12-27-2005, 08:43 PM
ஜோசப் பரராஜசிங்கத்துக்கு மலர் வணக்கம் செலுத்தினார் தேசியத் தலைவர்
மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் உடலுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கிளிநொச்சியில் மலர் மாலைகள் அணிவித்து வணக்கம் செலுத்தினார்.
<img src='http://img412.imageshack.us/img412/2134/200512280012qu.jpg' border='0' alt='user posted image'>
கடந்த ஞாயிறு நத்தார் தின நள்ளிரவு ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் புகழுடல் தாங்கிய ஊர்தி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் கிளிநொச்சியை வந்தடைந்தது.
<img src='http://img412.imageshack.us/img412/4739/200512280046ph.jpg' border='0' alt='user posted image'>
கிளிநொச்சியில் உள்ள தூயவன் அரச அறிவியல் கல்லூரி மண்டபத்தில் வைக்கப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் உடலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைப்பொறுப்பாளர் சோ.தங்கன் புலிக்கொடியைப் போர்த்தினார்.
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட முக்கிய தளபதிகள், போராளிகள், பொறுப்பாளர்கள் தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
http://www.eelampage.com/?cn=22899