். இவர், எழும்பூர் 2-வது நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

<b>"ஆறு' படத்தில் நடிகை ஐஸ்வர்யா சவுண்ட் சரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் பொதுக் கூட்டத்தில் பேசுவது போன்ற ஒரு காட்சியில், "டேய் நீ மாவட்ட தலைவராடா இல்லை; மாவாட்டுர தலைவர்டா' என்று வசனம் பேசி நடித்துள்ளார்.</b>

இந்த வசனம் என்னைத் தாக்கி பேசுவது போன்று உள்ளது. ஏனெனில், இந்தப் படத்துக்கு காரைக்குடியைச் சேர்ந்த காங்கிரஸ் செயலர் கண்ணன் தான் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியுள்ளார்.

அவரின் தூண்டுதலின் பேரில் இந்த வசனம் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இது என் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது. எனவே நடிகை ஐஸ்வர்யா, இயக்குனர் ஹரி, தயாரிப்பாளர் சரண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ராஜசேகரன், மூன்று பேரும் மார்ச் 15-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

http://www.dinamani.com/Cinema/CineItems.a...itle=%F9Nn%A7Ls


- Sukumaran - 12-31-2005

அண்ணா..வன்முறை கூடிய திரைப்படம்.. அதில் நினைவில் நிற்கும் காட்சிகளில் அந்தக் காட்சியும் ஒன்று.. அரசியல் சார்ந்திருந்தாலும் [b]<span style='font-size:25pt;line-height:100%'>கொளாய்புட்டு அவிக்கத்தெரியாதவன் கொளாய்யிட்டு தண்ணி தருவானா </span> என்ற நகைச்சுவைக்காக அக்காட்சியை வெட்டாதிருந்தால் நன்று..


- RaMa - 12-31-2005

ஆகா இனி படம் எடுக்கும்போதும் கவனமாய் இருக்கணுமா? உந்த வசனங்களுக்காக கோர்ட்டுக்கு அழைப்பதை விட ஆசிங்கமான பாடல்களை எழுதுபவர்களையோ பாடுபவர்களையோ முதலில் அழைக்கலாமே?


- kirubans - 12-31-2005

எது எதுக்கெல்லாம் வழக்குப் போடுகின்றது என்று விவஸ்த்தை கிடயாது?? இதற்குள் மக்கள் படம் பார்த்து விழிப்படைந்துவிடுவார்கள் என்று நினைப்பு வேறு.


- vasisutha - 01-04-2006

<span style='color:orange'><b>''டேய், ராஜரத்தினம்! நீ மாவட்ட தலைவர் இல்லைடா...! மாவாட்டுற தலைவர்...!''</b>

சூர்யா ஹீரோவாக நடித்து ஓடிக் கொண்டிருக்கும் 'ஆறு' திரைப்படத்தில் இப்படியரு வசனம் வரும். அரசியல் மேடை சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில் 'சவுண்டு சரோஜா'வாக முழங்கும் நடிகை ஐஸ்வர்யா எடுத்துவிடும் இந்த வசனம்தான் இப்போது வில்லங்க விதையைத் தூவி விட்டிருக்கிறது.

''என்னுடைய அரசியல் எதிரிகள் என்னைக் கேவலப்படுத்துவதற்காகவே இந்த வசனத்தைப் படத்தில் சேர்க்க வைத் திருக்கிறார்கள். அந்த வசனத்தை நீக்க வேண்டும்'' என்று சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜரத்தினம் கோர்ட்டுக்குப் போயிருக்கிறார். அத்துடன் விவகாரம் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசனின் பஞ்சாயத்துக்கும் போயிருக்கிறது.

கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருக்கும் ராஜரத்தினம், கட்சியின் எம்.பியான சுதர்சன நாச்சியப்பனின் அதிதீவிர விசுவாசி. எல்லா இடங்களையும் போலவே இந்த மாவட்ட காங்கிரஸிலும் ஏகப்பட்ட கோஷ்டிகள் உண்டு.

இதில் 'காரைக்குடி நகர காங்கிரஸ்' செயலாளராக இருக்கும் கண்ணன், ஆரம்பத்திலிருந்தே ராஜரத்தினத்துக்கு எதிராகக் கொடிபிடித்து நிற்பவர்.

செட்டிநாட்டுப் பகுதியில் எடுக்கப்படும் திரைப்படங்கள் வெற்றி பெற்றுவிடுவதாக ஒரு சென்டிமென்ட் திரையுலகில் நிலவுவதால், கடந்த சில வருடங்களாகவே இப்பகுதியில் அதிக அளவில் ஷ¨ட்டிங் நடைபெற்று வருகிறது. இப்படி படமெடுக்கவரும் சினிமா கம்பெனிகளுக்கு வீடுகளை புக் பண்ணிக் கொடுப்பதிலிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பதில், கண்ணனும் ஒரு முக்கியமான நபர்.

<b>ராஜரத்தினம்</b>
<img src='http://img462.imageshack.us/img462/1410/raja8jr.png' border='0' alt='user posted image'>
<b>கண்ணன்</b>

டைரக்டர் ஹரியின் முதல் படமான 'சாமி'யிலிருந்து அவர் எடுத்த பல படங்களுக்கு லோக்கல் புரொடக்ஷன் மேனேஜராகப் பணியாற்றியிருக்கும் கண்ணன், ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டியும் உள்ளார். ஆறு' படம் சென்னையில் வைத்துப் படமாக்கப்பட்டபோதும் இந்தப் படத்தில் இரண்டொரு காட்சியில் நடிக்க, நட்புரீதியில் கண்ணனுக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் ஹரி. இதையெல்லாம் கூட்டிக் கழித்துதான் 'ஆறு' படத்தில் வரும் 'மாவாட்டுற தலைவர்' வசனம் விவகாரமாக வெடித்துள்ளது.

'அரசியல் பகையை மனதில் வைத்துக்கொண்டு கண்ணன்தான் இப்படியரு வசனத்தைப் படத்தில் சேர்க்க வைத்திருக்கிறார். அந்த வசனத்தை நீக்கச் செய்ய வேண்டும்' என்று மண்டல தணிக்கை அதி காரிக்கு கடந்த 22ம் தேதி மனு கொடுத்திருக்கிறார் ராஜரத்தினம்.

இதற்கு சரியான பதில் கிடைக்காத நிலையில்தான் இயக்குநர் ஹரி, தயாரிப்பாளர் சரண், நடிகை ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக சென்னை- எழும்பூர் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குத் தொடுத்துவிட்டார். சம்பந்தப்பட்ட மூவரையும் மார்ச் 15ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருக்கிறது கோர்ட்.

ராஜரத்தினத்தை நாம் சந்தித்தபோது, ''என்னை அசிங்கப்படுத்தணும் என்பதற்காகவே சம்பந்தமில்லாம அந்தக் காட்சியைப் படத்துல சேத்துருக்காங்க.

<b>'டேய், ராஜரத்தினம்! நீ மாவட்டத் தலைவர் இல்லைடா! மாவாட்டுற தலைவர்டா'னு சொன்னதோட நிக்கல... 'உன் தலைவனுக்குக் கொழாபுட்டே அவிக்கத் தெரியாது. அவன் எங்கடா கொழாய் போடப்போறான்'னு ஒரு வசனத்த பேச வச்சுருக்காங்க.</b>

சட்டமன்றத் தேர்தல்ல சிவகங்கை தொகுதியில போட்டியிடலாம்னு நான் முடிவு பண்ணி வச்சுருக்குற நேரத்துல, என்னைக் கேவலப்படுத்திவிடணும் என் பதற்காகவே இந்தக் காரியத்த செஞ்சுருக்காங்க.

நான் கோர்ட்டுக்குப் போகப் போறது தெரிசதும், டைரக்டர் ஹரி என்கிட்ட பேசினார். 'கண்ணனுக்கும் அந்த வசனத்துக்கும் சம்பந்தமில்லை. அது யதார்த்தமா அமைஞ்சது. ராஜரத்தினம்ங்கிறது எனது தாத்தாவோட பேரு'னு சப்பைக்கட்டுக் கட்டினார். தாத்தா பேரைத்தான் இப்படி கேவலமாப் பயன்படுத்தியிருக்கிறாரு போலிருக்கு ஹரி. கட்சிக்குள்ள இங்கிட்டும், அங்கிட்டும் சிண்டு மூட்டிவிட்டு குழப்பம் விளைவிக்கிறதுல கைதேர்ந்த ஆளு கண்ணன். இது தெரியாம இந்த விஷயத்துல சினிமாக்காரங்க சிக்கிக்கிட்டாங்க. கண்ணனை எல்லாம் வழக்குல சேத்து பெரியாளாக்கி விடவேண்டாமேனுதான் அந்தாளை கோர்ட்டுக்கு இழுக்கல'' என்றார் ராஜரத்தினம்.

இந்த வழக்கில் ராஜரத்தினத்துக்காக ஆஜராகும் வக்கீல்களில் ஒருவர் சுதர்சன நாச்சியப்பனின் மகன் ஜெயசிம்ம நாச்சியப்பன். அவரிடம் நாம் பேசிய போது, ''சர்ச்சைக்குரிய அந்த வசனங்களை நீக்கச் சொல்லி சென்ஸார் போர்டுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தனியாக ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்யவிருக்கிறோம்'' என்றார்.

இந்த விவகாரம் குறித்து விளக்கமறிய கண்ணனை காரைக்குடியிலுள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். ''ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஊழியர் கூட்டத் துக்காகத் தலைவர் ஜி.கே.வாசன் சிவகங்கை வந்திருந் தப்ப, 'ராஜரத்தினத்தின் செயல்பாடுகள் திருப்தியா இல்லை. அதனால மாவட்டத் தலைவர மாத்தணும்னு வெளிப்படையா நான் கருத்துச் சொன்னேன். அதுல இருந்தே அவருக்கு எம்மேல தீராத ஆத்திரம். அதுதான் இப்ப வெடிச்சுருக்கு.

ஹரி சாரைப் பொறுத்தவரை, அவர் எனக்கு நல்ல நண்பர். அதுக்காக நான் சொல்றதையெல்லாம் அவரு கேட்டுற மாட்டாரு. ஸ்கிரிப்ட் என்ன எழுதி வச்சுருக்காருனு அவரோட அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கே சொல்ல மாட்டாரு. நான் போட்டுருக்குற இந்த ஐயப்பன் மாலை சத்தியமா சொல்றேன், அந்த வசனத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ராஜரத்தினம் வழக்குப் போட்டுருக்காருனு தெரிஞ்சதும், இன்னைக்கி காலையில ஹரி சார் எங்கிட்ட பேசினார். 'உங்க ரெண்டு பேருக்கும் இருக்குற சண்டையில எங்கள ஏம்பா வம்புக்கிழுக்கிறீங்க?'னு வருத்தப்பட்டார். இதுவிஷயமா இரண்டொரு நாள்ல தலைவர் ஜி.கே.வாசனை சந்திச்சு விளக்கம் அளிக்கப் போறார் ஹரி'' என்றவர்,

''எது எப்படியோங்க... இந்த மேட்டர்ல சினிமா இண்டஸ்ட்ரி என்ன சொல்லுதோ அதைத்தான் நான் கேட்பேன். அவங்கதான் எனக்கு முக்கியம்'' என்றார் அழுத்தம் திருத்தமாக.


<b>'தமிழ்நாட்டில்தான் இத்தனை பிரச்னைகள்...'</b>

<i>சம்பந்தப்பட்ட படக் காட்சியில் நடித்த நடிகை ஐஸ்வர்யாவிடம் போனில் தொடர்புகொண்டு கேட்டபோது</i>,

<img src='http://img441.imageshack.us/img441/8715/aice5xk.png' border='0' alt='user posted image'>

''சமீபகாலமாக சினிமாவில் கற்பனையாக எடுக்கப்பட்டு வரும் காட்சியமைப்புகளை மையமாக வைத்துப் பிரச்னை செய்வது, கோர்ட்டுக்கு போவது என்பது அதிகமாகி இருக்கிறது. இப்படியரு நெருக்கடிகள் தமிழ்ப் பட இயக்குநர்களுக்குத் தொடர்ந்து ஏற்பட்டால், அவர்களுக்குப் பயம் அதிகமாகி அவர்களுடைய கற்பனை வளம் சுருங்கி விடும். அது தமிழ்த் திரைப்படத் துறைக்குத்தான் ஆபத்தான விஷயம்.

இந்த மாதிரி பிரச்னைகளெல்லாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. தெலுங்குப் படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்... அங்கே எத்தனை சுதந்திரமாகப் படமெடுக்கிறார்கள் பாருங்கள்... அரசியல்வாதிகளைக் கடுமையாக விமர்சித்துப் படமெடுக்கிறார்கள். பல தொழில் செய்பவர்களையும் கடுமையாகக் கிண்டல் செய்தும், விமர்சித்தும் படமாக்குகிறார்கள். மக்களும் ரசிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களும் ரசிக்கிறார்கள். சினிமாவை நிஜத்தோடு அவர்கள் ஒப்பிட்டுக் கொள்ளாததுதான் காரணம்.

'ஆறு' பட விவகாரம் தொடர்பாக கோர்ட்டில் இருந்து எங்கள் கைக்கு இன்னமும் சம்மன் வரவில்லை. கிடைத்த பிறகுதான் அடுத்தகட்டம் குறித்துத் தயாரிப்பாளர், டைரக்டர், எல்லோரிடமும் பேசி முடிவெடுப்போம்'' என்றார் விளக்கமாக.
</span>

vikatan.com


- வர்ணன் - 01-05-2006

<!--QuoteBegin-kirubans+-->QUOTE(kirubans)<!--QuoteEBegin-->எது எதுக்கெல்லாம் வழக்குப் போடுகின்றது என்று விவஸ்த்தை கிடயாது?? இதற்குள் மக்கள் படம் பார்த்து விழிப்படைந்துவிடுவார்கள் என்று நினைப்பு வேறு.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அண்ணா கொஞ்சம் அடக்கி வாசியுங்க.

கொஞ்சகாலம் இயக்கம் வெளியில போன உடனேயே..
நாங்கள் பட்ட கஷ்டம் எல்லாம் மறந்து அஜித்தின் தீனா பெயரில ஹாங்க் ...
சச்சின் படத்துக்கு டிக்கெட் எடுக்க சண்டை....

சண் ரிவி ல நாடகம் போற ரைம் சனத்தை ரோட்டில காணவில்லை எண்டும் கதை வருது...

நாங்களே எங்கட நிலமை தெரிஞ்சும் தெரியாம நாறுறம்.

அவர்கள் .. சுதந்திரத்துகான போரட்டத்தை செய்து 50 வருசத்துக்கு மேல போயிருக்கும் எண்டு நினைக்கிறன். நீங்கள் பாவிக்கும் சொல்லுகள் எங்களை நிறைய கேள்வி கேக்க வைக்கும் எண்டு பயபிடுறன். எங்களயும் கொஞ்சம் பாப்பமா? :roll: