12-18-2003, 03:59 PM
வாழ்த்தி வரவேற்கும் நண்பர்களே நன்றிகள்.. உங்கள் ஆலோசனையின்படி யாழ் மேய்ச்சல் புலத்தினுள் சென்று மேய்ந்தேன். ம்.. விளைச்சல் பச்சைப்பசேலென்றேயிருக்கின்றது. அங்காங்கே சிலமிதிவெடிகளையும் தாண்டவேண்டியிருந்தது. என்றாலும் தரவை கொஞ்சம் உரப்பு. வெயில் மழை பனி குளிரில்தானே அதன் இருப்பு. எனவே இதனினுள் அது தாக்குப்பிடிக்கும்.

