12-27-2005, 09:35 AM
பருத்தித்துறை கிளைமோர்த் தாக்குதலில் 10 படையினர் பலி
யாழ். பருத்தித்துறையில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். 2 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
யாழ். பருத்தித்துறை பேரூந்து பணிமனை அருகே கிளைமோர்த் தாக்குதலுக்கு சிறிலங்கா இராணுவ வானகம் இலக்கானது. இதில் சம்பவ இடத்திலேயே 10 படையினர் கொல்லப்பட்டனர். 7 படையினர் படுகாயமடைந்தனர். இவர்களில் மூவர் மிக ஆபத்தான நிலையில் பலாலி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலையடுத்து இராணுவம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
4 படையினரும் 2 பொதுமக்களும் பருத்தித்துறை மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலகதி சிறிலங்கா இராணுவத்தினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
புதினம்

" "