12-26-2005, 12:34 PM
உரும்பிராய் மண் உலகப்புகழ்பெற்றது என்பது பரும் அறிந்ததே. விடுதலைப்போராட்டத்திற்கு வித்திட்ட சிவகுமாரன், தியாகி திலீபன் இருவரும் தமது ஆரம்பக்கல்வியை உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் கற்றார்கள். சிவகுமாரனின் தந்தையார் திரு பொன்னுத்துரை அவர்கள் அப்பாடசாலையிலே பலவருடங்கள் தலைமை ஆசிரியராகவும், தியாகி திலீபனின் தந்தையார் திரு இராசையா அவர்கள் அங்கே ஆசிரியராகவும் பல வருடங்கள் பணியாற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தியாகி திலீபன் ஊரெளுவிலே பிறந்து வாழ்ந்திருந்தாலும் அவருடை தாயார் உரும்பிராய் மண்ணிலேதான் பிறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களைப்போல் பல பெரியார்களைப்பெற்ற மண்ணில் இயங்கும் பாடசாலைகளின் சங்கமான உரும்பிராய் இந்துக்கல்லு}ரி பழைய மாணவர் சங்கத்தின் பொங்கல்விழா சிறப்புடன் நிகழ எனது வாழ்த்துக்கள்.
(சென்ற வருடம் நிகழ்ந்த ஆழிப்பேரலை அனர்த்தங்களினால் சென்ற வருட பொங்கல்விழா ரத்துச்செய்யப்பட்டது என்றும் அறிந்தேன்)