Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தே.மு.தி.க தலைவருக்கு தர்மஅடி:விஜயகாந்த் தப்பி ஒட்டம்
#9
<b>ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே
விஜயகாந்த் வேன் மீது கல்வீசி தாக்குதல்
ஊருக்குள் வராததால் தொண்டர்கள் ஆத்திரம் </b>


ஸ்ரீவில்லிபுத்தூர், டிச.28-

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விஜயகாந்த் ஊருக்குள் வராததால் தொண்டர்கள் அவர் வந்த வேன் மீது கல் வீசினார்கள்.

<b>சுற்று பயணம்</b>

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 3-வது நாளாக சுற்று பயணம் செய்தார். ராஜ பாளையம் பகுதியில் சுற்று பயணத்தை முடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு 9.10 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்தார்.

அப்போது மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் ராமராஜ், மாவட்ட தலைவர் தாமோதரக்கண்ணன், மாவட்ட செயலாளர் வைரமுனி மற்றும் ஒன்றிய, மாவட்ட, நிர்வாகி கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இதனையத்து மாரியம்மன் கோவில் முன்பு விஜயகாந்த் பேசினார். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் ரோட்டில் உள்ள நூற் பாலை முன்பு வைத்து கட்சி நிர்வாகிகள் விஜயகாந்தக்கு வர வேற்பு கொடுத்தனர். அங்கு திறந்த வேனில் நின்றவாரே பேசினார்.

<span style='color:red'>பின்னர் அவர் மேலதொட்டிய பட்டி, பிள்ளையார்நத்தம் சென்று வத்திராயிருப்பு செல்வதாக இருந்தது. ஆனால் இரவு அதிக நேரம் ஆகி விட்டதால் மேல தொட்டியபட்டி, பிள்ளையார் நத்தம் செல்லாமல் வத்தி ராயிருப்பு செல்ல வேனை திருப் பினர். இதனால் ஆத்திரம் அடைந்த தொண்டர்கள் தலை வரே எங்க ஊருக்குள் வர வேண்டும், இல்லையென்றால் வேனை விடமாட்டோம் என ஆக்ரோஷமாக பேசி வேனை சுற்றி நின்று கொண்டனர்.

சிலர் வேனின் முன்பு படுத்து மறியல் செய்தனர். நேரம் ஆகி விட்டதால் வரமுடியவில்லை என்று விஜயகாந்த் கூறியும், அவர்கள் நகரவில்லை. இதனால் வேனை பின் நோக்கி நகர்த்தி வேனை வேகமாக எடுத்து சென்றனர்.

<b>கல்வீச்சு</b>

இதனால் ஆத்திரம் அடைந்த தொண்டர்கள் விஜயகாந்தின் கண் எதிரே கொடி கம்பங்கள், போஸ்டர்களை கிழித்து எரிந்தனர். மேலும் அங்கு கட்டப்பட்டு இருந்த 100க்கும் மேற்பட்ட டிïப் லைட்டுகளை அடித்து நொறுக்கினார்கள். விஜயகாந்தின் வேன் பின்னால் சரமாறியாக கற்களால் தாக்கினார்கள். இதற்கிடையில் விஜயகாந்தின் பின்னால் வந்த ஒன்றிய செயலாளர் ராஜா காரை பொது மக்கள் சுற்றி முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டனர். விஜய காந்த் வேன் மீது கல் வீசப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.</span>

தினத்தந்தி
Reply


Messages In This Thread
[No subject] - by Luckyluke - 12-28-2005, 01:25 PM
[No subject] - by Danklas - 12-28-2005, 01:44 PM
[No subject] - by Luckyluke - 12-28-2005, 01:47 PM
[No subject] - by rajathiraja - 12-28-2005, 01:49 PM
[No subject] - by Luckyluke - 12-28-2005, 01:54 PM
[No subject] - by Mathan - 12-28-2005, 11:02 PM
[No subject] - by Vasampu - 12-28-2005, 11:09 PM
[No subject] - by AJeevan - 12-28-2005, 11:27 PM
[No subject] - by SUNDHAL - 12-29-2005, 12:01 AM
[No subject] - by வர்ணன் - 12-29-2005, 01:24 AM
[No subject] - by Raguvaran - 12-29-2005, 02:10 AM
[No subject] - by தூயவன் - 12-29-2005, 04:31 AM
[No subject] - by rajathiraja - 12-29-2005, 04:55 AM
[No subject] - by rajathiraja - 12-29-2005, 04:58 AM
[No subject] - by rajathiraja - 12-29-2005, 05:08 AM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 12-29-2005, 05:11 AM
[No subject] - by rajathiraja - 12-29-2005, 05:24 AM
[No subject] - by வர்ணன் - 12-29-2005, 05:27 AM
[No subject] - by Luckyluke - 12-29-2005, 06:05 AM
[No subject] - by paandiyan - 12-29-2005, 10:12 AM
[No subject] - by Mathan - 12-29-2005, 10:21 AM
[No subject] - by Luckyluke - 12-29-2005, 10:25 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)