Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உலகமெங்கும் அஞ்சலி!
#1
உலகமெங்கும் அஞ்சலி!


உலகமெங்கும் அஞ்சலி! உறவினர்க்கு அஞ்சலி!
ஒருவருடம் ஆனபின்பும் உறங்கிடாத அஞ்சலி!
அலையெழுந்து பொங்கியே அழிவுதந்த நாட்களை
அழுதகண் சிவக்க நாம், நினைவுகூரும் அஞ்சலி!!

ஆழிகொண்ட வேட்கையும் ஆடிநின்ற வேட்டையும்
அல்லலுற்ற கொடுமையும் அதிரவைத்த வெறுமையும்
ஊழிக்காற்று போல்,கடல் ஊரைமேய்ந்த காட்சியும்
உள(ம்)நடுங்க எண்ணி நாம், உருகுகின்ற அஞ்சலி!

மனையிழந்த கணவரும் துணையிழந்த மாதரும்
மறுகிநின்ற துயர்தனை மனதிலேந்தும் அஞ்சலி!
வினையிழந்த பிறவியாய் வேதனைக்குள் வாடியோர்
விழிநனைந்த ஞாபகம் விரிந்துதோன்றும் அஞ்சலி!

ஆண்டுஒன்று ஆயினும், நேற்றுபோலத் தோன்றுதே..
ஆழிசெய்த தாண்டவம் அகலவில்லை நினைவிலே..
வேண்டுகின்ற பொழுதெலாம் அமைதியான அழுகையே..
விழிசுரந்த நிலையிலே யாம்நடத்தும் தொழுகையே..

மறைந்துவிட்ட போதிலும் மறந்துகொள்ள முடியுமோ?
மாபெரும் இழப்புதான் மனதைவிட்டு மறையுமோ?
மறைந்த தமிழ்ச் சோதரர், நமது ரத்தம் அல்லவோ?
மாசிலாத உயிர்ப்பலி கொடியசோகம் அல்லவோ?

இயற்கைகொண்ட சீற்றமென்(று) இலக்கியங்கள் கூறினும்,
இழந்துநாங்கள் நிற்ப(து) எம் உறவுச்செல்வம் அல்லவோ?
இரக்கமற்ற இதயமோ இயற்கைபெற்ற(து) என்பதோ!
இயக்கமற்றுச் சோர்ந்த(து) எம் இனியகுலம் அல்லவோ?..

கத்துகடல் பேரலை தந்தகாயம் ஆறலை:
கலங்கிநின்ற உயிர்களுக்(கு) ஆறுதலும் வேறிலை:
இத்தருணம் அவர்களுக்(கு) யாம்செலுத்தும் அஞ்சலி
எத்தனைநாள் ஒத்தடம் என்றுகூடத் தெரியலை

சென்றுவிட்ட உறவுகாள்! சென்றதெங்கு? சொல்மினோ!
திரும்பிவருவ(து) எந்தநாள்? காத்திருப்போம், அறிமினோ!
ஒன்றுபட்ட தமிழினம் வழங்குகின்ற அஞ்சலி!
உலகமெங்கும் அஞ்சலி! உங்களுக்(கு)எம் அஞ்சலி!!

<b>தொ. சூசைமிக்கேல்</b> ( tsmina2000@yahoo.com )


<img src='http://www.bloomingroses.com/bloom_rose_images/sympathy_funeral/symp09.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.bloomingroses.com/bloom_rose_images/sympathy_funeral/symp09.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.bloomingroses.com/bloom_rose_images/sympathy_funeral/symp09.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
உலகமெங்கும் அஞ்சலி! - by hari - 12-26-2005, 03:25 AM
[No subject] - by Rasikai - 12-26-2005, 04:44 AM
[No subject] - by Mathan - 12-26-2005, 05:34 AM
[No subject] - by MUGATHTHAR - 12-26-2005, 05:45 AM
[No subject] - by tamilini - 12-26-2005, 12:33 PM
[No subject] - by Vishnu - 12-26-2005, 12:35 PM
[No subject] - by Selvamuthu - 12-26-2005, 12:43 PM
[No subject] - by ப்ரியசகி - 12-26-2005, 12:51 PM
[No subject] - by jeya - 12-26-2005, 03:56 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)