Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடிகை பானுமதி மரணம்
#1
நடிகை பானுமதி மரணம்


சென்னை, டிச.25-

பழம் பெரும் நடிகை பானுமதி நேற்று நள்ளிரவில் சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80.

பானுமதி

தமிழ் திரை உலகின் முடிசூடா கதாநாயகியாக திகழ்ந்தவர் நடிகை பானுமதி. எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆருடன் நாடோடி மன்னன், சிவாஜியுடன் அம்பிகாபதி போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

சில படங்களை சொந்தமாக டைரக்டு செய்து உள்ளார். சொந்தக் குரலிலும் பாடி இருக்கிறார். சினிமாத் துறையில் 1943-ஆம் ஆண்டு காலடி எடுத்து வைத்தார்.

சர்க்கரை நோய்

நடிகை பானுமதி சர்க்கரை நோயினால் அவதிப்பட்டு வந்தார். இறுதி காலத்தில் நடக்க முடியாமல் கஷ்டப்பட்டார்.

அவருடைய ஒரே மகன் பரணி. இவர் சாலிக்கிராமத்தில் பரணி ஆஸ்பத்திரி என்ற பெயரில் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இது ஒரு காலத்தில் பரணி ஸ்டூடியோவாக இருந்தது.

சென்னை தியாகராயநகர் வைத்தியராமன் தெருவில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.

நேற்று அவரது உடல் நிலை மோசமடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று நள்ளிரவில் மரணம் அடைந்தார்.

பத்மஸ்ரீ

100 படங்களுக்கு மேல் அவர் நடித்துள்ளார். நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் பானுமதி என்று பேரறிஞர் அண்ணாவால் பாராட்டு பெற்றவர். பத்மஸ்ரீ, கலைமாமணி உள்பட பல்வேறு பட்டங்களை பெற்று உள்ளார்.

தமிழ்நாடு இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி உள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடக்கிறது.
Reply


Messages In This Thread
நடிகை பானுமதி மரணம் - by aathipan - 12-25-2005, 04:39 AM
[No subject] - by கீதா - 12-25-2005, 02:30 PM
[No subject] - by Selvamuthu - 12-25-2005, 02:49 PM
[No subject] - by Rasikai - 12-25-2005, 03:19 PM
[No subject] - by vasisutha - 12-25-2005, 03:40 PM
[No subject] - by Mathuran - 12-25-2005, 05:19 PM
[No subject] - by Vasampu - 12-25-2005, 06:11 PM
[No subject] - by ப்ரியசகி - 12-25-2005, 07:17 PM
[No subject] - by Selvamuthu - 12-25-2005, 09:19 PM
[No subject] - by வியாசன் - 12-25-2005, 09:29 PM
[No subject] - by Selvamuthu - 12-25-2005, 09:47 PM
[No subject] - by Vasampu - 12-25-2005, 11:24 PM
[No subject] - by AJeevan - 12-25-2005, 11:28 PM
[No subject] - by Selvamuthu - 12-25-2005, 11:30 PM
[No subject] - by Rasikai - 12-26-2005, 05:18 AM
[No subject] - by MUGATHTHAR - 12-26-2005, 05:37 AM
[No subject] - by Vasampu - 12-26-2005, 06:12 AM
[No subject] - by MUGATHTHAR - 12-26-2005, 06:22 AM
[No subject] - by Vishnu - 12-26-2005, 12:33 PM
[No subject] - by aathipan - 12-26-2005, 01:00 PM
[No subject] - by AJeevan - 12-28-2005, 08:05 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)