12-29-2005, 01:24 AM
இராட்சத பலம் கொண்ட இரு கட்சிகள் அ.தி.மு.க - தி.மு.க என்பவை. நீண்டகால அரசியல் அனுபவத்தை கொண்டவை என்பது மட்டும் அல்ல கணிசமான வாக்காளர்களை எப்போதும் தம் பக்கம் வைத்திருக்கும் நிலையான வாக்கு வங்கிகளையும் கொண்டவை.
அப்படிபட்டவர்களே தேர்தல் என்ற ஒன்று வந்து இறுதி முடிவு அறிவிக்க படும் வரை வெற்றி தம் பக்கம் வேண்டி வேண்டாத தெய்வங்கள் இல்லை செய்யாத யாகங்களும் இல்லை.
என்னதான் வெளிபேச்சுக்கு நாங்கள் திராவிட பாரம்பரியம் கொண்டவர்கள் பெரியார் வழி வந்தவர்கள் என்று சொன்னாலும் உண்மை நிலை பெரும்பாலும் இதுவென்றே நினைக்கின்றேன்!
நிலமை இவ்வாறு இருக்க வெறும் ரசிகர் மன்ற உறுப்பினர்களை நம்பி "எனக்கு இவ்வளவு ரசிகர் மன்றங்கள் இருக்கின்றது" அவர்கள் என்னை முதல்வர் ஆக்கி பார்க்க ஆசை படுகிறார்கள்" வறுமைக்கு கண்ணி வெடி வைப்பேன் லஞ்சத்தை தூக்கி உள்ளே போடுவேன்" என்றெல்லாம் வாண வேடிக்கை காட்டும் விஜயகாந்தின் நடவடிக்கைகள் எந்தளவு தூரம் சாத்தியபாடானவையாக அமையபோகின்றன என்பதை அவரிடமே கேள்வியாக விட்டுவிடுவது நல்லது போல் தெரிகிறது!
ஐயா இத்தனை ஆயிரம் ரசிகர்மன்றம் இதனை இலட்சம் உறுப்பினர்கள் என்று முகட்டு வளையை பார்த்தபடி முகத்தை வைத்துகொண்டு கோட்டையை பிடிக்கும் கனவில் குறட்டை விடும் உங்களிடம் ஒரு கேள்வி நீங்கள் நம்பி இருக்கும் ரசிகர்கள் எல்லாம் கட்சி நீங்கள் ஆரம்பிக்குமுன் பாகிஸ்தானிலா இருந்தார்கள்?
ஏதோ ஒரு கட்சியில் இன்றுவரை இருக்கும் அவர்கள் எல்லோரும் ஒரே நாளில் உங்கள் பக்கம் ஓடி வருவார்கள் என்று நம்பியது எதை வைத்து?
அப்பிடியே அவர்கள் எல்லாரும் உங்கள் பக்கம் ஓடிவந்தாலும் முதல்வர் ஆக இன்னும் சிலலட்சம் வாக்குகள் நீங்கள் சேர்த்தே ஆகவேண்டி இருக்கும் வெளியில் இருந்து என்று நினைக்கிறேன்.
எது எப்படியோ அரசியல் சினிமா என்ற இருவட்டத்துக்குள் அகப்பட்ட வாழ்வை தவிர்த்து ஒரு மனிதனாய் அலைகடல் தாண்டி வந்து ஏதிலிகளாய் அகதி முகாம்களில் கிடந்து அல்லலுற்ற எம் இனத்துக்கு பலருள் ஒருவாராய் ஓடோடி வந்து நீங்கள் செய்த உதவிகளை எப்போதும் நன்றியோடு நினைவுகொள்வோம்! 8)

-!
!
!