06-15-2003, 09:47 PM
இங்கு 3 விதமான Templeteகள் இணைக்கப்பட்டுள்ளன. பாமுனி பாவிக்கும் ஒருவர் எதுவித மாற்றங்களையும் செய்யாது கருத்துக்களை எழுதலாம். இதுவே மிகவும், இலகுவான வழிமுறை என்று நான் கருதுகின்றேன். ஆகையில் கூடியவரை பாமுனியினைப் பாவிக்க முயற்சியுங்கள். அடுத்ததாக Bamini2unicode என்றொரு template உள்ளது. பாமுனி பாவிக்காதவர்கள், பாமினி போன்ற எழுத்துருக்களில் எழுதி பரீட்சயம் உள்ளவர்கள் இதனை profile என்பதில் சென்று மாற்றிவிட்டு எழுதலாம். இங்கு எழுதுவதற்கு இரண்டு பெட்டிகள் உள்ளன. வலது பக்கத்தில் உள்ள பெட்டியில் நீங்கள் எழுதும்போது இடதுபக்க பெட்டியில் உடனுக்குடன் யுனிகோட் எழுத்துரு அமைப்புக்கு மாறுவதைக் காணலாம். இதனைப் பாவிப்பவர்கள் மிகவும் கவனத்துடன் இருத்தல் வேண்டும். ஒரு சிறு தவறு நீங்கள் எழுதிய கருத்தினை முற்றாக இல்லாது செய்துவிடும். அதாவது நீங்கள் வலது பக்கத்தில் உள்ளபெட்டியில் எதாவது எழுதிவிட்டு பின்னர் இடது பக்கத்தில் உள்ள பெட்டியில் ஒரு மாற்றத்தைச் செய்துவிட்டு மீண்டும் வலது பக்க பெட்டியில் எதாவது எழுதினால் இடது பக்கத்தில் உள்ள பெட்டியில் நீங்கள் செய்த மாற்றம் இல்லாது போய்விடும். அடுத்து இவ்வாறு Bamini2unicode பாவிப்பவர்கள் தலையங்கங்களை எழுதுவதற்கும் வலது பக்க பெட்டியில் எழுதியபின்னர் இடது பக்கப்பெட்டியில் மாறியுள்ளதை copy செய்து தலையங்கத்திற்குரிய இடத்தில் paste செய்தல் வேண்டும்.
ஆங்கில உச்சரிப்பு முறையில் எழுதுபவர்கள் English2unicode எனும் template இனைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். மேலே Bamini2unicode ற்கு குறிப்பிட்ட விளக்கம் இதற்கும் பொருந்தும் என்பதால் அதனைப் பார்க்கவும்.
ஆங்கில உச்சரிப்பு முறையில் எழுதுபவர்கள் English2unicode எனும் template இனைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். மேலே Bamini2unicode ற்கு குறிப்பிட்ட விளக்கம் இதற்கும் பொருந்தும் என்பதால் அதனைப் பார்க்கவும்.

