12-25-2005, 06:11 PM
பொதுவாகவே கதாநாயகியாக நடிப்பவர்கள் திருமணமானதும் மாக்கெட் போய் அக்கா அண்ணி வேடங்களுக்குப் போய் விடுவார்கள். ஆனால் தமது திருமணத்தின் பின்பாகவே திரையுலகில் நுழைந்து தமது திறைமைகளாலேயே நீண்ட காலமாகவே நிலைத்தவர்கள் இருவர். ஒருவர் பானுமதி மற்றவர் சௌகார்ஜானகி. திரையுலகில் பல சாதனைகள் படைத்த பானுமதி அவர்களின் இழப்பு உண்மையில் தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்புத்தான். அன்னாரின் இழப்பால் துயறுற்றிருக்கும் அவரின் குடும்பத்தாருக்கு எமது அஞ்சலிகளையும் சமர்ப்பிக்கின்றோம்.

