Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என் ப்ரியமானவளே....
#6
------நண்பர் சிவாவின் வேண்டுகோளுக்கிணங்க இங்கு எழுதியது அகற்றப்பட்டுள்ளது...! இது தொடர்பில் களநிர்வாகத்திற்கு ஏதாவது அசெளகரியங்கள் எழுமானால் அதற்கும் மனம் வருந்துகிறோம்...----


இதோ நாம் அங்கு ரசித்த இன்னோர் அர்புதக் கவிதை இதே படத்துக்கு இன்னொருவர் எழுதி இருந்தார்....இதோ அது....

------------------------------------
என் பிரியமானவளே
காலை எழுந்ததும்
அருகிரு 'மடு'வோரம்
உந்தன் கோலம் காண
ஓடோடோடிப் போவேன்,
உன் 'பிறை' நெற்றி
'விற்' புருவம்
'கயல்' விழியோடு 'நிலா' முகம்
என்று அழகு கண்டு,
செவ்விதழ் பூவாகி
இனிய அருவி போல்
தேன் மொழி பேச
கேட்பதோர் ஆனந்தம் கொண்டேன்
காளை நானும்
உன்னையே காதலித்தேன்
காலம் காலமாய்....!

காலம் மாறியது
விஞ்ஞானம் என்று
ஏதேதோ வந்தது
அணுகுண்டும் பிறந்தது
கூட அமெரிக்க அமுக்க வெடியும் பிறந்தது...!
ஒரு காலை வேளையில்
F-16 போட்ட குண்டில்
நீ சிதைந்தாயே..!

ஐ.நா வில் கூட்டமாம்
இயற்கையவளே உன்னைப் பாதுக்காக்க
ஆனால்
ஏட்டிக்குப் போட்டியாய்
அடுக்கி வைத்துள்ளார்
ஏவுகணையும் அணுகுண்டும்
கணப்பொழுதில் உன்னை அழித்திடவே...!
என்ன மானிடர்
தாம் தவழும் மடியிலே
குழிதோண்டும் நிலையில்
என்று
தம் எதிர்காலச்சந்ததிக்காய் தெளிவரோ...!
இப்பேதையர்....!

Voice of love for Nature. (shysumi)

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by nalayiny - 12-16-2003, 07:57 PM
[No subject] - by shivadev - 12-16-2003, 09:14 PM
[No subject] - by shivadev - 12-19-2003, 02:40 PM
[No subject] - by kuruvikal - 12-19-2003, 03:05 PM
[No subject] - by shivadev - 12-20-2003, 01:06 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)